போய் என் சீஷர்களுக்குச் சொல்லுங்கள் 53-0405S 1.உண்மையாகவே இந்த அதிகாலையில் தேவனுடைய வீட்டிற்கு வந்து, நம்முடைய உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாகிய நம்முடைய கர்த்தரை ஆராதிப்பது என்பது ஒரு சிலாக்கியமாகவே உள்ளது. ஓ,…சற்று முன் நான் உள்ளே வந்தேன். கடந்த இரவு நமக்கு ஒரு அற்புதமான ஊழியர் கூட்டம் இருந்தது, திரளான கூட்டம், உண்மையாகவே நள்ளிரவு மட்டுமாய் நன்றாய் பிரசங்கித்தேன். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஆராதிக்க இந்த காலையில் வந்துள்ளோம். சந்திக்கும்படியாய் ஒன்று சேர்ந்து வருவது எவ்வளவு அற்புதமாய் உள்ளது! 2 சகோதரன் தாம் (Thom) கூறிக்கொண்டு இருந்தது போல, அவர் யாரென்று அவர் நிரூபித்தது இன்றைய தினத்தன்றுதான். யார் வேண்டுமானாலும் மரிக்கலாம். ஆனால் மீண்டும் உயிரோடு எழும்புவதென்றால் அது தேவனால்தான் ஆகும். அவருடைய ஜீவியத்தில் அவர் தேவனைப் போன்று காணப்பட்டார். அவர் தேவனைப் போன்று பிரசங்கித்தார், அவர் தேவனைப் போன்று சுகப்படுத்தினார், அவர் தேவனைப் போன்று நடந்து கொண்டார். அவர் தேவனாய் இருந்தார். ஈஸ்டர் காலையன்று அவர் தேவனாய் இருந்தார் என்பதை அவர் நிரூபித்தார். அவர் ஒரு மனிதனை காட்டிலும் மேலானவராய் இருந்தார். அவர் ஒரு தீர்க்கதரிசியல்ல, இருந்த போதிலும் அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தார். அவர் ஒரு நல்ல மனிதனாய் இருந்தார். ஆனால் இருந்தபோதிலும் அவர் ஒரு நல்ல மனிதனைக் காட்டிலும் மேலானவராய் இருந்தார். அவர் தேவனாய் இருந்தார். எனவே இது அவர் அதை நிரூபித்த அவருடைய உயிர்த்தெழுதலின் நினைவுகூறும் நாளாய் உள்ளது. 3 இன்று காலையில் நாம் ஒரு பிரயாணமாக கங்கை நதி ஓரமாக தொடர்ந்து போக வேண்டும். தாய்மார்கள் அவர்களுடைய சிறு குழந்தைகளை பெரிய முதலைகளுக்கு தியாக பலியாய் தூக்கி அவர்களை எறிவதை நீங்கள் அங்கே காணலாம். நீங்கள் உத்தமத்தைக் குறித்துப் பேசுகிறீர்களா? அவர்கள் தங்களுடைய சிறிய கொழுமையான பிள்ளைகளை அங்கே முதலைகள் நசுக்கும்படியாக அவர்களை தூக்கி எறிகிறார்கள். அது ஆழமான உத்தமம். 4 நாம் இந்தியாவினூடாகச் சென்றால், இன்றைக்கு நீங்கள் வீதிகளின் ஓரங்களில் நெடுக ஜனங்கள் ஆணிகளின் மேல் படுத்துக்கிடப்பதையும், அக்கினியினூடாக நடப்பதையும், ஏதாவது ஒரு விதத்தில் அவர்கள் தங்களையே வேதனைப்படுத்திக் கொள்வதையும் காணலாம். அவர்களில் சிலர் உண்மையாகவே கோமாளித்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அது சுற்றுலா வருகிறவர்களுக்காகவே. ஆனால் அங்கே தீவுகளில் உண்மையான மனிதன் அவ்விதமாக அங்கே பின்னாக படுத்துக்கொண்டும், தன்னையே வருத்திக் கொண்டும், அவன் இளைப்பாறுதலையும், சமாதானத்தையும் முகம்மது நபியிடம் ஜெபித்து—ஜெபித்து கண்டடைய முடியும் என்று நினைக்கிறான். 5 அன்றொரு நாள் கொல்கத்தாவிற்கு போய்க் கொண்டிருக்கையில், இன்னுஞ் சரியாகக் கூறினால், எருசலேம் பட்டணத்திற்குப் புறம்பாக ஒரு பரிதாபமான காட்சி, சரியாக சிலுவையில் அறையப்பட்ட அதே இடத்தில், ஒரு முகமதிய கல்லறையின் முற்றத்தில் அவள் வைத்திருந்ததான ஒரு கட்டு காட்டுச்செடிகளின் கீழே ஒரு துண்டு பழைய கறுப்பு ரொட்டியுடன் அவள் அங்கே கிடத்தப்பட்டிருந்தாள். அவள் அங்கே அநேக நாட்களாக படுத்துக்கிடந்து, அவளுக்குப் பிரியமாயிருந்து கடந்து போனவருடைய ஆத்துமாவிற்காக அழுதுகொண்டிருந்தாள்; சரியாக சிலுவை நின்ற அதே இடத்தில் இருந்தாள். எனவே காண்பதற்கு உலகம் எவ்வளவு அதனுடைய அஞ்ஞான நிலையில் இருக்கிறது! 6 சீனாவிலிருந்து திரும்பி வந்த சகோதரன் கேடஸ் (Gadus) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர், “சகோதரன் பிரான்ஹாம் சீனாவிலே பார்ப்பதற்கு அது ஒரு பரிதாபமான காட்சியாயிருந்தது” என்றார். தொடர்ந்து, “அவர்களில் சிலர் ஒருக்கால் ஒரே நேரத்தில் நாற்பது வருடங்களாக அவர்களுடைய கரங்களை உயர்த்திக்கொண்டேயிருக்க, அவர்களுடைய நகங்கள் அவர்களுடைய கைகளின் ஊடாகவே வளர்ந்து கொண்டுபோய் பின்பக்கமாக துருத்திக் கொண்டு வரலாம். ‘மத்தான புத்தரே, நீர் என் ஆத்துமாவிற்கு சமாதானத்தைக் கொடுக்கும் வரை நான் என் கரத்தை ஒருபோதும் அசைக்கவே மாட்டேன்’ என்று கூறுகிறார்கள்” என்றார். 7 பின்னர், சிறுபிள்ளைகளில் அநேகர், அவர்கள் வாலிபமாய் இருக்கும்பொழுது, அவர்கள் அவர்களுடைய பாதத்தின் வளைவில் இந்தவிதமாய், உடைத்துக்கொண்டு சுமார் இரண்டு அல்லது மூன்று அங்குல காலணியை மட்டுமே, தங்களுடைய ஜீவிய காலமெல்லாம் அணிகிறார்கள். சிறிய குட்டையான பாதம், ஏனென்றால் அவர்கள் ஏதோ அஞ்ஞான தேவனுக்கு தியாகபலி செலுத்திக் கொண்டிருக்கிறார்களாம். 8 ஒரு மார்க்கத்தை ஸ்தாபித்தவர்களுடைய கல்லறைகள் எல்லாவற்றிற்கும் பெரும்பாலும் நான் விஜயம் செய்திருக்கிறேன். முகம்மது, புத்தர், கம்பூசியஸ் மற்றும் அநேக தத்துவஞானிகளின் கல்லறைகளுக்கும் கூட விஜயம் செய்திருக்கிறேன். 9 ஆனால், இன்றைக்கு எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்தவ ஜனங்களாகிய நம்மால் தலைகளை பின்னாகத் தள்ளி, “அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார், கிறிஸ்து இயேசு இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவர் ஜீவிக்கிறார் என்று எப்படி நான் அறிவேன் என்று நீங்கள் என்னை கேட்கலாம்; அவர் என் இருதயத்தில் ஜீவிக்கிறார்” என்று பாடமுடியும். இன்றைக்கு நமக்கு ஒரு காலியான கல்லறை உண்டு 10 சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் அதிகாலையில் நான் என் சிறுபையனின் கடந்துபோன தாயாருக்கும், அவளுடைய கரங்களின் மேலிருந்த அவனுடைய சிறிய சகோதரிக்கும் கல்லறையின் மேல் ஒரு மலரை வைக்கும்படியாக வால்நட் ரிட்ஜ் (walnut Ridge) கல்லறை மைதானத்திலிருந்து கல்லறைக்கு போய்க் கொண்டிருந்தேன். ஒரு சிறிய பூங்குவளையை கொண்டு போய்க்கொண்டிருக்கையில், அவன் இரண்டு அல்லது மூன்று முறை அழுது, அந்த சிறுவன் வாயடைத்துக் கொண்டான். நாங்கள் அங்கே முழங்காற்படியிட்டு, எங்களுடைய தொப்பிகளை கழற்றி, அவைகளை கல்லறையின் மேல், கல்லறையின் பக்கமாக வைத்தோம். நான் என்னுடைய கரத்தை உயர்த்தி, என்னுடைய புயங்களை அவனைச் சுற்றிப் போட்டுக் கொண்டேன். 11 நான், “பில்லி உன்னுடைய தாயாரும், சிறிய சகோதரியும் அங்கே இருக்கிறார்கள். அவர்களுடைய சரீரங்கள் இங்கே அடியில் இருக்கின்றன. அவர்களுடைய ஆத்துமாக்கள் தேவனுடைய சமூகத்தில் இருக்கின்றன. ஆனால் கடலுக்கு அப்பால், அக்கரையிலே, இன்றைக்கு காலியாயுள்ள ஒரு கல்லறை இருக்கிறது. அதுவே எல்லா கிறிஸ்தவர்களுக்கும் ஒரு நினைவுச்சின்னமாய் இருக்கிறது. அவர் ஜீவிக்கிறார்” என்றேன். அவர் ஜீவிக்கிறார். அதுவே இன்றைக்கு இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்று நம்முடைய கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை அஸ்திபாரமாய் உள்ளது. 12 இப்பொழுது, காகிதத்தில் எழுதப்பட்டிருக்கிற வண்ணமாக…இப்பொழுது, நம்முடைய ஈஸ்டர் சூரியோதய ஆராதனையில், நாம் வழக்கமாக ஒரு—ஒரு பாடலை அல்லது இரண்டை பெரும்பாலான நேரங்களில் இங்கே இந்த கூடாரத்தில் ஒழுங்காக வைத்திருக்கிறோம். நம்மோடு இங்கே யாராவது புதிதாய் வந்திருப்பார்களேயானால் நல்லது, இங்கே எங்களுடைய பெருவாரியான நேரம் வார்த்தையின் மேல் இருக்கிறது. நாம் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும்படியான மகத்தான ஜனங்களாக இருக்கிறோம். அடிப்படியாகவே அதுதான் பாதையாகவும், சரியான ஸ்தானமாயும் உள்ளது என்று நான் கருதுகிறேன். இன்றைக்கு நான் சில முக்கியமான காரியங்களை வைத்திருக்கிறேன். நான் உயிர்த்தெழுதலைக் குறித்தும், சில அடிப்படியான காரியங்களைக் குறித்தும் பேச விரும்புகிறேன். நான் தொடர்ந்து பேசுகையில், நானே சில காரியங்களைக் குறித்து வைக்க விரும்புகிறேன். 13 முதலாவதாக, நாம் இங்கே வேத வார்த்தைகளில் மத்தேயு 24-ம் அதிகாரம் இல்லை 22-ம் அதிகாரத்திற்கு நாம் திருப்பி, சரியாகக் கூறினால் 41-ம் வசனத்திலிருந்து துவங்குவோமாக. நான் ஒரு மூலபாட வேத வார்த்தையை வாசித்து, பின்னர் உயிர்த்தெழுதலுக்குள் செல்ல விரும்புகிறேன். இந்த காலை ஆராதனையில் என்னுடைய பேசும் பொருளை, அதை இங்கே பொருத்துகிறேன். “பரிசேயர்கள் கூடியிருக்கையில்…” நான் உங்களுடைய மன்னிப்பை வேண்டுகிறேன். என்னுடைய பேசும் பொருளை வாசிப்பதில் நான்—நான் தவறான இடத்தை திருப்பி விட்டேன். அது—அது மத்தேயு 23-ம் அதிகாரமாய் இருந்தது என நான் நினைக்கிறேன்…அப்படியே ஒரு நிமிடம். நான் வருந்துகிறேன், கடந்த இரவு நான் காலங் கடந்து வந்து என்னுடைய மூல பாடத்தை இன்று காலை வரையில் எங்கிருந்து என்னுடைய வேத வாசிப்பை கண்டு பிடிப்பது என்பதை முடிவு செய்யாலமேயே இருந்து விட்டேன். ஓ, ஆம் …நான் அவர்களை கலிலேயாவில் சந்திப்பேன் என்று போய் என்னுடைய சீஷருக்குச் சொல்லுங்கள்… 14 சரி, ஐயா. இப்பொழுது தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இந்த ஏழை ஸ்திரீகளுக்கு இங்கே ஒரு கட்டளை கொடுத்தார். அது அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் அவர்—அவர்…என்ன செய்வதாக இருந்தார் என்பதேயாகும். அவர்களை கலிலேயாவில் அவர் சந்திக்கப் போவதாக இருந்ததை அவர் அவர்களிடத்தில் கூறவேண்டியவராய் இருந்தார். அங்கே அவர்களுக்கு அவர்—அவர் காட்சி அளிப்பார் என்றும், அவர் அவர்களுடன் என்றென்றைக்குமாய் இருப்பார் என்றும் அவர் அவர்களுக்கு வாக்களித்திருந்தார். 15 இப்பொழுது மத்தேயும் 28-ம் அதிகாரத்தில், சரியாகக் கூறினால் 7-ம் வசனம் முதல் நாம் வாசிப்போம். சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்: இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். 16 அது ஸ்திரீகளுக்கும், மரியாளுக்கும்…இரண்டு மரியாளுக்கும் கொடுக்கப்பட்ட தூதனுடைய செய்தியாயிருந்தது. அது ஒரு…முதலாவது ஈஸ்டர் காலையன்று ஒலிக்கப்பட்ட மகிமையான செய்தியாயிருந்தது. 17 அவர் இந்தப் பூமியின் மேல் ஜீவித்தபோது, அவர் ஒரு மனிதனைப் போன்று நடந்தார். அவர் ஒரு மனிதனைப் போன்று காணப்பட்டார். அவர் தன்னுடைய எல்லா—ஒரு மனிதனைப் போன்றே தன்னுடைய வெளித்தோற்றத்தை உடையவராய் இருந்தார்; இருந்தபோதிலும், உள்ளாக, அவர் ஒரு மனிதவர்க்கத்தைக் காட்டிலும் மேலானவராக இருந்தார். அவர் இம்மானுவேலாய் இருந்தார். இன்றைய தினம் இதுவரை உலகம் முழுவதிலும் சம்பவித்திராத மகத்தான சம்பவத்தின் ஞாபகார்த்தமாய் இருக்கிறது. கிறிஸ்து இயேசுவாகிய இந்த மனிதனுக்குப் புறம்பாக ஒரு மனிதனும் இருந்ததேயில்லை, அவர், “என் ஜீவனைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு” என்றார். 18 கன்பூஷியஸ், ஆம், முகம்மது மற்றும் புத்தர் மற்றவர்களால் அநேகர் மகத்தான தத்துவஞானிகளாய் இருந்தனர்; ஆனால் அவர்கள் மரித்தபோதோ அது காரியத்தை முடிவுறச் செய்துவிட்டது. அவர்கள் என்றென்றைக்குமாய் முடிவுக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் அவர்களை புதைத்தனர், அது…அது அதை முடித்தது. 19 ஆனால் இந்த மனிதனோ தன் ஜீவனைக் கொடுக்கவும், அதை மீண்டுமாய் எழுப்பவுங்கூடிய ஒரே நபராய் இருந்தார். அதை உடைய ஒரே ஒருவராய் இருந்து, அவரால் அதைச் செய்ய முடிந்தது என்று நிரூபித்திருக்கிறார். 20 இப்பொழுது, காலங்களினூடாக மனிதனின் பயமாக இருந்து வந்தது மரணமே. இந்த உலகத்திற்குள் வந்த ஒவ்வொரு மனிதனும் எப்பொழுதும் மரணத்திற்குப் பயந்திருந்தான். மகத்தானவர்கள்…நமக்கு நெப்போலியன்கள் இருந்தனர், நமக்கு ஹிட்லர்கள் இருந்தனர் மற்றும் ஒவ்வொரு காரியமும் இருந்தது; ஆனால் அது மரணத்தின் நேரத்திற்கு வரும்பொழுது, அவர்கள் ஒவ்வொருவரும் சுருங்கிப் போகிறார்கள். மனிதன் பெரிய தேவ தூஷணமான காரியங்களை பெருமையாகப் பேசுகின்றதை நான் கேட்டிருக்கிறேன்; ஆனால் மரணத்தண்டனை வரும்பொழுது, அவர்கள் ஒவ்வொருவருமே சுருங்குகின்றனர். 21 பாப் இங்கர்சாலைப் (Bob Ingersoll) போல பெரிய புகழ்வாய்ந்த நாத்திகன், அவன் தன்னுடைய கைக்கடிகாரத்தை எடுத்து, அதை அவனுடைய கூட்டத்தாரிடம் பிடித்து, “தேவன் ஒருவர் உண்டென்றால், இந்த கடிகாரத்தின் டிக் சத்தத்திலிருந்து ஒரு நிமிடத்தில் நான் மரித்துப்போவேன்” என்றானாம். அப்பொழுது அந்த நிமிடம் கடந்த பிறகும், அவர் மரிக்கவே இல்லையாம். உடனே அவன் பெரிதாய், “ஹா, ஹா” என்ற வார்த்தையைக் கூறிவிட்டு, “நீங்கள் பாருங்கள், தேவன் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை” என்றானாம். ஆனால்… 22 நிச்சயமாக, அது வேத வார்த்தை நிறைவேறுவதற்காக மாத்திரமே இருந்தது. வேதம், “கடைசிநாட்களில் பரியாசக்காரர்கள் வருவார்கள்” என்று கூறியுள்ளது. நாம் அவர்களை உடையவர்களாயிருக்கிறோம். 23 எனவே அவன், “இப்பொழுது பாருங்கள், தேவன் என்ற அப்படிப்பட்ட காரியமே இல்லை” என்றானாம். ஆனால் மருத்துவமனை அறையில் அவன் மரித்துக் கொண்டிருக்கும்பொழுது, என்ன சம்பவிக்கும் என்று காணும்படியாக அநேகர் அங்கே கூடிவந்திருந்தனராம். அப்பொழுது அவன், “ஓ, தேவனே, என்னுடைய ஆத்துமாவின் மேல் இரக்கமாயிரும்” என்று சத்தமிட்டானாம். 24 என்னுடைய தகப்பனார் ஒரு கீர்த்தி வாய்ந்த நாத்திகனுக்கு நெருங்கிய நண்பனாய் அல்ல, இல்லை…சரியாகக் கூறினால், ஒரு தனிப்பட்ட முறையில் மிகவும் நெருங்கிய நண்பனாய் இருந்தார். அவன், “தேவன் என்ற அப்படிப்பட்டதொரு காரியமே கிடையாது” என்றானாம். அவன் தேவனுடைய கருத்துக்களையே மிகவும் சபித்தானாம். அவனுடைய மனைவியோ ஒற்றைக் குதிரை வண்டியில் சபைக்குச் செல்வாளாம். அவனோ ஞாயிற்றுக் கிழமையில் தன்னுடைய சோள வயலை உழுது, ஒவ்வொரு காரியத்திலும் தேவன் என்ற அப்படியொரு காரியமே இல்லை என்று காட்டும்படி செய்வானாம். 25 ஒருநாள், அப்பொழுதுதான் அவன் அவனுடைய கோதுமையை விதைத்திருந்தானாம். அதுவோ முழுவதும் நாசமாய் போயிற்று; மின்னல்கள் அதைத் தாக்கி அதை எரித்துப் போட்டது. அவன் அங்கே வெளியே சென்று, தன்னுடைய கரங்களை உயர்த்தி, உண்மையான தேவனுடைய கருத்துக்களை சபித்தான். அவன் அதை செய்தபோது, அப்பொழுதே மின்னல் அவனுடைய களஞ்சியத்தைத் தாக்கியது. அவன் அங்கே சில அருமையான பந்தய குதிரைகளை வைத்திருந்தான், மின்னல் ஒவ்வொன்றையும் கொன்று போட்டது. 26 அதற்கு சில வாரங்கள் கழித்து அவன் நச்சுக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, என்னுடைய தகப்பனார் படுக்கையில் அவனுக்கு உதவியாக தாங்கிப் பிடிக்கையிலே மரித்துப் போனான். பிசாசுகள் அவனைச் சுற்றிலுமாய் சங்கிலிகளால் சுற்றி அவனைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும் மற்றும் ஒவ்வொரு காரியத்திற்கும் அவன் கூச்சலிட்டுக் கதறினான். அவன் மரிக்கும்படியான நேரம் வந்தபோது, அவன் அவனுடைய குடும்பத்தை ஒன்று கூட்டி அவனுடைய சிறு பிள்ளைகளை அழைத்தான். அவன் அவர்களிடத்தில், “உங்களுடைய தகப்பனார் சென்ற பாதையில் நீங்கள் செல்லாதீர்கள். உங்கள் தாயார் போகின்ற பாதையிலே செல்லுங்கள், ஏனென்றால் அது மாத்திரமே ஜீவ வழியாய் இருக்கிறது” என்றானாம். 27 நான் வீட்டிலே ஒரு புத்தகம் வைத்திருக்கிறேன், அது அநேக பெயர்பெற்ற மனிதர்களின் சாட்சியைக் கொண்டது. அப்படிப்பட்ட மகத்தான…இங்கிலாந்தின் மகத்தான ராணிகளில் ஒருவள் மற்றும் சில மற்ற சில மனிதர்களுடையதையும் கொண்டுள்ளது. அவர்கள் மரணத்திற்குள்ளாக காலடி எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது அவர்கள் அலறினர், அழுதனர். 28 இங்கிலாந்தின் ராணி எலிசபெத், “நான் மட்டும்…தேவனோடு என்னுடைய இருதயத்தை சரிப்படுத்த, என்னுடைய மனந்திரும்புதலை நான் செய்திருக்கும்படியாக நான் இன்னும் ஐந்து நிமிடங்கள் அதிகமாக ஜீவித்திருந்தால், நான் என்னுடைய இராஜ்யத்தையே கொடுத்திருப்பேன்” என்றாள். 29 மற்றொரு மகத்தான பெயர்போன மனிதன், “நான் இருளுக்குள் காலடியை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறியேன். நான் முடிந்தால்…” என்றான். 30 மற்றொரு மகத்தான் நாத்திகன் கூறினானாம், அவன், “அங்கே இரண்டு மதில் சுவர்கள் இருப்பது போன்று காணப்படுகின்றது, நான் அலறினேன்,” என்றும், “வெறுமனே ஒரு மதிலிலிருந்து இன்னொரு மதிலுக்கு எதிரொலி கேட்டது” என்றான். அவர்கள் கேட்க முடிந்ததெல்லாம் அவ்வளவு தான். அது அதிக காலதாமதமாகுமட்டாய் இரட்சிப்பின் நாளை அவன் தள்ளிப் போட்டிருந்தான். 31 பின்னர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலும், அவருடைய உயிர்த்தெழுதலிலும் விசுவாசமுள்ள மரித்துப்போன மகத்தான பெயர் பெற்ற மனிதர்களைக் குறித்து நான் நினைக்கிறேன், இங்கே நான் டி. எல். மூடி (D.L. Moody) தன்னுடைய மரணத்திலே, அதைக் குறித்து அதிகமாக சொல்லப்பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன். “ஏன்? இது மரணமா?”. அவர், “இது என்னுடைய முடிசூட்டும் நாளாக உள்ளது” என்றாராம். ஜான் வெஸ்லி, அவர் மரித்துக் கொண்டிருக்கும்பொழுது என்றே நான் கருதுகிறேன். ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டு மரணத்துக் கேதுவாக இரத்தம் வழிந்துகொண்டு ஒரு இடத்தில் கிடந்தபோதோ. 32 அண்மையில் அங்கே இல்லினாய்ஸில் (Illinois) உள்ள ஒரு அருங்காட்சி சாலையின் பக்கமாக நான் நடந்து சென்றேன். அவருடைய தலையில் வளையம் போன்று சிறிது வெள்ளை முடியுடன் ஒரு வயதான கறுத்த மனிதன் எதையோ பார்த்துக் கொண்டே சுற்றி நடந்து கொண்டிருந்ததை நான் கண்டேன். கொஞ்ச நேரம் கழித்து அவர் நின்றார். கண்ணீர் அவர் கண்களில் வழிந்தது. அவர் அப்படியே பின்னிட்டு வந்து ஜெபம் செய்யத் துவங்கினார். நான் அவரை ஒரு சில நிமிடங்களாகக் கவனித்தேன். நானும் கூட சுற்றி நடந்து கொண்டிருந்தேன், எனவே நான் நடந்து சென்று, “பெரியவரே, என்ன சங்கதி? நீர் ஜெபித்துக் கொண்டிருப்பதை நான் கவனிக்கிறேன்” என்றேன். அவரோ, “அங்கே கிடப்பதைப் பாரும்” என்றார். 33 நல்லது, அங்கே கிடக்கின்றதை நான் நோக்கிப் பார்த்தேன், நான் காண முடிந்த ஒரே காரியம் ஒரு ஆடையாய் இருந்தது, அவர் சொன்னார்…நான், “நான் காண்கிற ஒரே காரியம் ஒரு ஆடையாய் உள்ளது” என்றேன். 34 அவர், “ஆனால்,” “ஐயா, பாருங்கள்,” என்னுடய சட்டைக்கு அடியில் ஒரு அடிமைப்பட்டையின் தழும்பு இருக்கிறது என்று கூறினார். அவர், “அதுதான் ஆபிரகாம் லிங்கனின் இரத்தம்” என்றார். மேலும், “அந்த அடிமைப் பட்டையை என்னிலிருந்து எடுத்துப்போட அது ஆபிரகம் லிங்கனின் இரத்தத்தை எடுத்துக் கொண்டது” என்றார். 35 நான், “அந்த ஆபிரகாம் லிங்கனின் இரத்தத்தின் நிமித்தமாக, ஒரு அடிமைப்பட்டையை அது எடுத்துப் போட்ட காரணத்தினால் அது ஒரு கறுத்த மனிதரை எழுச்சியாகக் கூடுமானால், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஒரு விசுவாசிக்கு என்ன செய்தாக வேண்டும். நாம் கல்வாரியை திரும்பிப் பார்த்து, அவர் நம்முடைய பாவத்தின் கச்சையை நம்முடைய இருதயங்களிலிருந்து எடுத்துப் போட்டு, நம்மை விடுவித்ததை காணும்போது அது நமக்கு என்ன செய்தாக வேண்டும்” என்றே எண்ணினேன். அதாவது கடந்த சில இரவுகளாக நாம் அதை குறித்துதான் பேசிக் கொண்டிருந்தோம். அது என்ன ஒரு வித்தியாசமாக உள்ளது! 36 ஆபிரகாம் லிங்கன், அவர் மரித்துக் கொண்டிருக்கும் போது, அவர் ஒரு முடிவுக்குள்ளானவராக இருந்தார். அவர்…ஆனால் அவர் அங்கே சுடப்பட்டபோது, இந்த பெரிய முக்கிய தேவாலயத்திலே, அவர் தன்னுடைய படுக்கையில் மரித்துக் கொண்டிருக்கையில், அவர், “சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கிற பக்கத்தை நோக்கியவாறு என் முகத்தை திருப்புங்கள்” என்றார். சூரியன் மாலையில் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. லிங்கன் சுவாசித்துக் கொண்டிருந்த போதே, அவருடைய நுரையீரல்களில் இரத்தம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அவர் எப்பொழுதுமே தேவனை நம்பியிருந்தார். அவர், “என் கரங்களை உயர்த்திப் பிடியுங்கள்” என்றார். அவர் தன்னுடைய கரத்தை உயர்த்திப் பிடித்தார். அவர், “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரித்தப்படுவதாக” என்று கூறியவாறு அவருடைய தலையை சாய்த்து தன்னுடைய ஆவியை விட்டார். 37 என்னுடைய நெருங்கிய நண்பர் பால் ரேடார் (Paul Radar) அவர்கள் என்னுடைய தலைப்பு பாடலான நம்பிடுவாய் என்ற பாடலை எழுதியவர்; அவர் மரித்துக் கொண்டிருக்கும்போது, அவர் தன்னுடைய தோளை சாய்த்திருக்க அவருடைய தலை என்னுடைய மேலாளர் திரு.பாக்ஸ்டர் (Baxter) அவர்களின் மேல் சாய்ந்திருந்தது. அவர் கடல்களையும், சமுத்திரங்களையும் எல்லாவற்றையும் கடந்து பயணம் செய்த ஒரு மகத்தான தீரமுள்ள மனிதனாய் இருந்தவர். அவர் எங்கோ அடிப்படைவாதிகளோடு கலப்பாகி அவருடைய செய்தியே அவரை மரணத்திற்கேதுவாக கவலைக்குள்ளாக்கியது. அவர் மரித்துக் கொண்டிருக்கும்போது, அவர் ஒரு அறையில் கிடந்தார். மரணத்திற்கு சமீபமாயிருந்தார், முடிவுக்காக போராடிக் கொண்டிருந்தார். 38 இங்குதான் ஒரு மனிதனின் உண்மையான வெற்றி உள்ளது. அவர் எப்பொழுதுமே ஒரு மகத்தான நகைச்சுவையாளராகவே இருந்தார். உங்களில் அநேகர் பால் (Paul) அவர்களை அறிந்துள்ளீர்கள். சிறு மூடி வேதாகமப் பள்ளியிலிருந்து வந்த நால்வர் பாடற்குழுவினர் அங்கே இருந்தனர். அவர் மரித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் எல்லா ஜன்னல்களின் திரைகளையும் இழுத்து மூடிவிட்டார்கள். அவர் மேலே எழுந்து நோக்கிப் பார்த்தார். அவர் தன்னுடைய தலையை அசைத்து, அவர், “யார் மரித்துக்கொண்டிருக்கிறது? நீங்களா அல்லது நானா?” என்று கூறி, “திரைகளை உயர்த்துங்கள், எனக்கு சில நல்ல, அருமையான உயிர்த்தெழுதலைப் பற்றின சுவிசேஷப் பாடல்களைப் பாடுங்கள்” என்றார். 39 அவர்கள் அந்த விதமாக பாடத் துவங்கியதும், அவர், “என்னுடைய சகோதரன் லூக்கா எங்கே?” என்றார். 40 அவருடைய சகோதரனை அழைத்து வந்தனர். என்னுடைய மகன் என்னோடு செய்கிறது போலவே அவரோடு சென்றது லூக்காதான். லூக்கா பக்கத்து அறையில் இருந்து அழுதுகொண்டு இருந்தார். லூக்கா உள்ளே வந்தார்; ஒரு மகத்தான பெரிய அகலமான தோள்களையுடைய மனிதன் ஒருவேளை நீங்கள் அவரை அறிந்திருக்கலாம். அவரும், மா சண்டே (Ma Sunday) யும் அவர்கள் எல்லோரும் அங்கே இருந்தனர். 41 அவர் அப்படியே சுற்றித் திரும்பினபோது, அவர் லூக்காவை கரத்தினால் பற்றிப்பிடித்து, “லூக்கா நாம் இருவருமாக சேர்ந்து நீண்டதூரம் வந்திருக்கிறோம். ஆனால் அதைக் குறித்து சிந்தித்துப் பார், இப்பொழுதிலிருந்து ஐந்து நிமிடங்களில், நான் இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில் அவருடைய நீதியை உடுத்திக் கொண்டு நின்று கொண்டிருப்பேன்” என்றார். நம்முடைய வாழ்க்கைகளை நாம் விழுமியதாக்க முடியும், மேலும் மாள்வுற்று, நமது அடிச்சுவடுகளைப் பின்னே கால மணல்களின் மேல் விட்டுச் செல்கிறோம் என்பதை மாமனிதர்களின் வாழ்க்கைகள் அனைத்தும் நமக்கு நினைவூட்டுகின்றன; ஒருவேளை வெறொருவன் வாழ்க்கையினுடைய பெருமிதமான ஆழ்கடலின் மேல் பயணம் செய்கையில், ஒரு கைவிடப்பட்ட, கப்பற் சேதமடைந்த சகோதரன், அடிச்சுவடுகளைக் கண்டு, மீண்டும் மன தேறுதலடைவான். 42 லாங்ஃபெலோ (Longfellow) என்ற ஆங்கிலப்புலவன், வாழ்க்கையின் சங்கீதத்தைக் குறித்து, அவர்தான் அதை எழுதினார் என்று நான் நினைக்கிறேன். சில மாதங்களுக்கு முன்னர் அவருடைய கல்லறையின் அருகே நான் நின்றேன். நான் அவருடைய மகத்தான செய்யுளைக் குறித்தும், அவர் உலகத்திற்கு என்ன கொடுத்தார் என்றும் நினைத்துப் பார்த்தேன். அந்த வாழ்க்கையின் சங்கீதம் என்னுடைய பாராட்டுகளில் ஒன்றாயிருக்கிறது. மரணம் எப்பொழுதுமே ஒரு பயமாக இருந்தது. ஆதியிலிருந்தே மனிதன் முழுமையாய் அதற்குப் பயந்தான். முற்கால ஏதேன் தோட்டம் முதற்கொண்டே மனிதன் மரணத்திற்கு பயந்திருந்தான். 43 மகத்தான தீர்க்கதரிசியாகிய யோபுவைக் குறித்து நான் நினைக்கையில், அந்த நேரத்தில் அவன் அங்கே அமர்ந்திருந்தபோது, அவன் மரித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவன் அறிந்திருந்தான். அங்கே அவன் அந்த மகத்தான செய்தியை கூறினான். அதாவது நாம் அதை யோபு 14-ல் இருந்து பார்க்கலாம். எப்படியாய் அவன் பூக்களைக் கவனித்தான்; அவைகள் எப்படி மரித்து, அவைகள் மீண்டும் எழுகின்றன. அவன் மரங்களை எப்படியாய் கவனித்தான்; எப்படியாய் அது காற்றினால் அலைக்கழிக்கப்படுகிறது, காற்றானது அதை கிழித்துப் போடுகிறது. காற்றினால் கீழே தள்ளப்படுகிறது. அவன், “மரணத்தில் இவை நடக்கிறது, இருந்தபோதிலும் அது மீண்டுமாய் ஜீவிக்கிறது” என்றான். அவன், “ஒரு சில துளி தண்ணீரினால், ஆம்” என்று உரைத்து “அது ஜீவிக்கிறது” என்று கூறுகிறான். நாம் நம்முடைய மிருகங்களை கவனிக்கிறோம், அவைகள் ஜீவித்து மரிக்கின்றன. அசைந்து கொண்டிருக்கிற எந்தக் காரியமும் அது மரிக்கும்போது, அது மீண்டுமாய் ஒருபோதும் ஜீவிப்பதில்லை. 44 எனவே எப்படி தேவனால் ஒரு பூவை எடுத்து அதை மறுபடியும் ஜீவிக்கச் செய்ய முடிகிறது. இருந்தபோதிலும் அவனால் மீண்டுமாய் ஜீவிக்கமுடியவில்லையே என்று யோபு வியந்தான். அவன், “ஆம், மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப் போனபின் அவன் எங்கே?” என்றான். அவன், “அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்” என்றான். பின்னர் அவன், “ஓ, நீர் என்னை பாதாளத்தில் ஒளித்து உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து வைத்தால் நலமாயிருக்கும். நீர் எனக்கு காலங்களையும், கட்டுகளையும் குறிக்கிறீர், என்னால் கடந்து செல்ல முடியாது. ஆனால் உம்முடைய கோபம் தீருமட்டும் நீர் என்னை ஒரு மறைவிடத்தில் ஒளித்து வைத்தால் நலமாயிருக்கும்” என்றான். 45 அவருடைய துன்பத்தின் மத்தியில் சரியாக மிகவும் இருட்டான வேளையில், சரியான அந்த கடுஞ்சோதனையான நேரத்தில் அப்பொழுது அந்த எலிகூ வந்து அவனுடன் பேசத் துவங்கினான்; அவனிடத்தில் அந்தப் பூ பாவம் செய்யவில்லை; அவன்தான் பாவம் செய்தவன் என்றும், அங்கே ஒரு உயிர்த்தெழுதல் உண்டாயிருக்கும் என்றும் கூறினான். “என்றோ ஒரு நாள் நீதியான ஒருவர் வருவார், இந்த உலகத்திற்கு ஒத்தவராய், தேவனுடைய சாயலின் ரூபத்தில், மனித சாயலில் உண்டு பண்ணப்பட்டவர். பாவத்தின் சாயலான மாம்ச ரூபத்தை தம்மேல் எடுத்துக் கொண்டார், வேறு வழியில் கூறினால், கோபமான பரிசுத்த தேவனுக்கும், ஒரு பாவமுள்ள மனிதனுக்கும் இடையே நின்று அவருடைய கரத்தை இருவர் மேலும் வைத்து வழியை இணைத்து வைப்பார்” என்று கூறிக்கொண்டிருந்தான். 46 யோபு அதைக் கண்டபோது, அவன் கர்த்தருடைய உயிர்த்தெழுதலை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அதைக் கண்டான். இப்பொழுது கவனியுங்கள். வேறு வார்த்தைகளில் கூறினால், யோபு இதைப் புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தான். அதாவது, “ஒரு மனிதன் பூமியின் தூளுக்குப் போகும்போது, அவன் வெறுமனே கெட்டுப்போய் அழிந்து போகிறான். நான் அவனை கவனிக்கிறேன். அவன் திரும்ப எழுகின்றதே இல்லை. அவன் அப்படியே கிடந்து தன் ஆவியை விடுகிறான். அவன் தூரப்போய்விடுகிறான், அவன் எங்கே இருக்கிறான்? அவன் எங்கே இருக்கிறான் என்று ஒருவனும் அறியான். ஆனால் மரித்தவனிடத்திலிருந்து மற்ற காரியங்கள் எழும்புகின்றதை நான் கவனிக்கிறேன். ஆனால் அவன் எழுவதில்லை என்பதை நான் அறிவேன்” என்றான். 47 அப்பொழுது இந்த தீர்க்கதரிசி ஆவிக்குள்ளானபோது என்ன சம்பவிக்கப்போவதாக இருந்தது என்பதை தேவன் அவனுக்கு காண்பிக்கத் துவங்கினார். அதாவது அங்கே யாரோ ஒருவர் இருப்பார் என்றும், அவர் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்ப்பார் என்றும், மீண்டும் உயிர்த்தெழுவார் என்பதுமேயாகும். அவன் கர்த்தருடைய உயிர்த்தெழுதலைக் கண்டான். ஆகையால், நான் நினைக்கும் பொழுது, நான் அதை நேசிக்கிறேன். அவன் எழும்பி நின்றதாக அவன் கூறினான். அவன் தன்னைத்தானே உதறிக் கொண்டான். 48 அவன் ஒரு சாம்பல் மேட்டின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தான். என்னே! அவனுடைய வீட்டை கெட்ட யோகம் தாக்கியிருந்தது என்று இன்றைக்கு நாம் அழைக்கிறோம். அவனுடைய பிள்ளைகள் எல்லாரும் கொல்லப்பட்டனர். அவனுடைய ஆஸ்தி முழுவதும் போய்விட்டது. அவனுடைய ஆரோக்கியம் சீரழிந்தது. அவன் ஒரு கிறிஸ்தவனாக அல்லது ஒரு விசுவாசியாக, கைவிடப்பட்டவனாய் உட்கார்ந்திருந்தான். மனிதன், அவனுடைய சபையும் கூட அவனைத் தள்ளிவிட்டு, அதனுடைய முதுகை அவனுக்குக் காட்டியது. அவன் அங்கே உட்கார்ந்துகொண்டு, அவனுடைய கொப்பளங்களை தேய்த்துக் கொண்டிருந்தான். 49 பின்னர் கர்த்தருடைய ஆவி அவன் மேல் வந்தபோது, அவன் உயிர்த்தெழுதலை அந்த காலையில் கண்டான். உங்களுக்குத் தெரியும், அவன் எழும்பி நின்று அவன், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாட்களில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல்முதலானவை அழுகிப் போனபின்பு, அவரை நானே பார்ப்பேன்…” என்றான். கடைசி நாட்களில் அவரை அவன் காண்பான் என்றும், ஏனென்றால் ஒரு உயிர்த்தெழுதல், ஒரு பொதுவான உயிர்த்தெழுதல் உண்டாயிருக்கும் என்பதையும் அவன் அறிந்திருந்தான். 50 தாவீதுக்கு வயதாகிக் கொண்டு போனபோது, நான் அவனைக் குறித்து நினைத்துப் பார்க்கிறேன். ஒரு மகத்தான ராஜாவாக அவன் இருந்ததால், அவனுடைய அறைகளின் கனிகளின்படியாய், அவருடை வலது பாரிசத்தில் வீற்றிருக்க கிறிஸ்துவை அவர் எழுப்புவதாக தேவன் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார். பின்னர் நான் தாவீதைக் காண்கிறேன். அவன் வயதானபோது, அவனுடைய பாதையின் முடிவுக்கு வந்துகொண்டிருக்கும்போது, எல்லா சரீர பெலனும் ஏறக்குறைய போய்விட்டிருந்தது. அவன், “என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானின் அழிவைக் காணவொட்டீர்” என்றான். அவன் இயேசுவை, கிறிஸ்துன் உயிர்த்தெழுதலை முன்னதாகக் கண்டான்; அவருடைய சரீரம் பூமியின் தூளின் மேல் இருக்காது, ஆனால் அது மீண்டுமாய் உயிரோடே எழும்பும் என்பதை அறிந்திருந்தான். 51 முற்காலத்து ஆபிரகாமை தேவன் அங்கே அவனை உட்காரவைத்ததைக் குறித்து நான் நினைத்துப் பார்க்கிறேன், “இப்பொழுது ஆபிரகாமே உனக்கு வயதாகிக் கொண்டே போகிறது. நீ வயது கடந்தவனாய் இருக்கிறாய், நீயும் சாராளும் இருவருமே. ஆனால் நான் உனக்கு ஒரு வாக்குத்தத்தத்தின் குமாரனை கொடுக்கப் போகிறேன்” என்றார். அதன் பின்னர் எப்படியாய் ஆபிரகாம் அவனுடைய பிரயாணத்தைத் துவக்கி, ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் சென்றான். இயேசு கிறிஸ்துவை சுட்டிக் காட்டுவதாயிருந்த இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவர் வரும் காலம் வரைக்கும் அங்கே காத்திருந்தான். 52 இந்த வாக்குத்தத்தத்தை இருபத்தைந்து வருடங்களாக விசுவாசித்துக் கொண்டிருந்த பின்னர், வாக்குத்தத்தமானது நிறைவேற்றுவதற்கு சற்று முன்னர், அப்பொழுது தேவன் ஆபிரகாமுக்குத் தோன்றி, அவருடைய குமாரனை அவர் மரணத்தில் சிலுவையில் அறைந்து, உயிர்த்தெழுதலில் அவர் அவரை மீண்டுமாய் எழுப்பி எல்லாவற்றையும் அவருக்குக் கொடுப்பேன் என்பதை அவருக்குக் காண்பித்தார். அவர்கள் இதைக் கண்டபோது, மனிதனை சுற்றிலுமாய் பயமுறுத்திக் கொண்டிருந்த எல்லாக் காரியங்களின் நிழல்களும் ஒழிந்துபோகும்படிக்கு, மரண திகிலையே இல்லாமற்போகும்படி செய்தது. 53 அவர் வயதான ஆபிரகாமுக்கு அதன் முன் தோற்றத்தைக் கொடுத்தார். அவன் வெட்டி வைத்திருந்த அந்த துண்டங்களினூடாக அவர் கடந்து சென்றார். நாம் சில வாரங்களுக்கு முன்னரோ அல்லது கடந்த வாரமோ அல்லது சரியாகக் கூறினால் கடந்த வாரத்திற்கு முந்தின வாரம் நம்முடைய ஆராதனைகளில் அதைக் குறித்து தியானித்தோம். தேவனாயிருந்த இந்த சிறிய வெள்ளை ஒளியை அவர் எப்படியாய் உண்டுபண்ணி, அவைகளினூடாகக் கடந்து போய், உடன்படிக்கையின் ஆணையை உறுதிப்படுத்தினார். 54 பின்னர் அப்படியே திரும்பி ஆபிரகாமை ஆசீர்வதித்தார்; நூறு வயதான ஒரு வயோதிப மனிதனையும், தொண்ணூறு வயதுடைய ஒரு ஸ்திரீயையும் வாலிப மனிதனாகவும், ஒரு வாலிப ஸ்திரீயாகவும் அவர்களை திரும்ப மாற்றி, குமாரனாகிய ஈசாக்கைக் கொண்டு வந்தார். அவனுக்குள்ளிருந்து ஆபிரகாமின் வித்து வெளிவந்தது. ஆபிரகா…மிலிருந்து, ஈசாக்கிலிருந்து தாவீது வந்தான், தாவீதிலிருந்து கிறிஸ்து வந்தார்; கிறிஸ்துவின் மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் வந்தது. என்ன ஒரு மகிமையான வாக்குத்தத்தம்! எப்படியாய் தேவன் காலங்களினூடாக இந்த எல்லா காரியங்களையும் முன் நிழலாய் காட்டினார். 55 பின்னர் முடிவிலே, கடந்த சில நாட்களாக ஒரு பின்னணியத்திற்காக நாம் தியானித்ததுபோல, பழைய ஏற்பாட்டின் எல்லா ஜனங்களும் எப்படியாய் தங்களுடைய அடக்க ஸ்தலத்தை குறித்துக் காட்டினார்கள். 56 இன்றைக்கு நீங்கள் கல்லறை மைதானத்திற்குச் சென்று உங்களில் அநேகர், உங்களுடைய அன்பார்ந்தவர்களுடைய கல்லறைகளின் மேல் மலர்களை வைப்பீர்கள். 57 இப்பொழுது இதைக் கவனியுங்கள். பண்டைய எல்லா தீர்க்கதரிசிகளும், கடந்து போகும்படியாக எந்த ஒரு வேத வாக்கியமுமில்லாமல் நமக்கு இருப்பது போன்ற தெய்வீக தேவனுடைய வாக்குத்தத்தமும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் மூலமாக மாத்திரமே கடந்து சென்றனர். “பண்டைய மனிதர்கள், பரிசுத்த ஆவியினால் அவர்கள் ஏவப்பட்டு, தேவனுடைய வார்த்தையை எழுதினர்”. அவர்கள் ஒவ்வொருவரும், அவர்கள் மரித்தபோது, அவர்கள் பாலெஸ்தீனாவில் அடக்கம் பண்ணப்பட வேண்டும் என்பதை அவர்கள் குறிப்பாக கூறியிருந்தனர். அவர்கள்…இருக்க வேண்டுமென்று விரும்பவில்லை. அவர்களில் அநேகர் பாலெஸ்தீனாவுக்குப் புறம்பாக மரித்தார்கள். ஆனால் பாலெஸ்தீனாவில் அடக்கம் பண்ணப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். ஏனென்றால் தேவன் உயிர்த்தெழுதலின் முதல்பலனை பாலெஸ்தீனாவிலிருந்துதான் கொடுத்தார். 58 பின்னர் இயேசுவானவர் வந்தபோது, அவர்கள் என்ன செய்வோம் என்று அவர்கள் கூறினார்களோ அதையே அவர்கள் அவருக்குச் செய்தனர். அவர் பெத்லகேமிலே பிறந்தபோது, அவர் ஒரு முன்னணையின் வழியாக வந்து, மரண தண்டனையினூடாக வெளியே சென்றார். அவர் இந்த பூமியின் மேல் இருந்தபோது, அவர் ஐம்பது மைல் தூர பிரயாணம் கூட செய்ததேயில்லை. அவர் பாலெஸ்தீனாவைத் தவிர வேறெங்கும் சென்றதேயில்லை. இருந்தபோதிலும் அவருடைய சுவிசேஷத்தின் செய்தியானது உலகத்தின் மூல முடுக்குகளுக்கெல்லாம் பிராணம் செய்திருக்கிறது. 59 அவர் தம்முடைய ஜீவியத்தில் ஒரு புத்தகத்தையும் எழுதினதேயில்லை. இருந்தபோதிலும் அவரைப் பற்றின புத்தகம் எழுதப்பட்ட எந்தப் புத்தகத்தைக் காட்டிலும் அதிகமாக விற்கப்பட்டது, இருந்தபோதிலும் அங்கு அவர் எந்த ஒரு…கல்லூரிக்கும் தன்னுடைய ஜீவியத்தில் சென்றதேயில்லை, ஆயினும் மற்ற எந்த மனிதனுக்கோ அல்லது மற்ற எந்தப் பெயருக்கோ அல்லது பூமியின் மேல் இருக்கின்ற மற்றெந்த காரியங்களைக் காட்டிலும் அவருடைய கனத்திற்காக அங்கே அநேக கல்லூரிகள் கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றன. அவர் அதிக தூரம் சென்றதேயில்லை. அவர் ஒரு தாழ்மையான, எளிமையான ஜீவியமே ஜீவித்தார். அவர் கேலி செய்யப்பட்டார், பரிகசிக்கப்பட்டார். ஏளனமாக நகைக்கப்பட்டார். 60 அவருடைய ஜீவனைக் கொடுக்கும் வல்லமையும், அதை மேலே எழுப்பும் வல்லமையும் அவருக்கு உண்டாயிருந்தது என்று அவர் கூறினார். எந்த ஒரு மனிதனாலும் அதைப் போன்று பெருமையடித்துக் கொள்ள முடியும். ஈஸ்டர் காலையன்று அவர் உயிர்த்தெழுந்த போது அவருடைய உறுதியான செய்தியை அவர் நிரூபித்தார். 61 அவருடைய கைகளிலும், அவருடைய—அவருடைய பாதத்திலும், அவருடைய விலாவிலும் அவர்கள் உருவக்குத்தினபோது, அவருடைய தலையின் மேல் முள்முடி சூட்டப்பட்டபோது, அவர் அக்கரையிலே இரக்கத்திற்காக அலறி, கல்வாரியில் மரித்தார். அவர் பூமியின் மேல் இருந்தபோது, அவர் ஒரு மனிதனைப் போன்று நடந்து கொண்டார். அவர் கல்வாரியில் மரித்தபோது, அவர் ஒரு மனிதனைப் போன்று இரக்கத்திற்காக சத்தமிட்டார். 62 ஆனால் அவர் உயிர்த்தெழுதபோதோ, ஈஸ்டர் காலையன்று அவர் ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானவராக இருந்தார் என்பதை அவர் நிரூபித்தார். அவர் தேவனாய் இருந்தார். அவருடைய ஜீவனை கீழே கிடத்த அவருக்கு வல்லமை இருந்தது. 63 இப்பொழுது, முதல் காரியம், அந்தக் காலையில், அந்த சிறு கூட்ட சீஷர்கள் எல்லோரும் மனமுடைந்து போயிருந்தனர். என்ன சம்பவித்தது என்று அவர்களுக்கே தெரியவில்லை. அவர்களில் சிலர் மீண்டுமாய் அவர்களுடைய மீன்பிடிக்கும் தொழிலுக்கு திரும்பிப் போக விரும்பினர். 64 இப்பொழுது ஒரு சிறு முன்காட்சியாக, அதாவது நம்முடைய கிறிஸ்தவ மார்க்கத்தினூடாக ஸ்தாபகர்களுக்கு மரணம் என்னவாய் இருந்ததென்றால், மரணம் எவ்வளவு பயங்கரமாய் இருந்ததென்றும், இந்தக் காலையில் நான் குறிப்பிட்டபடி இந்த கோத்திரப்பிதாக்களின் மூலமாக வாக்குத்தத்தங்கள் எப்படி கொடுக்கப்பட்டது என்றும் பார்த்தோம். இப்பொழுது அது எங்கே இருக்கிறதென்று நாம் நேராக மூலகத்திற்கு வருவோம். 65 இந்த சீஷர்கள், அவர்கள்…சிறிய குழு துவக்கத்திலேயே வெறுக்கப்பட்டது. [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] அவர்களுக்கு இந்த பூமியின் மேல் அநேக நண்பர்கள் இல்லாதிருந்தனர். 66 இயேசு கிறிஸ்துவை சேவிக்கிற எந்த மனிதனுக்கும் இந்த பூமிக்குரிய அநேக நண்பர்கள் இருக்கமாட்டார்கள். உன்னுடைய திடநம்பிக்கையின் மேல்தான் நீ தனித்து நின்றாக வேண்டும். அநேக நேரங்களில் நீ மட்டுமே உன் சார்பாக நிற்க வேண்டியதாய் இருக்கும். ஆனால் அவர் உன்னோடு நிற்பார் என்று அவர் வாக்களித்திருக்கிறார். “உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுடனேகூட இருப்பேன்.” 67 இப்பொழுது, நான் அவரைப் பார்க்கையில், நாம் அதை நோக்கிப் பார்ப்போம். அவர் தூரமாக கொண்டு போகப்பட்டதாக, அவர்கள் எதிர்பார்த்தனர். ஏனென்றால் அவரால் அற்புதங்கள் செய்ய முடியும். பிதாவானவர் அவருக்கு காண்பித்ததையேயன்றி அவர் தானாய் ஒன்றும் செய்யவில்லை என்று அவர் உரிமை கோரினார். ஆனால் அவர்—அவர் அற்புதங்களை செய்பவராக இருந்தார். அவர் பிலாத்துவின் கரங்களில் கொடுக்கப்பட்டபோது, தேவனாகிய மேசியா, அவருடைய ஆடைகளெல்லாம் களையப்பட்டு, அங்கே நிறுத்தப்படு, அடிக்கப்பட்டு, காயப்பட்டு, நசுக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, உமிழப்பட்டும், அதைகுறித்து ஒரு வார்த்தையும் கூற, அவருடைய வாயையுங்கூட திறவாமலிருந்ததைக் காணுவதற்கு எப்படி அவர்களால் காத்திருக்க முடிந்தது? அது அவர்களுடைய இருதயங்களை உடைத்தது. 68 அதே மனிதன் தன் கரத்தை நீட்டி, “அமைதியாய் இரு,” என்று கூற காற்றும், அலைகளும் அவருக்குக் கீழ்ப்படிந்தன. 69 அதே மனிதன் சவ ஊர்வலத்தை நிறுத்தி, அவருடைய கரத்தை அந்தப் பெட்டியின் மேல் வைத்து, “வாலிப மனிதனே நான் உனக்குக் கூறுகிறேன், எழுந்திரு” என்று கூற அவன் எழுந்திருந்தான் 70 இருதயம் நொருங்குண்ட ஒரு வீட்டிற்குச் சென்றவர், அங்கே ஒரு குமாரத்தி அப்பொழுதுதான் மரித்துப் போயிருந்தாள்; இயேசுவோடு தன்னை அமர்த்திக்கொள்ள விரும்பின ஒரு சிறிய ஆசாரியன் யவீரு, ஒரு விசுவாசியாக ஆனான். அவர் உள்ளே நடந்து, “அமைதியாயிருங்கள், ஏனென்றால் பிள்ளை மரிக்கவில்லை; அவள் நித்திரையாயிருக்கிறாள்” என்றார். நிச்சயமாக அவர்கள் அறிந்திருப்பார்கள். நிச்சயமாகவே அங்கே ஏதோ காரியம் இருந்தது. அவர் உள்ளே நடந்து சென்று அவளுடைய கரத்தைப் பிடித்து: அவளை நோக்கிப் பார்த்து, “சிறுபெண்ணே, எழுந்திரு என்று நான் உனக்குச் சொல்லுகிறேன்” என்றார். மரித்துப்போயிருந்த ஒரு பெண் அவளுடைய ஆத்துமா போய் விட்டிருந்தும், அவளுடைய காலூன்றி எழும்பி நின்று மீண்டுமாய் ஜீவித்தாள். 71 எப்படியாய் அவர் லாசருவின் கல்லறைக்குச் சென்று, ஒரு மனிதனைப் போன்று அழுதுகொண்டு, அவருடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட, அவர் அழுதவாறு அங்கே நின்றார். மரித்து நான்கு நாட்களான ஒரு மனிதன், புழுக்கள் அவனுடைய சரீரத்திற்குள்ளிருந்தும், வெளியிருந்தும் நகர்ந்து கொண்டிருந்த ஒரு மனிதன், ஆனால் அவரைப் பாருங்கள், அவருடைய நலிந்த சரீரத்தை இந்தவிதமாய் நிமிர்த்தி நின்று, “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்;” என்றார். அதை சற்று சிந்தியுங்கள். “உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்;” 72 அப்படியானால் நாம் நம்முடைய அன்பார்ந்த மக்களுடைய கல்லறைகளைச் சென்று பார்க்கும்போது, இந்த காலையில் நமக்கு என்ன ஒரு நம்பிக்கை இருக்கிறது! பரிசுத்த ஆவியானவர், “அவன் ஜீவிக்கிறான்! ஒருபோதும் மரியான்; நித்திய ஜீவனை உடையவனாய் இருக்கிறான்” என்று சாட்சி பகருகையில், இந்த அழிவுக்கேதுவான சரீரத்தில் என்ன ஒரு நம்பிக்கை நமக்கு இருக்கிறது. ஆயினும் நாம் நம்முடைய பரிசுத்தவான்களுடைய சரீரங்களை கல்லறையின் மேல் வைக்கிறோம். ஆனால் உள்ளேயோ அவர்கள் ஜீவனோடு இருக்கிறார்கள். அவர்கள் எங்கோயோ ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள். 73 அவர் நின்றபோது, “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்றார். அங்கே ஒரு மனிதன் கிடத்தப்பட்டிருந்தான். அவர், “அந்தக் கல்லை எடுத்துப் போடுங்கள்” என்றார். அவனுடைய சரீரத்தின் அழிவு, ஒரு மனித சரீரத்தின் நாற்றம், அது என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். அவன் எழும்பும்போது, ஏன்? அங்கே சுற்றிலும் வியாதியின் நாற்றமிருந்தது. ஆனால் அவர் பேசி சொன்னது, “லாசருவே, வெளியே வா” என்றார். நான்கு நாட்களாய் மரித்துக் கிடந்த ஒரு மனிதன், கல்லறையிலிருந்து எழும்பி நின்றான். 74 அந்த விதமான ஒரு வல்லமையை உடைய ஒரு மனிதன், பயங்கரமான பரியாசத்துடன், அவரைப் பரிகாசம் செய்த போர்ச்சேவகர்களின் எச்சில்கள் அவருடைய தாடியிலிருந்து வடிந்துகொண்டு, கல்வாரியில் தொங்கிக் கொண்டிருப்பதை அவர்களால் எப்படிப் பார்க்க முடிந்தது. அவருடைய முகத்திலிருந்து ஒரு கைப்பிடியளவு தாடியின் முடியைப் பிடுங்கி, அவரைத் தலையின் மேல் அடித்து, “உன்னை அடித்தது யார்? என்று தீர்க்கதரிசனம் உரைத்துக் கூறு” என்று கூறினார்களே! ரோம ஆணிகள் அவருடைய கைகளிலும், கால்களிலும் கடாவப்படுவதை அவர்கள் காணும்பொழுது, அப்பேர்ப்பட்டதான ஒரு மனிதன் மரிப்பதை அவர்களால் எப்படி காண முடிந்தது? ஏனென்றால், தேவனுக்கு நியாத்தீர்ப்பு தேவையாயிருந்தது, கிறிஸ்து நம்முடைய நியாயத்தீர்ப்பை எடுத்துக் கொண்டார். 75 அவர்கள் எவ்வளவாய் ஏமாற்றம் அடைந்தனர்! அவர்கள் மீண்டும் தங்களுடைய மீன்பிடிக்கும் வலைகளுக்கே போய்விட்டனர். பேதுரு, “நான் மீன் பிடிக்கப் போகிறேன்” என்றான். சீஷர்கள் அவனிடத்தில், “நாங்களும் உன்னுடன் வருகிறோம்” என்றார்கள். அவர்கள் சென்றார்கள். அவர்கள் ஏக மொத்தமாய் கிழிக்கப்பட்டு ஏமாற்றமடைந்திருந்தனர். 76 அங்கே அவர்கள் அவருடைய சரீரத்தை கீழே இறக்கி மெல்லிய துணியினால் அதைச் சுற்றி அதை கல்லறையில் கிடத்தினர். 77 “அந்த மதவெறியின் முடிவு அதுதான்” என்றனர். உலகம் எப்படியாய் அவருக்கு எதிராய் இருந்தது. அவர்களோ, “அவன் ஒரு பரிசுத்த உருளை. அவன் ஒரு புத்திசுயாதீனமற்றவன். அவன் ஒரு மதவெறியன்” என்றே கூறினர். 78 ஆனால் அவரோ அவர் தேவனாய் இருந்தார் என்றார். அவரைப்போன்றே காணப்பட்டார். அவர் அவரைப் போன்றே நடந்தார். அவர் தேவன் என்பதை அவர் நிரூபித்தார். அது உண்மை. 79 சமீபத்தில் ஒரு ஸ்திரீ கூறினாள், நான் இதை அநேக முறை கூறியிருக்கிறேன். அவள், “சகோதரன் பிரான்ஹாம், அவர் தெய்வீகமானவராக இருக்கவில்லை” என்றாள். ஒரு கிறிஸ்தவ விஞ்ஞான ஸ்திரீ, அவள், “அவன் ஒரு மனிதனாய் மட்டுமே இருந்தார்” என்றாள். “அவர் வெறுமனே ஒரு மனிதனே” என்றாள். 80 நான், “அவர் ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானவராய் இருந்தார். அவர் தேவனாய் இருந்தார்” என்றேன். நான், “ஒன்று அவர் தேவனாய் அல்லது வஞ்சிக்கிறவராக இருந்திருப்பார்” என்றேன். 81 அவள், “நல்லது, அவர் லாசருவின் கல்லறையில் அழுத காரணத்தினால் அவர் ஒரு மனிதனேயன்றி, வேறொன்றுமில்லை என்பதை அவர் நிரூபித்தார்” என்றாள். 82 நான், “அவர் அழுதுகொண்டிருக்கும்போது அவர் ஒரு மனிதனைப் போன்று அழுதார். ஆனால் அவர் மரித்தவனை எழுப்பினபோது அவர் தேவனாய் இருந்தார் என்பதை அவர் நிரூபித்தார்” என்றேன். நான், “அவர் பசியாயிருந்தபொழுது, ஒரு மனிதனைப் போன்று அவருக்கு பசித்தது” என்றேன். 83 ஆனால் ஒரு மனிதன் அத்திரமரத்தைச் சுற்றி நின்று கொண்டு சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று முயற்சித்துக் கொண்டிருந்ததையும், ஒரு சில நாட்கள் கழித்து, சில அப்பங்களையும், சுமார் இரண்டு அப்பங்களையும், இரண்டு அல்லது மூன்று துண்டு மீன்களையும் கொண்டு ஐந்தாயிரம் ஜனங்களுக்கு போஷித்ததை உங்களால் யூகித்துப் பார்க்க முடிந்ததா! 84 கல்வாரியில் ஒரு மனிதன் நின்றுகொண்டு, அங்கே வானத்திற்கும், பூமிக்கும் இடையே தொங்கிக்கொண்டு, “நான் தாகமாயிருக்கிறேன், நான் தாகமாயிருக்கிறேன்” என்று சத்தமிட்டுக் கொண்டிருந்ததை உங்களால் யூகித்துப் பார்க்க முடிந்ததா! தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினவராயிற்றே! தண்ணீரின் சிருஷ்டிகர்த்தர் அங்கே நின்று கொண்டு தண்ணீருக்காக கதறினாரே 85 நாம் அவருடைய தரித்திரத்தினால் ஐசுவரியவான்களாகும்படிக்கு அவர் நமக்காக பாவமானார். அவர் தம்முடைய மரணத்தில் ஒரு பாவியைப் போல் மரித்தார்; எனவே நாம் நம்முடைய மரணத்தில் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய் மரிக்க முடிந்தது. 86 மரணங்களுக்கிடையே என்ன ஒரு வித்தியாசம் என்பதை நான் சிந்தித்துப் பார்க்கிறேன். வயதான தந்தை ஹேஸ் (Hayes) அவர் மரித்துக் கொண்டிருக்குபோது, அவர் அவருடைய பிள்ளைகளை பக்கமாக அழைத்தார். அங்கே அவர் இரண்டு அல்லது மூன்று நாட்களாக சுயநினைவற்றவராய் படுத்துக் கிடந்தார். அவருக்கு ஒரு வழக்கச் சொல் இருந்தது, அவர், “அன்புள்ளவரே என்னுடைய ஆத்துமாவை ஆசீர்வதியும்!” என்றாராம். அவர் எல்லா…அவருடைய பிள்ளைகளை அவர் பக்கமாக அழைத்தார். நீண்ட வெண்மையான தாடி தொங்கிக் கொண்டிருந்தது; அவர், “அன்புள்ளவரே என் ஆத்துமாவை ஆசீர்வதியும்! தகப்பன் ஹேஸ் மரித்துவிட்டார் என்று நீங்கள் நினைத்து விட்டீர்கள்” என்றார். அவர், “நான் ஒருபோதும் மரியேன். இயேசு ஜீவிக்கின்ற காரணத்தினால் நானும் கூட ஜீவிக்கிறேன்” என்றார். அவர் தன்னுடைய ஒவ்வொரு பிள்ளையையும் ஆசீர்வதித்தார். 87 அவர், “என் கரங்களை உயர்த்திப் பிடியுங்கள்” என்றார். அவருடைய கரங்களை அவரால் உயர்த்த முடியவில்லை. அவருடைய பிள்ளைகளில் ஒருவன் அந்தக் கரத்தை ஒருபுறம் உயர்த்தினான். இன்னொருவன் இன்னொரு கரத்தை உயர்த்தினான். அவர் பாடத்துவங்கினார். அவருடைய கண்கள் வானத்தை நோக்கிப் பார்க்கத் துவங்கியதும், அவர், “இன்ப நாள், இன்ப நாள், இயேசு என் பாவங்களை கழுவின நாள் முதற்கொண்டே எப்படி ஜெபிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் எப்படி களிகூர்ந்து ஜீவிக்க வேண்டும் என்றும் அவர் எனக்குப் போதித்தார்” என்றார். அவருடைய கண்களை மூடினார். தேவனை சந்திக்கும்படியாக சென்றார். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த விதமாகத்தான் நானும் போக விரும்புகிறேன். அதுதான் வழி: நான் இயேசு கிறிஸ்துவுக்குள் மரிப்பேனாக. 88 பின்னர், எல்லா ஏமாற்றங்களையும் அதவது—அதாவது—அதாவது அவருக்கு உண்டான எல்லாக் காரியங்களையும் அவருடைய சீஷர்கள் கண்டபொழுது, அவர்களை கைவிட்டது போன்று காணப்பட்டது. அவர்கள் எல்லோரும் மீன்பிடிக்கத் திரும்பிப் போகத் துவங்கினார். ஒருவன் அவனுடைய வேலைக்குத் திரும்பிப் போனான். இன்னொருவன் திரும்பி இந்த வழியாய் சென்றான். 89 இப்பொழுது, நான் இந்த காலையில் கல்லறையிலிருந்து துவங்க விரும்புகிறோம். அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், மரியாளும், மார்த்தாளும், மகதலேனா மரியாளும் இயேசுவின் தாயாகிய மரியாளும்…அது ஒரு விடியற்காலையாயிருந்தது. அவர்கள் அவருடைய சரீரத்தைப் பூமியின் மேல் ஓய்வுநாளுக்கு முன்னர் வைத்தனர். ஓய்வு நாளன்று அவர்கள் எந்தக் காரியத்தையும் செய்யாதிருப்பது அவர்களுடைய வழக்கமாயிருந்தது. எனவே அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு மரித்து ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் எழும்பினார். 90 இப்பொழுது இங்கே நீங்கள் இந்த சூரியோதய ஆராதனையில் இருக்கையில், நான் இந்தக் கேள்வியை தீர்த்து வைக்க விரும்புகிறேன். அநேக ஜனங்கள், “மூன்று நாள் இரவும் பகலுமாய் அவர் கல்லறையில் இருந்தார் என்று அவர்கள் எப்படி கூறுகின்றார்கள்?” என்று கேட்கிறார்கள். அவர் அதைச் செய்ய போவதாக ஒருபோதும் கூறவேயில்லை. 91 அவர், “இந்த மூன்று நாட்களுக்குள்ளே நான் என்னுடைய சரீரத்தை எழுப்புவேன்” என்றார். புரிகின்றதா? இப்பொழுது அவர் அதைச் செய்ததற்கு காரணம், ஏனென்றால் வேத வார்த்தைகளில் ஓரிடத்தில், தாவீது, “அவருடைய ஆத்துமாவை நான் பாதாளத்தின் விடேன். என்னுடைய பரிசுத்தரின் அழிவை நான் காணவொட்டேன்” என்று கூறியிருந்தான். மனித சரீரத்தில் அழிவு எழுபத்திரண்டு மணி நேரத்திற்குப் பின்னரே, மூன்று பகல்களும் மூன்று இரவுகளுக்குப் பின்னரே துவங்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். அந்த மூன்று பகல்கள், மூன்று இரவுகளுக்கும் இடையில் ஏதாவது நேரத்தில் தேவன் அவரை எழுப்பப் போவதாக இருந்தார். எனவே அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு மரித்து ஞாயிறு அதிகாலையில் எழுந்தார். 92 இப்பொழுது நாம் ஒரு சிறிய நாடகத்தை இங்கே எடுத்து ஒரு நிமிடம் நின்று கவனிப்போம். நெடுநேரமாய் இரவெல்லாம் அப்படியே என்னால் அவரை பார்க்க முடிகிறது. பாவம் வயோதிபத் தாயாகிய மரியாள், அவளுடைய இருதயம் உடைந்துவிட்டது. தீர்க்கதரிசியாகிய அன்னாள், அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக அவள் உருவப்படுவாள் என்று அவளிடத்தில் கூறினாள். எப்படியாய் அவருடைய சரீரம் பாதிக்கப்பட்டது, அவளுடைய அருமையான குழந்தை சிலுவையின் மேல் தொங்கிக் கொண்டிருக்க, சபைக்கு என்ன ஒரு அவமானத்தை அவர் கொண்டு வந்திருந்தார். ஆனால் இருந்தபோதிலும், அவளுடைய இருதயத்தில் அந்த தாயினுடைய அன்பு வெளிவந்தது…அவர் என்ன செய்திருந்தாலும், எவ்வளவு அவமானமாயிருந்தாலும் அக்கறையில்லை. இன்றைக்கு ஒரு குற்றவாளியாய் தூக்கிலிடப்படுவதற்கு அல்லது மின்சாரத்தால் மரணமளிக்கப்படுவதற்கு அல்லது ஏதோ ஒரு காரியத்திற்கு அங்கே போவது போன்று, மரண தண்டனையில் அவர் மரித்தார். அந்த விதமாகத்தான் வெட்கத்திலும், அவமானத்திலும் அவர் மரித்தார். பாவத்தை தேவன் எப்படி தண்டித்தார் என்பதைப் பாருங்களே! அப்படியானால் அவள் எப்படியாய் அழுதிருந்தாள். ஒருக்கால் இரவெல்லாம் அழுதிருப்பாளே! அவளுடைய… 93 மகதனேலா மரியாள் அவருடைய வல்லமையை அறிந்திருந்தாள். அவரைப் பற்றின ஏதோ காரியம் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாய் இருந்தது என்பதை அவள் அறிந்திருந்தாள். அவளிடமிருந்த ஏழு பிசாசுகள் வெளியே துரத்தப்பட்டிருந்தன. 94 இயேசு கிறிஸ்துவின் வல்லமையினால் பிசாசினிடத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஒவ்வொருவரும், அவர்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறார்கள். அவருடைய மகத்தான தெய்வீக பிரசன்னத்திற்கு முன்பாக எவரொருவரும் எப்பொழுதாகிலும் வந்தால், அதே நபராக ஒருபோதும் இருக்கவே முடியாது. நீங்கள்—நீங்கள் மாற்றப்பட்டிருக்கிறீர்கள். அங்க ஏதோ காரியம் உங்களுக்கு சம்பவிக்கிறது. ஓ, நீங்கள் எட்டி நிற்கலாம். மனோதத்துவ சாஸ்திரம் மற்றும் இதை யூகிக்கலாம். இதை ஏற்றுக் கொள்ளலாம், ஒரு குறிப்பிட்ட காரியத்தை சில தத்துவங்களை அல்லது அதைப் போன்ற ஏதோ காரியங்களை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் வேத சாஸ்திரத்தில் நமக்கோ நம்பிக்கை இல்லை. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையில் நாம் நம்பிக்கை உள்ளவர்களாய் இருக்கிறோம். நீங்கள் அவருடைய பிரசன்னத்திற்குள் வரும்பொழுது, ஏதோ காரியம் உங்கள் ஜீவியத்தில் சம்பவிக்கிறது. அது உங்களை மாற்றுகிறது. நீங்கள் இனி அதேவிதமான மனிதனாகவே ஒருபோதும் இராமல், கிறிஸ்துவின் பிரசன்னத்திற்குள் எப்பொழுதுமாய் இருக்கிற மனிதனாய் இருந்து வருகிறீர்கள். 95 எனவே அவளிடத்திலிருந்து ஏழு பிசாசுகள் துரத்தப்பட்டிருந்தன. பெருமை, பொறாமை மற்றும் அவள் அவ்வளவு அழகாய் இருந்தாளென்றும், அவளைப் போன்று ஒருவரும் இருந்ததில்லையென்றும் அவள் எண்ணினாள். ஆனால் இயேசுவானவர் பேசி, “நீ சுத்தமாகு” என்று கூறினபோது, அவை எல்லாம் அவளை விட்டுப் போய்விட்டன. அவள் ஒரு புதிய நபராக மாறினாள். அவளுடைய சொந்தப் பார்வையில் அதற்குமேல் அவள் அவ்வளவு அழகாய் இல்லை. ஆனால் தயவும், சாந்தமுமான அங்கியினால் அவள் தன்னை சுற்றிக்கொண்டு ஆண்டவரைப் பின் தொடர்ந்தாள். அவள் அவரை நேசித்தாள். பின்னர் ஈஸ்டர் காலையன்று என்னால் அவளைக் காணமுடிகிறது. 96 அவருடைய சீஷர்கள் வெளியே போய், அவர்களில் சிலர் மீன்பிடிக்கும் படகுகளை இழுத்துக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் வீட்டிற்கு போய்க் கொண்டிருந்தனர்; அவர்களுடைய வேலைகளுக்கு திரும்பிச் சென்று விட்டனர். 97 பின்னர் அதிகாலையிலே தாயாகிய மரியாளும், மகதலேனா மரியாளும் குன்றின் ஓரமாகப் புறப்பட்டு கல்லறையை நோக்கிச் செல்கிறதை என்னால் காணமுடிகிறது. அவர்கள் சில வாசனை திரவியங்களையும் மற்ற பொருட்களையும் வைத்திருந்தனர். அவருடைய சரீரத்தை சுகந்த வர்க்கமிட்டு அவரை வைக்க விரும்பினர். 98 எனவே அவர்கள் குன்றின் மேலேறிப் போகையில், என்னால் இன்னொரு காட்சியை யூகித்து காண முடிகிறது. நாம் இங்கு சற்று பார்ப்போம். 99 அங்கே ஒரு கூட்டப் போர்வீரர்கள் நின்று கொண்டிருக்கிறதை என்னால் காண முடிகின்றது. அவர்கள் இரவு முழுவதுமாய் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர் அல்லது பகடையை குறிவைத்து அல்லது அவர்களுடைய தாய்க்கட்டையோடு தரையின்மேல் தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர், “இங்கே பாருங்கள், அந்த வஞ்சகனை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவன், ‘மூன்று நாட்களில்’ எழும்பப்போவதாகக் கூறினானே, எனவே இப்பொழுது நாம் பார்ப்போம். நாம் கல்லறை மட்டுமாய் போவோம்” என்கின்றனர். 100 அதுமட்டுமாய் அவர்கள் நடந்து சென்று, அவர்களுடைய மார்பை அவர்களாகவே தட்டிக் கொடுத்துக் கொண்டு, அவர்களுடைய இதைப்போன்ற பெரிய தளவாடங்கள் மற்றும் ரோம பட்டயத்தை வீசி, “அவனால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் பார்ப்போம்!” என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. ஏனென்றால் அந்த கல்லறை முத்திரிக்கப்பட்டிருந்தது. ஒரு ரோம முத்திரை; அந்த முத்திரையை உடைக்கிறவனுக்கு ஐயோ, ஒரு கல் அங்கே வைக்கப்பட்டிருந்தது. அது நூறு புருஷர்களால் கொண்டுவரப்பட்டிருந்தது. ஒரு பெரிய கல்லை, அவர்கள் அந்தக் கல்லறையின் மேல் உருட்டி வைத்தனர். “அவர் அங்கே உள்ளே இருக்கிறார், மிகுந்த பத்திரமாக இருக்கிறாரே!” என்கின்றனர். அவர்கள் ஒரு பெரிதான நேரத்தை உடையவர்களாய் இருந்தனர். 101 ஆனால் வந்து கொண்டிருக்கையிலே ஏறக்குறைய பொழுது விடிந்து கொண்டிருந்தது. மரியாள்…அவர்களெல்லாரும் அந்த குன்றின் மேல் வந்து கொண்டிருந்தார்கள். இரண்டு சிறு பெண்கள் அதிகாலையிலே வெளியே வந்து ஒருக்கால் ஒருவர் இன்னொருவர் மேல் கரங்களை போட்டவாறு குன்றின் பக்கமாக போய்க் கொண்டிருந்திருக்கலாம். ஓ! ஓ, எப்படியாய் அவர்கள் அந்த குன்றின் பக்கமாக போய்க் கொண்டிருந்தனர் என்பதை ஏறக்குறைய என்னால் அப்படியே காணமுடிகிறது. தாயாகிய மரியாள் மகதலேனா மரியாளிடம், “அந்தக் கல்லை கல்லறையிலிருந்து யார் நமக்காக புரட்டுவர்? என்ன செய்யலாம்? நாம் அதை எப்படி செய்யப் போகிறோம்?” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகின்றது. 102 நல்லது, அதற்கு மரியாள், “தேவன் அதைப் பார்த்துக் கொள்வார்” என்று திருப்பிக் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 103 அதுதான் முக்கியமான காரியம். கவலையேயில்லை…ஜனங்கள், “நான் இதை அல்லது அதை எப்படிச் செய்யப் போகிறேன்” என்கின்றார்கள். தேவன் அதைக் குறித்துப் பார்த்துக் கொள்வார். நீங்கள் வெறுமனே போய்க் கொண்டேயிருங்கள். பாருங்கள் தேவன் மற்ற எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். 104 பின்னர், சடிதியாக எல்லா நட்சத்திரங்களும் மங்க துவங்கியதை நாம் காண்கிறோம். முதலாவதாக காரியம், உங்களுக்குத் தெரியும், அங்கே ஒரே ஒரு நட்சத்திரம்தான் விடப்பட்டிருந்தது. அதுதான் பெரியது, பிரகாசமான விடி வெள்ளி நட்சத்திரம் அக்கரையில் நின்று கொண்டிருந்தது. 105 எப்படியாய் ஒவ்வொரு காரியங்களும், சேவகர்கள் சிரித்துக் கொண்டும், கேலி செய்து கொண்டும் இருப்பதை என்னால் கவனிக்க முடிகிறது. “இப்பொழுது நீங்கள் பாருங்கள், அது பகல் வெளிச்சமாயிருந்தது. இன்னும் ஒரு காரியமும் சம்பவிக்கவில்லை” என்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தனர், “பாருங்கள். அவன் வெறுமனே ஒரு வஞ்சகனாயிருந்தான். இந்த நாட்களிலும், அந்த நாட்களிலும் எழும்பின அநேக வஞ்சகர்களைப் போன்று இவனும் வெறுமனே ஒரு மனிதன், இந்த விதமான காரியங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆனால் அப்போது…இல்லை இவைகள் உரிமை கோரப்பட்டன” என்றார். 106 ஆனால், இப்பொழுது சடிதியாக, எல்லா சிறு பறவைகளும், ராபின் பறவைகளும் பாடுவதை நிறுத்தின என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. பறவைகள் பாடுவதை நிறுத்திவிட்டன. புலவன், “பறவைகளும் கூட தாங்கள் பாடுவதை நிறுத்துமளவிற்கு அவருடைய சத்தம் அவ்வளவு இனிமையாயிருந்தது” என்றான். ஏதோ காரியம் சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. 107 அந்த மகத்தான விடிவெள்ளி நட்சத்திரம் அதன் ஸ்தானத்தில் அக்கரையில் தொங்கிக் கொண்டிருக்கிறதை என்னால் காணமுடிகிறது. காலத்தின் துவக்கத்திலிருந்தே அவர் அதை அங்கே தொங்க வைத்தார். அது அசையத் துவங்கியது. அது ஒரு வட்டமிடுவதை என்னால் காண முடிகிறது. மரியாளும், மற்றவர்களும் அதை கவனித்துக் கொண்டு இருந்தார்கள். அது என்ன செய்து கொண்டிருந்தது? அது ஒரு தூதன். அவரை அவர்கள் வைத்திருந்த கல்லறையை அது சுற்றி தேடிக்கொண்டிருந்தது. வேத வார்த்தை நிறைவேற்றப்படுவதற்கு ஆயத்தமாய் இருந்தது. 108 சகோதரனே, சகோதரியே! தேவனுடைய வேத வார்த்தையானது எப்பொழுதாவது நிறைவேற்றப்பட ஆயத்தமாயிருக்கும்பொழுது, நீங்கள் கவலையேப்பட வேண்டாம். அது சரியாய் அங்கே நிறைவேறும். 109 அந்த நட்சத்திரம் சுற்றி அசைந்து அதன் பயணத்தைத் துவக்குகிறதை என்னால் காண முடிகிறது. அந்த ரோமர்கள், பலமான நுற்றுக்கணக்கானவர்கள் அங்கே அவர்களுடைய உருவின பட்டயத்தோடு நின்று கொண்டு, “என்ன சம்பவிக்கிறது என்று நாம் இப்பொழுது பார்ப்போமே!” என்று கூறிக்கொண்டிருக்கிறதை என்னால் காணமுடிகிறது. 110 சடிதியிலே இந்த மகத்தான நெருப்புப்பந்து பரலோகத்திலிருந்து பறந்து வந்து, கல்லறையின் பக்கத்தில் நின்றது. அது அங்கே நின்று கொண்டிருந்த மகத்தான தேவனுடைய தூதனாக மாறினது. சேவகர்கள் மயக்கமடைந்து மரித்த மனிதர்களைப் போன்று தரையின் மேல் விழுந்தனர். அவனுடைய கரத்தின் ஒரு அசைவினால், அங்கே வைக்கப்பட்டிருந்த கல்லை, அதை அவன் பின்னாகத் தள்ளி அந்த ரோம முத்திரையை உடைத்துப் போட்டான். 111 ரோம முத்திரை அவருக்கு என்னத்தைக் குறித்துக் காட்டுகிறது? ஐக்கிய நாடுகளின் முத்திரை அல்லது வேறு ஏதோ காரியம் அல்லது ஏதோ சபையின் ஒரு முத்திரை அல்லது எந்த காரியமாயிருந்தாலும் ஒன்று மற்றதாயுள்ளது. தேவன் ஜீவிக்க வேண்டியவராக இருக்கிறார். அவர் வெளியே வரவேண்டியவராக இருக்கிறார். அவர் மரித்தோர் மத்தியில் ஜீவிக்க முடியாது. 112 ஆகையால் அவன் அந்தக் கல்லைப் பின்னாகத் தள்ள, அது பின்னாக உருண்டது. அவன் அங்கேயே நின்றான். இப்பொழுது யார் மேற்கொண்டது? சேவகர்கள் தங்களுடைய கேடகங்களையும் மற்ற காரியங்களையும் பற்றிக்கொண்டு அவர்களால் போக முடிந்த அளவு வேகமாக அந்த தோட்டத்தினூடாகவும், குன்றினூடாகவும் ஓட அவர்களுடைய தளவாடங்கள் ஒன்றோடொன்று இடித்துக்கொண்டு, அவர்கள் மேல் அதனுடைய இரும்புகளும், அவர்களுடைய கேடகங்களும் இடித்தன. அவன் அங்கு தனிமையாய் நின்றான். கொஞ்சம் கழித்து மரியாள்…கூறினாள். 113 அது சம்பவித்தபோது ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டாகி, அங்கே அந்த காலையில் அந்த பூமியை அசைத்தது. யாரோ ஒருவர், “எங்கேயோ எதோ காரியம் நடந்து விட்டது. எங்கேயோ ஏதோ வெடித்திருக்க வேண்டும். மின்னல் அல்லது ஏதோ காரியம் பூமியைத் தாக்கி இருக்க வேண்டும்” என வியந்து கூறினார். ஆனால், அதுவோ, இயேசுவானவர் மரித்தோரிலிருந்து எழுந்ததாக இருந்தது. 114 அப்பொழுது மரியாளும், மார்த்தாளும் அவர்கள் கல்லறையண்டைக்கு நடந்து சென்றனர். அந்த தூதன் அங்கே நின்று கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர். அவன், “அவர்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்கு போகிறார் என்றும், அங்கே அவர்களை அவர் சந்திப்பார் என்றும் அவருடைய சீஷர்களுக்குப் போய் சொல்லுங்கள், இதோ நான் உங்களுக்கு கூறியிருக்கிறேன். அவர் அவர்களை சந்திப்பார் என்று அவர் கூறியது போல அப்படியே அவர்களை சந்திக்கப் போகிறார் என்று இப்பொழுதே சீக்கிரமாய் போய் சீஷர்களுக்குச் சொல்லுங்கள்” என்றான். 115 ஓ, நான் அதைக் குறித்து நினைத்துப் பார்க்கிறேன்! “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; கடைசி நாட்களில் நான் அவனை எழுப்புவேன்.” 116 “இதோ நான் உங்களிடத்தில் கூறியிருக்கிறேன்” அவருடைய தூதர்கள் அதை உலக முழுவதிலும் பரப்பியிருக்கின்றனர். அதாவது, “தன்னைத்தானே வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றுகிற எந்த மனிதனையும், அவர் உன்னை உயிர்த்தெழுதலில் சந்திப்பார்.” கல்லறையின் மேல் நாம் மலர்களைத் தூவி, “சாம்பலுக்கு சாம்பலும், மண்ணுக்கு மண்ணுமாவாய்” என்று நாம் கூறுவதினாலே என்ன பயன்? பரலோகத்திலே ஒரு தேவன் இருக்கிறது போல அந்த சரீரமானது கல்லறையை விட்டு நிச்சயமாக எழும்பி வெளியே வரும். “இதோ, நான் உங்களுக்கு கூறியிருக்கிறேன்.” 117 நாம் கவனிப்போமாக. இதோ இப்பொழுது அவருடைய இரண்டு சீஷர்கள் போகிறார்கள். அவர்கள் பாதையில் இருக்கிறார்கள். 118 அவர்களில் சிலர் மீன்பிடிக்கச் சென்றனர். எனவே இயேசுவானவர் கரையின் மேல் நின்றுகொண்டு, அவர் நோக்கிப் பார்த்தார். அவர் அங்கே அவர்களைக் கண்டார். அவர், “பிள்ளைகளே, உங்களிடத்தில் ஏதாவது அப்பம் உண்டா?” என்று கேட்டார். 119 அவர் உங்களிடத்தில் கூறின முதலாவது காரியம், “உங்களுடைய வலையை அந்தப் பக்கத்திலே போடுங்கள்” என்றார். அவர்கள் இரவு முழுவதுமாய் மீன் பிடிக்கப் போய் ஒன்றையும் பிடிக்காதிருந்தார்கள். அந்த விதமாகத்தான் அது இருக்கிறது. நீங்கள் படகின் தவறான பக்கத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே இயேசு, “உங்களுடைய வலைகளை இந்தப் பக்கமாய் போடுங்கள்” என்றார். 120 பின்னர் அவர்கள் தங்களுடைய வலையை இந்தப் பக்கமாக வீசினபோது, இந்த விதமாக அதை இழுக்கப் பார்த்தார்கள். என்னே, அங்கே அவ்வளவு அதிகமாய் மீன்கள் அவர்களுடைய வலைகளைக் கூட கிழித்து விடுமளவிற்கு இருந்தன. 121 பேதுரு சுற்றுமுற்றும் பார்க்கத் துவங்கி, “ஒரே ஒரு மனிதனால்தான் இதைச் செய்ய முடியும்” என்றான். அவன் திரும்பி கரையைப் பார்த்தான். அங்கே அவர் நின்று கொண்டிருந்தார். அப்பமும் மீனும் அவர்களுக்காக ஆயத்தமாக நெருப்பின் மேல் இருந்தன. படகு வரும் வரைக்கும் பேதுருவினால் காத்திருக்க முடியவில்லை. அவன் தண்ணீருக்குள் அப்படியே குதித்து, தூரமாய் அவரை சந்திக்கச் சென்றான். அவன் துரிதப்பட வேண்டியதாய் இருந்தது. 122 ஓ, இன்றைக்கு உலத்திலிருக்கும் ஒவ்வொரு பாவியும் அந்த விதமாய் இருக்கவே நான் விரும்புகிறேன். அங்கே பேதுரு அவரை மறுதலித்தான். அவன் வெளியே சென்று மனம் கசந்து அழுதான். அவன் தொடர்ந்து ஜெபித்தான். அவன் இயேசுவை சந்திக்க வேண்டுமென்றிந்தான். அங்கே சென்று அவன் அவருடைய பாதத்தில் விழு விரும்பினான். 123 அங்கே இருவர் இருந்தனர். அவர்களின் ஒருவன் பெயர் கிலெயோப்பா. அவர்கள் எம்மாவுக்கு போகிற தங்களுடைய பாதையில் இருந்தனர். அவர்கள் நொறுங்குண்ட, துக்கமான இருதயத்தோடு போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் அதைக் குறித்து, ஓ, அது எவ்வளவு மோசமாயிருந்தது என்று பேசிக்கொண்டே நெடுக போய்க் கொண்டிருந்தார்கள். சடிதியாக, யாரோ ஒருவர் புதர்களிலிருந்து வெளியே வந்தார். ஒரு சாதாரண மனிதன், அவருடைய கழுத்துப் பட்டையைத் திருப்பி அணிந்தவராகவோ அல்லது வித்தியாசமாக உடுத்தினவராகவோ அல்ல. 124 அவர் மற்ற மனிதரைப் போன்றே உடுத்தியிருந்தார். மற்றவர்களுக்கு இருந்தது போன்றே அவருடைய தலை முடியும், அவருடைய தாடியும் இருந்தது. அவரிடம் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்…அவர் ஏதும் பெரிய வித்தியாசத்தை உண்டுபண்ணவில்லை. அவருடைய சான்றிதழ்கள் என்ன என்றும், அவர் என்னவாய் இருந்தார் என்றும் அவருடைய ஜீவியம் நிரூபித்தது. அந்த விதமாகத்தான் நாம் இருக்க தேவன் விரும்புகிறார். நம்முடைய ஜீவியமே நம்முடைய சான்றிதழ்களாக இருக்க விரும்புகிறார். அது உண்மையே. 125 பின்னர் அவர் தொடர்ந்து நடக்கத் தொடங்கினார். அவர், “சகோதரர்களே நீங்கள் ஏன் மிகவும் வருத்தமாயிருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் இந்த சம்பாஷணையில் இருக்கிறீர்கள்?” என்றார். ஓ, நான் அதை விரும்புகிறேன். 126 அதற்கு அவர்கள், “ஐயா, ‘ஏன்’, நீர் என்ன இந்த இடத்திற்கு அன்னியரா?” என்றனர். அவன், “ஏன்? முழு தேசமே சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது. இதோ நாங்கள் இருக்கிறோம்” என்றான். அவன், “இதோ நாங்கள் எங்கள் பாதையில் வீட்டிற்கு திரும்பி போய்க் கொண்டிருக்கிறோம்” என்றான். அவன், “ஏன்? நசரேயனாகிய இயேசு, அந்த தீர்க்கதரிசி, அவர் வரும்போது அவர் இஸ்ரவேலின் இராஜாவாக இருப்பார் என்று நாங்கள் நிச்சயமாக நினைத்திருந்தோம். இப்பொழுது அவர் மரித்து விட்டார். அவர்கள் அவரை அடக்கம் செய்தனர். அவர்கள் அவரை இருதயத்தினூடாக உருவ குத்தினார்கள். அவர்கள் அவரை அப்புறப்படுத்தினார்கள்” என்றார்கள். மேலும், “அவர் மரித்ததிலிருந்து அதெல்லாம் சம்பவித்தது முதல் இன்றைக்கு மூன்றாவது நாளாக இருக்கிறது” என்றான். தொடர்ந்து, “சில ஸ்திரீகள் கல்லறைக்குச் சென்றனர். தூதர்களின் ஒரு தரிசனத்தைக் கண்டு, திரும்பி வந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்றார்கள்” என்று கூறினர். “ஓ, நாங்கள் அந்த கதையை நம்பமுடியவில்லை. எனவே நாங்கள் போய்க் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள். 127 எனவே அவர்கள் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கையில், அவர், “கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், மூன்றாம் நாளிலே மீண்டும் எழும்புவார் என்று தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, நீங்கள் எவ்வளவு சோம்பேறித்தனமாய் இருக்கிறீர்களே” என்றார். 128 எவ்வளவு அழகாயிருக்கிறதென்று பாருங்கள்! என்னே! இதைப் பாருங்கள், வருத்தமான மற்றும் இருதயம் நொறுங்குண்டவர்கள் மத்தியிலே கிறிஸ்து! வருத்தமான இருதயம் நொறுங்குண்டவர்கள் மத்தியில், அங்குதான் அவர் போகிறார். 129 இதுவரை அவர்கள் கண்டிராத இருளான வேளையிலே அவர்கள் நெடுக போய்க் கொண்டிருந்தனர். அவர்களுடைய எல்லா நம்பிக்கையும் அற்றுப் போயிருந்தன. அவர்கள் சபையிலிருந்தும், ஜெப ஆலயங்களிலிருந்தும் வெளியே தள்ளப்பட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அவர் மேல் விசுவாசம் வைத்திருந்தனர். இப்பொழுது அவரோ, யாரிடம் அவர்கள் நம்பிக்கையை வைத்திருந்தார்களோ, அவர் மரித்து விட்டார். சில ஸ்திரீகள் ஏதோ தரிசனத்தைக் குறித்து ஒரு சிறு கதையோடு வந்து அவர் அவர்களை கலிலேயாவிலே சந்திப்பேன் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள் என்றும், சில தூதர்களை அவர்கள் கண்டிருந்ததாகவும் கூறினர். ஆனால், ஓ, அவர் அப்படியே…அவர்களால் அதை விசுவாசிக்க முடியவில்லை. அவர்கள் இருதயம் நொறுங்குண்டவர்களாய், விசனமாய், அழுது கொண்டிருந்தனர். அன்புள்ள இயேசுவானவர் நொறுங்குண்ட இருதயமுள்ளவர்கள் மத்தியில் தோன்றுகிறார். 130 இன்னொரு காரியம். அது முதலாவது ஈஸ்டர் காலையாக இருந்தது. எல்லா ஜீவன்களின் உயிர்த்தெழுதலிலும், வசந்த காலத்தின் மத்தியிலும், பறவைகளின் சத்தத்தின் மத்தியிலும், புதிய பூக்களைக் கொண்டு வருவதன் மத்தியிலும் இயேசுவானவர் ஜீவனோடு இருக்கிறார். உயிர்த்தெழுந்த இயேசுவானவர் உயிர்த்தெழுதல் உண்டாகும் வசந்த காலத்தில் இருந்தார். 131 எப்படியாய் அவர் அங்கே அவர்களோடு தொடர்ந்து நடந்து, அவர்களோடு பேசத்துவங்கி, அவர்களுக்கு கூறினார். “நல்லது, இப்பொழுது நீங்கள் தீர்க்கதரிசிகள் கூறினவற்றை விசுவாசித்தாக வேண்டும். கிறிஸ்துவைக் குறித்து வேத வார்த்தைகளில் என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றதோ, அவர் எவ்விதமாக பாடுபட வேண்டும் என்றும், மீண்டும் மூன்றாம் நாளில் எப்படி எழும்புவார் என்றிருக்கிறபடியே நீங்கள் விசுவாசிக்கத்தான் வேண்டும்” என்றார். நல்லது, அவர்கள் அதிகமாய் இருதயம் நொறுங்குண்டவர்களாயிருந்தார்கள். 132 கொஞ்சம் கழித்து, அவர் பேசத்துவங்கினதற்கு பிறகு, மற்ற மனிதர்கள் பேசினதிலிருந்து இந்த மனிதர் பேசினதைக் குறித்த ஏதோ காரியம் அங்கே சிறிது வித்தியாசமாய் இருந்தது. அவர் சராசரி மனிதனின் வரிசையில் இருக்கவில்லை. அவர் ஒரு ஆழமான உத்தமத்தை உடையவராய் இருக்கின்றது போன்ற ஏதோ காரியம் இருந்தது. அதைப் பற்றின ஏதோ காரியம், அதில் அர்த்தம் உடையதாய் இருந்தது. அவர் ஒரு வேத வார்த்தைகளைக் குறித்து விளக்கத் துவங்கினார். அவர் ஒரு வேத ஆசிரியராக இருந்தார். அதாவது கிறிஸ்துவானவர் மரித்து மூன்றாம் நாளில் மீண்டும் எழும்புவார் என்று எப்படி தீர்க்கதரிசிகள் கூறினார்கள் என்றார். அவர்களுடைய இருதயங்கள் அவர்களுக்குள்ளே எப்படியாய் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது! ஏதோ காரியம் சம்பவித்துக் கொண்டிருந்தது. 133 அவர்கள் தொடர்ந்து பிரயாணமாய் போகையில், அவர்கள் நாள் முழுவதுமாக பேசினர். இப்பொழுது அவர்கள் எருசலேமிலிருந்து சுமார் ஒரு சில ஜெக தூரங்கள், சுமார் ஒன்றரை மைல் தூரத்தில் இருந்தார்கள். அங்கேதான் அவர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். மெதுவாக அவர்கள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவோடு கூடவே நடந்து போய்க் கொண்டிருந்தனர். அதை அவர்கள் அறியாதிருந்தனர். 134 அவர் எத்தனை முறை உன்னோடு இருக்கையில் அமர்ந்திருந்தாரே! உன்னுடைய சோதனைகள் மற்றும் தொல்லைகளின் நேரங்களில் அவர் உன்னோடு எத்தனை முறை நின்றிருக்கிறார். நீயோ அதை அடையாளங்கண்டு கொள்ளவில்லையே! விபத்தில் ஏறக்குறைய நீ மரித்திருக்க வேண்டிய நேரத்தில் அல்லது விபத்திலிருந்து தவிர்த்துக் கொண்டபோது, அல்லது ஏதோ காரியத்தில் எத்தனை முறை அவர் அந்த சக்கரத்தில் இருந்தார். அது அவர்தான் என்பதை நீ அடையாளங்கண்டு கொள்ளவில்லையே! குடம் காலியான நேரத்தில், கலசம் வற்றிப்போன நேரத்தில், குழந்தைகளுக்கு ஒன்றுமே இல்லாதிருந்த நேரத்தில் அவர் எப்படியாய் உன்னோடு இருந்தார். எப்படியாய் அந்த மனிதன் வந்து பலசரக்குகளை கொண்டு வந்து வாசலில் வைத்தான். அது என்னவாய் இருந்தாலும் சரி, அது கிறிஸ்துவாயிருந்ததே! அவர் இன்றைக்கு ஜீவனோடு இருக்கிறார். அவர் மரிக்கவில்லை, அவர் ஜீவிக்கிறார். 135 சில காலைகளுக்கு முன்னர், நான் லூயிவில்லில் ஒரு நாத்தீக வைத்தியரின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். அவர்…ஆப்பிரிக்காவிலிருந்து வந்த பின்னர் நான் அங்கே போயிருந்தேன். அவர்கள் எனக்கு வயிற்றுவலிக்காக பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். அவர், “சங்கை பிரான்ஹாம் அவர்களே, புத்தியீனமானதை நீங்கள் விசுவாசிக்கிறீரோ…?” என்று கேட்டார். நான், “ஆம் ஐயா” என்றேன். 136 அவர், “அந்த மனிதர் மரித்தோரிலிருந்து எழுந்து விட்டார் என்று நீர் விசுவாசிப்பதை எனக்கு கூறுகிறீரா?” என்று கேட்டார். நான், “ஆம் ஐயா, நான் அதை விசுவாசிக்கிறேன்” என்றேன். 137 அவர், “அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று உங்களால் எப்படி நிரூபிக்க முடியும்?” என்று கேட்டார். நான், “அவர் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாக இருக்கிறார் என்று என்னால் நிரூபிக்க முடியும்” என்றேன். “அவர் எப்படி உயிர்த்தெழுந்திருக்க முடியும்?” 138 நான், “என்னுடைய இருதயத்தில் அவர் ஜீவிக்கிறார். அந்த விதமாகவே அவர் உயிர்த்தெழுந்தார் என்பதை நான் அறிவேன். இங்கே அவர் என்னை ஒரு பாவியிலிருந்து ஒரு கிறிஸ்தவனாக மாற்றினார். அவர் என்னுடைய சுபாவத்தை மாற்றினார். என்னுடைய நடத்தைகளை மாற்றினார். எனக்குள்ளாக இருந்த எல்லாவற்றையும் அவர் மாற்றினார். அவர் என்னை ஒரு புதிய சிருஷ்டியாக ஆக்கினார். ஆகையினால், தனிப்பட்ட முறையில் அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று நான் அறிவேன்” என்றேன். அவர், “அவர் மரித்தார் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றார். 139 நான்—நான், “நானும் கூட விசுவாசிக்கிறேன். ஆனால் அவர் மரித்தார். ஆம், அதைக் காட்டிலும் அதிகமாக அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார்” என்றேன். 140 இன்றைக்கு அவர் எங்களுடைய இருதயத்திற்குள் ஜீவிக்கிறார். அதனால்தான் நாங்கள் சந்தோஷமாயிருக்கிறோம். நாங்கள் பாட முடிகிறது. அதனால்தான் நாங்கள் அவரை கவனிக்க முடிகிறது. இங்கே அதிக நாட்களுக்கு முன்பல்ல, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னுடைய சொந்த ஜீவியத்தில் எனக்காக ஒரு மகத்தான அற்புதத்தை செய்தார். அவர் உங்களுக்காக அற்புதங்களை செய்திருக்கிறார். அவர் உங்களோடு தினமும் நடக்கிறார். அவர் ஒவ்வொரு விசுவாசியுடனும் நடக்கிறார். “இதோ நான் எப்பொழுதும் உங்களோடு இருக்கிறேன், உலகத்தின் முடிவு பரியந்தம் இருக்கிறேன்”. என்ன வந்தாலும் அல்லது போனாலும் கவலைப்பட வேண்டியதில்லை. இன்றைக்கு கிறிஸ்து இன்னமும் ஜீவிக்கிறார். மானிட இருதயத்தில் அரசாளுகிறார். 141 அந்தக் காரணத்தினால்தான், கதை கூறினது போலவே, நீங்கள் கவனியுங்கள். ஒவ்வொரு காலையும், நாம் அதிருப்தியோடு எழும்பி வெளியே போகிறோம். “நல்லது, நான் சுமார் அரைத் தூக்கத்தில் இருக்கிறேன்.” நமக்கு அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றெல்லா காரியங்களும் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. 142 ஒரு சிறிய ராபின் பறவையைப் பாருங்கள். அது ஒவ்வொரு காலையும் எழும்பி, முதல் காரியமாய் தன்னுடைய முகத்தை வான்ங்களுக்கு நேரே உயர்த்தி, தன்னுடைய உச்சக்குரலில் பாடிக்கொண்டிருக்கும். நீங்கள் அவைகளில் ஒன்றையும் அதிக இரத்த அழுத்தத்தினாலோ, கக்கத்தண்டங்களுடன் நடக்கவோ, சர்க்கரை வியாதியோடோ ஒருபோதும் பார்த்திருக்கமாட்டீர்கள். 143 ஒரு சமயம் ஒரு சிறிய ராபின் பறவை, “இந்த ஜனங்கள், இந்த காரியங்கள், மனிதவர்க்கம் என்று தங்களை அழைத்துக் கொள்ளுகின்ற சிருஷ்டிகள், இவர்களுடைய காரியம் என்ன என்று வியக்கிறேன்” என்றதாம். “அவர்கள் ஏன் அவ்வளவு விசனமாய் இருக்க வேண்டும்? நம்மேல் அக்கறை கொண்டுள்ள, நமக்கு இருக்கின்றது போன்றதொரு பரலோகப்பிதா ஒருக்கால் அவர்களுக்கு இல்லை போலும்” என்று கூறினதாம். 144 ஒரு இரவு இங்கே மில்டவுன் பாப்டிஸ்டு சபையில் ஒரு கூட்டம் நடத்திக்கொண்டு இருந்தேன். அப்பொழுது அங்கே நான் போதகராயிருந்தேன். என்னுடைய பழைய நண்பர் ஒருவரோடு இரவு முழுவதும் தங்கியிருக்கும்படி வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தேன். நான் வழக்கமாகவே கவனிப்பேன், நான் அங்கே கடந்து போகும்போது அங்கே ஒரு இன்னிசைப் பறவையான நைட்டிங்கேல் அங்கே தேவதாருப் புதரில் உட்கார்ந்து கொண்டிருக்கும். அதனுடைய உச்சக்குரலில் எவ்வளவு சத்தமாய் பாட முடியுமோ அவ்வளவு சத்தமாய் இரவெல்லாம் பாடும். பகல் வெளிச்சமாய் இருக்கும்போது, ஏன் பறவைகள் பாடுகின்றன? என்பதை என்னால் எவ்வளவாய் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. என்னால் யூகிக்க முடிகின்றது. சூரிய வெளிச்சம் அவைகள் மேல் குளிப்பாட்டுவதே அவைகளை பாட வைக்கிறது. ஆனால் அந்த இன்னிசைப் பறவையான நைட்டிங்கேலை பாட வைப்பதுதான் என்ன? 145 எனவே நான் எனக்காக இன்னிசைப் பறவையான நைட்டிங்கேலைப் பற்றின ஒரு புத்தகத்தை வாங்கி வாசிக்கத் துவங்கினேன். அந்த நைட்டிங்கேகை, அதை இரவில் பாடவைப்பது என்னவென்றால் அது ஆகாயத்தை கவனிக்கிறது என்பதை நான் கண்டறிந்தேன். ஒவ்வொரு முறையும் அதாவது அது மேகங்கள் அசையத் துவங்குவதை காணும்பொழுது, ஒரு நட்சத்திரத்தை காணும்பொழுது, ஒரு ஒளிக்கதிரை காணும்பொழுது, அது சத்தமிடத் துவங்கி தன் உச்சக்குரலில் பாடத்துவங்குகிறது. ஏன்? ஏனென்றால் எங்கேயோ சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்பதை அது அறிந்திருக்கிறது. சூரியன் எங்கேயோ பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்பதை அது பூமிக்குத் திரும்பவும் கூறிக்கொண்டிருக்கிறது. 146 சகோதரனே, சகோதரியே இருண்ட மேகங்களின் வேதனை மற்றும் சோதனைகள், தொல்லைகள் என் இருதயத்தின் ஊடாக ஆழத்திலே இருக்குமட்டும் எப்பொழுதாவது ஒரு தடவை பரிசுத்த ஆவியானவர் மூலமாக அழுத்துவதையும், ஒரு ஆசீர்வாதத்தை எனக்கு கொடுக்கிறதையும் என்னால் உணர முடிந்தால் தேவனுடைய வல்லமை இன்னமும் ஜீவிக்கிறதையும், எங்கேயோ ஆளுகிறது என்பதையும் நான் அறிவேன், அது உண்மை. 147 “உன்னை அங்கே பிரகாசிக்கச் செய்கிறது என்ன? நீ ஏன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று என்னால் அந்த விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கேட்க முடிந்தால், நலமாயிருக்கும். 148 அது, “சகோதரன் பிரான்ஹாம், பிரகாசித்துக் கொண்டிருக்கிறது நானல்ல” என்று கூறும். அந்த நட்சத்திரத்தினால் பேசமுடிந்தால் நலமாயிருக்கும். “சூரியன் தானே என்மேல் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது, அதுதான் என்னை பிரகாசிக்கச் செய்கிறது” என்று கூறும். 149 அவருக்குள் மறைந்திருக்கிற, இயேசு கிறிஸ்துவில் ஒரு விசுவாசியாயிருக்கிற ஒவ்வொரு மனிதனோடும் அது அந்த விதமாகத்தான் இருக்கிறது. அது நீங்கள் பிரகாசிப்பது அல்ல, உன்மேல் பிரகாசித்துக் கொண்டிருப்பது பரிசுத்த ஆவியாயிருக்கிறது. அது உங்களுக்கு இந்த நம்பிக்கையும், இந்த உயிர்த்தெழுதலின் சந்தோஷத்தையும் கொடுக்கிறது. 150 இங்கே பேசிக்கொண்டிருக்கையில், நான் வழக்கமாக தண்ணீர் குடிக்கும் ஒரு பழைய ஊற்றைக் குறித்து நான் வழக்கமாக கூறுவதுண்டு, அது பொங்கிக் கொண்டும், குதித்துக் கொண்டும், குதித்துக் கொண்டும், குதித்துக் கொண்டும் இருக்கும். அது மில்டவுனைச் சுற்றியிருந்த அந்த ஊற்று, ஏன் குதித்துகிறது என்று நான் வழக்கமாக ஆச்சரியப்படுவேன், எனவே ஒரு நாள் நான் அங்கே உட்கார்ந்து, அதனிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு மனிதன் ஒரு ஊற்றண்டை பேசிக் கொண்டிருப்பதை யூகித்துப் பார்த்தீர்களா? ஆனால் அந்த ஊற்றை உண்டாக்கின இயற்கையினிடத்தில் நான் பேசிக் கொண்டிருந்தேன். நான், “உன்னை இவ்விதமாய் பொங்கவும், இவ்விதமாய் குதிக்கவும் வைக்கிறதுதான் எது? பிள்ளைகள் இங்கு வந்து உன்னிடத்தில் தண்ணீர் குடிக்கிற காரணத்தினாலோ அல்லது நான் உன்னிடத்திலிருந்து குடிப்பதினாலோ அல்லது வேறொரு காரியமா?” என்று வியப்படைந்திருக்கிறேன். 151 அந்த ஊற்றினால் திருப்பிப் பேச முடிந்தால், அது, “இல்லை, பில்லி, நீ இதிலிருந்து தண்ணீர் குடிக்கும் காரணத்தினாலல்ல. மற்றவர்கள் என்னிடத்திலிருந்து தண்ணீர் குடிக்கின்ற காரணத்தினாலும் அல்ல. அது ஏதோ காரியம் இங்கே எனக்குக் கீழாக இருந்து கொண்டு என்னை தள்ளிக் கொண்டிருக்கிறது. என்னைப் பொங்கவும், குதிக்கவும் இந்த விதமாய் செய்து கொண்டிருக்கவும் செய்கிறது” என்று கூறும். 152 அந்த விதமாகத்தான் தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அல்லது ஸ்திரீயும் இருக்கின்றனர். அது நீங்களல்ல. அது மனுஷீக எழுச்சியுமல்ல. அந்த உயிர்த்தெழுதல் அல்லது தேவனுடைய வல்லமை அந்த மனுஷீக ஜீவியத்திற்குள் இருக்கின்ற காரணத்தினால் நித்திய ஜீவனுக்குள்ளாக அதை அழுத்திக் கொண்டு மேலே தள்ளி நித்திய ஜீவனுக்குள்ளாக அசைந்து போகிறது. இங்கே உள்ளே இருக்கின்ற ஏதோ காரியம்! நீங்கள் அதை உடையவர்களாயிருந்தால் உங்களால் அமைதியாய் இருக்கவே முடியாது. ஏதோ காரியம் உனக்குள்ளாகவே இருக்கிறது. 153 இயேசுவானவர் எருசலேமுக்குள்ளாக நடந்து கொண்டே வந்தபோது, அவர்கள் குருத்தோலைகளை வெட்டி, கூச்சலிடத் தொடங்கி சத்தமிட்டுக் கொண்டு, அந்த விதமாய் செய்து கொண்டிருந்தனர். விரைத்துப் போன அந்த பரிசேயர்களில் சிலர், “அவர்களை அமைதியாய் இருக்கச் சொல்லுங்கள். ஏன்? அவைகள் எங்களுக்கு நடுக்கத்தை கொடுக்கிறது. ஓ, அந்த ஜனங்கள் எப்படியாய் கூச்சலிட்டுக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள். 154 அவர், “அவர்கள் அமைதியாயிருந்தால் இந்த கல்லுகள் உடனே சத்தமிடும்” என்றார். ஏதோ காரியம் உண்டாக வேண்டியதாக இருக்கிறது. மரணத்தின் மத்தியில் ஜீவன் வருகிறபோது, ஒரு உயிர்த்தெழுதல் உண்டு; நிச்சயமாய் இருக்கத்தான் வேண்டும். 155 நம்முடைய அன்பார்ந்தவர்கள் உறங்கிக் கொண்டிருக்கின்ற கல்லறைக்கு இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்த அந்த ஜீவன் வரும்பொழுது, அங்கே ஒரு உயிர்த்தெழுதல் உண்டாயிருக்கும். இருளும் வெளிச்சமும் எப்படி ஒன்றாய் இணைந்து இருக்கமுடியாதோ அதைப் போலவே மரணமும் ஜீவனும் ஒன்று சேர்ந்து வாசம் செய்ய முடியாது. இருளானது உடனடியாக… 156 பகல் வெளிச்சம் வரும்பொழுது இருளை, அது அழுத்தித் தள்ளுகிறது. பகல் வெளிச்சம் பிரகாசிக்க வேண்டியதாய் இருக்கிறது. என்ன சம்பவிக்கிறது என்பது ஒரு காரியமல்ல, சூரியனுக்கு முன்பாக அந்த உலகம் அங்கே சுழலும்போது, அங்கே பகல் வெளிச்சம் வந்ததாக வேண்டும், அது இருக்கத்தான் வேண்டும். 157 நித்தியத்தைப் போன்று அவ்வளவு நிச்சயமாக, தேவ குமாரனுடைய வருகையின் நேரத்தை அது சுற்றிலுமாய் இழுப்பது போன்றே இந்த உலகத்தின் மேல் ஒரு உயிர்த்தெழுதல் உண்டாயிருக்கும். தேவனுக்குள்ளாக நித்திரையாயிருக்கிற யாவரையும், அவருடைய உயிர்த்தெழுதலில் கிறிஸ்து அவருடனே கொண்டு வருவார். அது இருக்கத்தான் வேண்டும். அதற்குப் புறம்பாக வேறு வழியே இல்லை. நீங்கள் அதை உடையவர்களாய் இருக்கத்தான் வேண்டும். அது இங்கு உள்ளே இருந்தாலொழிய நீங்கள் அதை எப்படி பெற்றுக்கொள்ள முடியும்? 158 அண்மையில் நான் இந்தியானாவிலுள்ள கேரியில் (Gary) நின்று கொண்டிருந்தபோது, அவர்கள் என்னை அங்கேயுள்ள அந்த பெரிய கேரி இருப்பாலைகளுக்குள்ளாக அழைத்துச் சென்றனர். நான் அதை கவனித்துக் கொண்டிருக்கையில் நான் மிகவும் கலக்கமடைந்திருந்தேன். கண்காணிப்பாளர் என்னை அழைத்துச் சென்று, அவர் அந்த இடம் முழுவதையும் எனக்கு சுற்றி காட்டிக் கொண்டிருந்தார். அவர் சொன்னார்…நான் ஆட்களை கவனித்துக் கொண்டிருந்தேன். வேலை முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் ஒரு சிறிய ஊதல் ஊதப்பட்டது. ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மேலங்கியை கழற்றி அதை அவனுடைய இயந்திரத்தின் மேல் கிடத்தினதை நான் கவனித்தேன். சரியாக அவனுடைய கடைசல் இயந்திரம் மற்றும் சாதனங்களை சுற்றி வேலை செய்து கொண்டிருந்த இரும்புகளிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒரு கூட்ட இரும்புச் சீவல்களை அவன் அந்த திட்டுக்குள் இருந்து பெருக்கிக் கொண்டிருந்தான். அவர், “சங்கை பிரான்ஹாம் அவர்களே, இங்கே நான் உங்களுக்கு ஒரு காரியத்தை காட்டுவேன்” என்றார். நான், “சரி” என்றேன். 159 பின்னர், அவர் ஒரு சிறிய இடத்திற்கு திரும்பி நடந்து சென்றார். முக்கிய ஊதல் ஊதப்பட்டதும், எல்லா மனிதர்களும் வெளியே சென்றனர். எல்லோருமே கட்டிடத்தை விட்டு வெளியேறினர். நாங்கள் மட்டும் தனியாய் விடப்பட்டு நின்று கொண்டிருந்தோம். அவர் ஒரு பொத்தானை அழுத்தினார். அங்கே பின்னாலிருந்து இடி முழக்கத்தோடு ஒன்று கர்ச்சித்துக் கொண்டு, “பர்” என்று கீழே வந்தது. நான், “அது என்னவாயிருக்கும்” என்று நினைத்தேன். 160 கொஞ்சம் கழித்து, அவர், “இப்பொழுது நீர் ஒரு பக்கமாக நில்லும்” என்றார். நான் ஒரு பக்கமாக நின்றேன். 161 ஒரு தண்டவாளத்தினூடாக கீழே இறங்கி வருவதை அங்கு நான் பார்த்தேன். அது வந்தபோது அப்படியே அங்கே அதனூடாக ஒரு பெரிய காந்தம் கீழே இறங்கி வந்தது. அந்தப் பாதையின் வழியாக அந்த காந்தம் கடந்து சென்றபோது, நான் கவனிக்கத் துவங்கினேன். அந்த உலோக சீவல்களெல்லாம் மேலே பறந்து போய் அதைப் போன்று அதை சந்தித்தது. அவைகளில் சில உயரே செல்லாமலிருந்ததை நான் கவனித்தேன். மற்றும் சில இரும்புத் துண்டுகளும் உயரே போகவில்லை என்பதை நான் கவனித்தேன். அந்த காந்தம் அப்படியே இரும்பு வார்ப்பட அடுப்புக்குள்ளாக திரும்பிச் சென்று அவற்றையெல்லாம் அந்த இரும்பு வார்ப்பட அடுப்புக்குள்ளாக கொட்டினது. அது உருக்கப்பட்டு மீண்டும் உற்பத்தியாக்கப்பட்டது. 162 நான், “ஏன் அதெல்லாம் எழும்பி மேலே போகவில்லை” என்றேன். நானோ, “நான் சில சீவல்களை பார்த்தேனே” என்றேன். 163 அவர், “சங்கை பிரான்ஹாம் அவர்களே நாங்கள் சில அலுமினிய பொருட்களையும் செய்கிறோம்” என்றார். அவர், “அந்த அலுமினியத் துண்டுகள் அந்த காந்தத்தின் காந்த ஈர்ப்பு சக்திக்குட்பட்டவைகள் அல்ல” என்றார். நான், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்றேன். நான்…சொன்னேன். அவர், “உங்கள் காரியம் என்ன?” என்றார். 164 நான், “நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்” என்றேன். எனவே நான், “ஏன் மற்ற இரும்புத்துண்டுகள் உயரே செல்லவில்லை” என்றேன். 165 அவர், “நீங்கள் கவனித்திருந்தால் நலமாயிருந்திருக்கும். அவைகள் கீழே அடிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளால் உயரே எழும்ப முடியாது” என்றார். நான், “தேவனுக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா!” என்றேன். அவர், “சங்கை பிரான்ஹாம் அவர்களே, காரியம் என்ன?” என்றார். நான், “நான் வெறுமனே ஒரு சிந்தனையில் இருந்தேன்” என்றேன். அவர், “நீர் சிந்தித்திருக்க வேண்டும்” என்றார். 166 நான், “சகோதரனே, எங்கேயோ அங்கே, அக்கரையிலே, நித்தியத்திலே, அல்லேலூயா, அங்கே ஒரு மகத்தான காந்தம் இருக்கிறது. இக்காலைகளின் ஒன்றில் தேவனுடைய குமாரன் அவிழ்த்துவிடப் போகிறார். அவர் இந்த பூமியின் மேல் ஒரு காந்தத்தைப் போன்று அசைவாடிக் கொண்டிருக்கிறார். அவரிடமாய் காந்த ஈர்ப்புக் கொண்ட ஒவ்வொரு ஆத்துமாவும் ஆகாயத்தில் அவரை சந்திக்கும்படியாய் உயரே போகும். அங்கே உயிர்த்தெழுதலில் இருக்க, அவரோடு ஜீவிக்க, அக்கரைக்கு கொண்டு போகப் படுவார்கள். இப்பொழுது நாம் ஜீவிக்கின்றதான இந்த பழைய சரீரங்கள் அல்லது இப்பொழுது நமக்கு உள்ளது போன்ற, இதுவுங்கூட வயதாகிக்கொண்டே, திரைச் சீலையைப் போன்று தொங்கிக்கொண்டு, விழுந்து போகும்; அக்கரையிலே தூசியின் இரும்பு வார்ப்பட அடுப்பிலே கொட்டப்பட்டு, திரும்ப வார்ப்பிக்கப்பட்டு, அவர் திரும்பி வரும்பொழுது முடிவான உயிர்த்தெழுதலில் அவருடைய சொந்த மகிமையான சரீரத்தைப் போன்று ஆக்கப்படுவோம்” என்றேன். 167 நான், “நல்லது, இப்பொழுது இங்கே பாருங்கள், காந்த ஈர்ப்பு சக்தி இல்லாத அநேக ஜனங்கள் இருக்கின்றனர். அநேக ஜனங்கள் இங்கே சூழ்நிலைகளால் இணைக்கப்பட்டிருக்கின்றனர். உதாரணமாக, ‘என்னால் அதைச் செய்ய முடியாது. என்னால் வெறுமனே அதை செய்ய முடியவில்லை. அதனுடைய கிரயம் மிகவும் அதிகமாக இருக்கிறது என்கிறார்களே’” என்றேன். 168 சகோதரனே, அக்கரையிலே அமர்ந்து கொண்டிருக்கும் ஆத்துமா, பரிசுத்த ஆவியினாலே தேவனோடு காந்த விசையூட்டப்பட்டு, அந்த இருதயம் மாற்றப்பட்டிருந்தாலொழிய இயேசுவானவர் வரும்பொழுது, நீங்கள் தனிமையாய் பூமியின் மேல் விடப்படுவீர்கள். நினைவிருக்கட்டும். இந்த காலைகளின் ஒன்றில் ஒரு உயிர்த்தெழுதல் இருக்கும். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை மாத்திரமே தேவன் அவரோடு கொண்டு வருவார். 169 “சீஷர்கள் மத்தியில் நடந்துகொண்டு தம்மைத்தாமே அறியும்படி செய்தல்” உதாரணமாக “தம்மைத்தாமே அறியும்படி செய்தல்” 170 சில நேரங்களில் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து என்னை குறை கூறுகின்ற மனிதர் தேசத்தினூடாக எல்லா இடங்களிலுமே எனக்கு உண்டு. ஏன்? என்னுடைய சகோதரனே, தெய்வீக சுகமளித்தல் பரிசுத்த ஆவியின் சுபாவமாக இருக்கையில் என்னால் எப்படி அதனின்று விலகி இருக்க முடியும்? தேவனுடைய ஆவியினால் பிறந்த எந்த மனிதனும் இயற்கைக்கு மேம்பட்டதை விசுவாசித்தாக வேண்டும். ஏனென்றால் அவன் தேவனுடைய ஒரு பாகமாக இருக்கிறான், அவன் தேவனுடைய ஒரு சந்ததியாய் இருக்கிறான். 171 நான், “நீர் உம்முடைய தகப்பனைப் போன்று காணப்படுகிறீர்” என்றேன். உமக்கு இதைப்போன்று ஒரு மூக்கு இருக்கிறது. அப்பாவைப் போன்று எனக்கு ஒரு வாய் இருக்கிறது என்று என்னிடம் சொல்லுகிறீர்கள். ஏன்? அவர் என்னுடைய தகப்பனார். நான் அவரைப் போன்று காணப்பட எனக்கு உரிமை இருக்கிறது. 172 அல்லேலூயா! அப்படியானால் தேவன் என்னுடைய தகப்பனாய் இருக்கிறாரென்றால், இயற்கைக்கு மேம்பட்டதை விசுவாசிக்க எனக்கு ஒரு உரிமை உண்டு. ஏனென்றால் நான் இயற்கைக்கு மேம்பட்ட ஆவியினால் பிறந்திருக்கிறேன். அது என்னிலிருந்து ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஜீவியத்தை உண்டாக்குகிறது. உட்புறத்திலும், வெளிப்புறத்திலும், நான்—நான் ஒரு களிமண்ணான மனிதனாயிருக்கிறேன். நீங்கள் ஒரு களிமண்ணான மனிதனாய் இருக்கிறீர்கள். ஆனால் உட்புறத்திலோ நீங்கள் தேவனுடைய ஆவியினால் பிறக்கும்பொழுது அங்கே உள்ளே நீங்கள் இயற்கைக்கு மேம்பட்ட ஜீவனாகின்றீர்கள். அந்த இயற்கைக்கு மேம்பட்ட ஜீவனானது அக்கரையிலுள்ள அதனுடைய பரலோக வீட்டிற்காக பசியாயும், தாகமாயுமிருக்கிறது. அது உண்மை. ஆமென். இதை கவனியுங்கள். 173 அங்கே அவர்கள் இருந்தனர். இப்பொழுது இங்கே அவர் நடந்து கொண்டிருக்கிறார். அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறார். சந்தோஷம் வரத்துவங்குகிறது. சீஷர்கள் தங்களுடைய பாதையில் அதிக எழுச்சியை பெறத்துவங்குகிறார்கள். ஏதோ காரியம் சம்பவித்திருக்கிறது. அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறார். 174 ஒவ்வொரு மனிதனோடும் அல்லது ஸ்திரீயோடும் அது அந்தவிதமாகத்தான் இருக்கிறது. அவன் தேவனுடைய ஆவியினால் பிறக்கும்பொழுது, அந்த உண்மையான உயிர்த்தெழுதலைக் காண்கிறான். எந்த மனிதனும், அவன் தானே கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக மரித்து, மறுபடியுமாய் பிறந்து, பரிசுத்த ஆவியினால் புதுப்பிக்கப்பட்டாலொழிய, இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறார் என்பதை அறியான். பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து சாட்சி பகரும்வரை ஒவ்வொரு மனிதனும் வேத சாஸ்திரத்தின்படி மட்டுமே விசுவாசிக்கிறான். அவன் அதை வெறுமனே காகிதத்தின் மேல் மட்டுமே பார்க்கிறான். நீங்கள் ஜீவியத்தின் மரித்த காரியங்களிலிருந்து கிறிஸ்து இயேசுவுக்குள்ளான ஒரு புதியதும், ஜீவிக்கின்றதுமான நம்பிக்கைக்கு வரவேண்டும். இந்தக் காலையில் அதை பெறாமலிருக்கிற ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ இழக்கப்பட்டவர்களாயிருக்கிறார்கள். அது உண்மை. 175 ஓ, என் சகோதரனே, சகோதரியே தேவனோடு சரிப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த இருதயம் சுத்தமாக்கப்படட்டும், அங்கே பரலோகத்தின் சந்தோஷ மணிகள் ஒலிக்கட்டும், ஒரு உயிர்த்தெழுதல் உண்டு. இருதயத்திற்குள்ளோ இயேசுவானவர் ஜீவிக்கிறார், ஆளுகை செய்கிறார். 176 கவனியுங்கள், அவர்கள் தொடர்ந்து பாதையின் ஓரமாக போய்க் கொண்டிருக்க துவங்குகையில், நான் அது அங்கே அத்தகையை ஒரு அற்புதமான காரியமாயிருந்தது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு பாதையில் தொடர்ந்து சென்றனர் என்று வேதம் கூறியுள்ளது. அவர்கள் முழு இரவும் தங்கப் போவதாக இருந்த இடத்தண்டை, அவர்கள் அந்த முடிவான இடத்திற்கு வந்தபோது, அவர்கள் அவரை விட்டுச் செல்ல விரும்பவில்லை. 177 அவரைக் குறித்த ஏதோ காரியம் இருந்தது. நீங்கள் எப்பொழுதாவது அவரோடு தொடர்பு கொள்ள நேர்ந்தால் நீங்கள் அவரை விட்டுச் செல்ல விரும்பமாட்டீர்கள். அது உண்மை. அவர்கள், “உள்ளே வாரும், எங்களோடு தங்கியிரும்” என்றனர். 178 நான் அதை விரும்புகிறேன். “உள்ளே வந்து தங்கியிரும்.” இயேசு கிறிஸ்துவோடு எப்பொழுதும் தொடர்பு கொள்ள வருகிற எந்த மனிதனும் அவர் தங்கியிருக்கவே விரும்புகிறான். “எங்களோடு தங்கியிரும்.” உலகம் மரித்துப் போயிருக்கிறது. கிறிஸ்துவோ எழும்பி இருக்கிறார். இதோ அவர் நம்மோடு ஜீவித்துக் கொண்டிருக்கிறார். சரி. 179 “உள்ளே வந்து எங்களோடு தங்கியிரும். அந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில்…” இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் இயேசுவை, அவர்கள் அவரை உள்ளே அழைத்தனர். 180 கிறிஸ்துவுக்குள் வருகின்ற எந்த மனிதனும், நீங்கள் ஜீவிக்கின்றதான உங்களுடைய சிறிய வீட்டிற்குள்ளாக கிறிஸ்துவை அழைத்தாக வேண்டும். அவர் அழைப்பினால் மட்டுமே வருகிறார். அவர் தம்மைத்தாமே உங்கள் மேல் தள்ளிக்கொண்டு வருவதில்லை. நீங்கள், “எனக்கு அந்த மதவெறி கொண்ட காரியம் ஏதுமே எனக்கு வேண்டாம்” எனலாம். பரவாயில்லை, கவலைப்படாதீர்கள். அது அங்கே இருக்காது. ஆனால் நீங்கள் விருப்பமாயும், ஆயத்தமாயுமிருந்து கொண்டு, உலகத்தின் காரியங்களை விற்றுப்போட ஆயத்தமாயிருக்கும்போதே! 181 கடந்த இரவு ஊழியக்காரர்களிடம் பேசிக் கொண்டிருந்ததுபோன்றே, நான், “ஆம், நீங்கள் இங்கே பள்ளிக்குப் போகிறீர்கள், நீங்கள் உங்களுடைய வேத சாஸ்திரத்தை கற்றுக் கொள்கிறீர்கள், அங்கிருந்து வெளியே சென்று வாசிக்கவும், எழுதவும் மற்றும் கணிதத்தையும் கற்று, ஆப்பிரிக்காவுக்குச் சென்று, அந்த சுதேசிக்கு முதல் முறை நீங்கள் செய்ததைக் காட்டிலும் இரட்டத்தனையாய் நரகத்தின் மகனாய் ஆக்குகிறீர்கள்” என்றேன். 182 ஆனால் நான், “இயேசுவானவர், அவருடைய சீஷர்கள் சென்று, ஊழியர்களாய் இருக்க கட்டளை கொடுத்தபோதோ,” அவர், “என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, ‘இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ முதலாவதாக எருசலேம் நகரத்தில் இருங்கள்.’ ஏதோ ஒரு குருமார் பள்ளியல்ல, ஏதோ ஒரு நீதிபோதனையின் பள்ளியல்ல” என்றார். அவர் “நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள். என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேமில் நகரத்தில் இருங்கள். பரிசுத்த ஆவி உங்கள் மேல் வந்த பின்னர், எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், உலகத்தின் கடைசி பரியந்தமும் நீங்கள் எனக்கு ஊழியர்களாகவோ அல்லது சாட்சிகளாகவோ இருப்பீர்கள் என்றாரே’” என்று கூறினேன். 183 ஒரு மனிதன் கல்வியினாலல்ல, வேத சாஸ்திரத்தினாலல்ல, சபை அங்கத்தினானதினால் அல்ல, பரிசுத்த ஆவியினால் தரிப்பிக்கப்படும் வரைக்கும்! ஆமென். [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.]…எருசலேமிற்குச் சென்று பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் நிரப்பப்படும் வரைக்கும் அவன் பிரசங்க பீடத்திற்கோ, ஒரு ஊழியனாகவோ அல்லது மற்ற ஏதோ ஒன்றாக இருக்க தகுதியற்றவனாயிருக்கிறான். அது உண்மையே. 184 பிலிப்பு அங்கே புறப்பட்டுச் சென்றபோது, முதல் ஊழியனாய் வெளியே புறப்பட்டு சமாரியாவுக்குச் சென்றான். அவன் அங்கே சென்றிருந்தபொழுது, அவன் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, வியாதியஸ்தரை சுகப்படுத்தி, குருடருடைய கண்களை திறந்து, செவிடர்களுடைய காதுகளின் அடைப்பை எடுத்தான். அந்தப் பட்டணத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருந்தது. 185 எங்கெல்லாம் ஒரு அசலான உண்மையான தேவனுடைய ஊழியன் அல்லது ஒரு பிரசங்கியார் போகிறாரோ, அங்கே கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றிய சந்தோஷமணிகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். உங்களால் மரணத்தையும், ஜீவனையும் ஒன்று சேர்த்து வைக்கமுடியாது; அது பிரிந்து விடும். ஆமென். பின்னர் கிறிஸ்து மனித இருதயத்திற்குள் வரும்பொழுது, அவர் உலகத்தின் செத்த காரியங்களிலிருந்து உன்னைப் பிரித்து, ஒரு ஜீவிக்கின்ற நம்பிக்கைக்கு, கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாய் ஆக்குகிறார். அவன் ஒரு புதிய மனிதனாய் ஆகின்றான். சகோதரரே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இன்றைக்கு உலகத்திற்கு ஏதாவது காரியம் தேவையாயிருக்கிறதென்றால், அது ஒரு அசலான உண்மையான கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அவர்களுக்கு பிரசங்கிக்கப்படுவதேயாகும். 186 அவர்கள், “வந்து எங்களோடு தங்கி இரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று. நல்லது அந்த ஸ்திரீகள் என்ன கூறினார்களோ அதை நாங்கள் கேட்டோம், அதெல்லாம் போதுமான உண்மையாயிருக்குமா? என வியக்கிறோம்” என்கிறார்கள். நெடுக போய்க்கொண்டிருக்கையிலே, வேறு ஏதோ காரியத்தைக் குறித்து ஒருவிதமாக சிந்தித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவன், “சிறிது நேரம் உள்ளே இருப்போம்” என்றான். அவர்களோ, “உள்ளே இப்பொழுது வாரும், எங்களோடு தங்கி இரும்” என்றார்கள். அவர் அப்புறம் போகிறவர்போல காண்பித்தார். நீங்கள் என்ன செய்வீர்கள் என்று காணும்படியாக அநேக முறைகளில் அவர் அதைச் செய்கிறார். அது உண்மையே. எனவே பின்னர் கொஞ்ச நேரம் கழித்து அவர்கள் அவரை வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் “உள்ளே வாரும்” என்றார்கள். 187 அவர்கள் உள்ளே சென்று அநேகமாக சாப்பிடும் பொருட்களின் பட்டியலை எடுத்து, “இப்பொழுது விருந்திலே உமக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்கள். 188 அவர்கள் பேசத்துவங்கி, “எங்களுடனே தங்கி இரும். நாங்கள் உம்மை நேசிக்கிறோம். ஏன்? நீர் எங்களுடைய மேய்ப்பனாய் இருக்க நாங்கள் ஆசிக்கிறோம். மற்ற ஜனங்களைக் காட்டிலும் உம்மைக் குறித்த ஏதோ காரியம் வித்தியாசமாய் இருக்கிறது. உம்மைக் குறித்து ஏதோ காரியம் உண்டு. மற்ற மனிதரைக் காட்டிலும் நீர் சிறிது வித்தியாசமாய் வேத வார்த்தைகளை விளக்குகிறீர். நீர் எங்களோடே கூட வரவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். நீர் எங்களுடைய நண்பர்களாகிய பேதுரு, யாக்கோபு, யோவான் முதலானவர்களை சந்திக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இயேசுவை பின்பற்றியிருந்த சில நண்பர்கள் எங்களுக்கு உண்டு. நீர் உள்ளே வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நீர் அவரைக் குறித்து அவ்வளவு அதிகமாய் அறிந்திருக்கிறீர் என்பது போன்று தோன்றுகிறது” என்றார்கள். அது அவராய் இருந்தது, அவர்தாமே. அது அவராய் இருந்தது. அவர் உங்கள் பக்கத்தில் அநேக முறை அமருகிறார். 189 இதோ அவர் அங்கே நின்று, அவர் அவர்களிடத்தில் பேசத் துவங்கினார். எனவே நீங்கள் அறிந்த முதல் காரியம், அவர் அப்பத்தை எடுத்தபோது…அவர் அப்பத்தை எடுத்தார். இப்பொழுது அவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டிருந்தன. அவர் அப்பத்தைப் பிட்டார். அவர் தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்து அதை ஆசீர்வதித்து அதைப் பிட்டார். அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. நான் அதை விரும்புகிறேன். அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. கிறிஸ்துவின் சபைக்கு அதனுடைய கண்கள் திறக்கப்பட வேண்டிய ஒரு நேரம் எப்பொழுதாவது இருந்திருக்குமானால் அது இன்றைக்குத்தான். நமக்கு இன்னும் அதிகமான அப்பம் பிட்குதல் தேவை. அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அது அவர்தான் என்பதை அவர்கள் அடையாளங் கண்டு கொண்டனர். 190 ஓ, நண்பனே, அந்தவிதமாய் அவர் உங்களை எப்பொழுதாவது ஆசீர்வதித்திருக்கிறாரா? உலகத்தின் காரியங்களிலிருந்து அவர் எப்பொழுதாவது உங்களை உடைத்து, உங்களை வேறுபிரித்திருக்கிறாரா? ஒரு உடைக்கப்படுதல், ஒரு திறக்கப்ப்படும் நேரம் எப்பொழுதுதாவது உண்டாயிருக்கிறதா? அதுதான் இன்றைக்கு சபைக்கு தேவையாயிருக்கிறது, ஒரு உடைக்கப்படுதலும், திறக்கப்படுதலுமே தேவையாயிருக்கிறது. அவனுடைய கண்கள் திறக்கப்பட்டன. இன்னும் சரியாக சொல்லப்போனால் அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை அடையாளங்கண்டு கொண்டனர். அந்த விதமாகவே அவர் அந்த அப்பத்தைப் பிட்டார். அந்த விதமாகவே அவர்கள் அவரை அடியாளங் கண்டு கொண்டனர். என்னே, எத்தனை முறைகள்… 191 இங்கே அண்மையில், இங்கே அந்த மூலையில் ஒரு அம்மாள் இருந்தாள். அவளுக்கு க்ஷ்யரோகம் இருந்தது. இன்று காலையில் அவள் சபையில் இருக்கிறாள் என நான் யூகிக்கிறேன். அந்த ஸ்திரீயினுடைய பெயரை இப்பொழுது என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை. அவள் இங்கே எங்கோ சற்றுத் தாண்டி ஜீவிக்கிறாள்…ரீஸ் (Reese) உமக்கு நன்றி சகோதரி. அது சரியே. திருமதி ரீஸ், அவள் அங்கே படுத்துக்கிடந்தாள். மூன்றோ அல்லது நான்கு பிள்ளைகளோ இருந்தது. அவளுக்காக ஜெபிக்க நான் அங்கு சென்றேன். அவள் சுகவீனமுற்றோரின் பாதுகாப்பு இல்லத்திலிருந்து கைவிடப்பட்டு, மரிக்கும்படி அனுப்பி விடப்பட்டிருந்தாள். எனவே நான் அவளுக்காக ஜெபிக்கும்படி சென்றிருந்தேன். 192 அங்கே எனக்கு பக்கத்து வீட்டில் ஒரு நாத்திகன் வசித்து வந்தான், அவன் அரசாங்கத்தில் வேலை செய்து வந்தான். திரு.ஆன்ட்ரூஸ். (Andrews) என்னுடைய பழைய இரு சக்கர மிதிவண்டியில் நான் அந்த மூலையைக் கடந்து போய்க் கொண்டிருந்தேன். அதற்கு இரண்டு இரவுகளுக்கு முன்னால் ஓர் இரவு நான் அவளுக்காக ஜெபித்திருந்தேன். நான் வீட்டிற்குச் சென்றேன். நான் என் முன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கையில் அந்த ஸ்திரீ ஜீவிப்பாள் என்று எனக்கு கர்த்தர் ஒரு தரிசனத்தைக் காட்டினார். 193 எனவே, நான் அங்கே சென்றேன். நான், “உனக்காக நான் கர்த்தர் உரைக்கிறதாவதை உடையவனாயிருக்கிறேன். நீ ஜீவிக்கப் போகின்றாய்” என்றேன். அவள், “ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக” என்று அந்த சிறு ஏழையானவள் கூறினான். 194 நான், “நீ எழுந்து, அவரைத் தொழுது கொண்டு, உன்னுடைய பாவங்களைப் போக்கிக் கழுவ, கர்த்தருடைய நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வாயா?” என்று கேட்டேன். 195 அவளோ, “தேவன் என்னைச் செய்யும்படி கூறிய எந்தக் காரியத்தையும் நான் செய்வேன். நீர் வந்து என்னை நடத்தும், எனக்குச் சொல்லும், நான் அதைச் செய்வேன்” என்றாள். நான், “சரி” என்றேன். 196 அதற்கு சில காலைகள் கழித்து நான் அங்கே வீதிவழியாய் போய்க் கொண்டிருந்த ஒரு—ஒரு மனிதனை சந்தித்தேன். அது திரு.ஆன்ட்ரூஸ் ஆக இருந்தது. அவர், “பிரசங்கியாரே, ஒரு நிமிடம் அங்கேயே காத்திரும்” என்றார். இந்த காலை நேரத்திலா என்று நான் எண்ணினேன். அவர், “பிரசங்கியாரே, ஒரு நிமிடம் அங்கேயே காத்திரும்” என்றார். அவர், “நீர்—நீர் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்” என்றார். நான், “பலசரக்கு கடை வரைக்கும்” என்றேன். அவர், “உம்மைக் குறித்து நீரே வெட்கப்படவில்லையா?” என்றார். நான், “என்ன?” என்றேன். 197 “பாவம் அங்கே மரித்துக் கொண்டிருக்கின்ற அந்த ஏழைத் தாயாரை நீ ஜீவிக்கப் போகிறாய் என்று கூறுகிறீரே” என்றார். நான், “நல்லது, அவள் ஜீவிக்கத்தான் போகிறாள்” என்றேன். அவர், “அவள் ஜீவிக்கப் போகிறாள் என்று உமக்கு எப்படித் தெரியும்?” என்றார். நான், “இயேசுவானவர் அவ்விதமாய் கூறியிருக்கிறார். அந்தக் காரணத்தினால்தான் எனக்குத் தெரியும்” என்றேன். “உனக்கு எப்படித் தெரியும்?” என்றார். 198 நான், “அவர் எனக்கு அவளைப் பற்றின ஒரு தரிசனத்தை காண்பித்தார்” என்றேன். அதே விதமாகவே அவர் அதை செய்தார். அது அப்படி இருக்கப் போவதை நான் அறிந்திருந்தேன். அது உண்மை. 199 அவர், “நான் என்னைக் குறித்து வெட்கப்பட்டிருப்பேன்” என்றார். மேலும், “நீர் சுற்றி வளைத்து அந்த விதமாக ஜனங்களை வஞ்சிக்கின்றீர்” என்றார். “நீர் அவமானப்பட்டிருக்க வேண்டும். இப்பொழுது முதலில் உம்மைச் சந்தித்து உம்மோடு இந்தவிதமாக பேச எனக்கு ஒரு விதத்தில் கடினமாய் உள்ளது என்பதை நான் அறிவேன்” என்றார். 200 நான், “அதெல்லாம் பரவாயில்லை, நீர் உம்முடைய சொந்த கருத்துக்களை உடையவராய் இருக்கிறீர். நானும் கூட என்னுடையதை உடையவனாய் இருக்கிறேன்” என்றேன். நான் என்னுடைய பழைய இருசக்கர மிதிவண்டியை எடுத்து, ஓட்டிச் சென்றேன். 201 அதற்கு இரண்டு நாட்கள் கழித்து அவருடைய மனைவி, ஒரு கிறிஸ்தவ ஸ்திரீயாய் உள்ளவள், அவள் வியாதிப்பட்டாள். நான் அங்கே சென்றேன். நான், “திரு. ஆன்ட்ரூஸ் (Andrews) நான் உங்களுக்கு ஏதாவது செய்யலாமா?” என்றேன். 202 அவர், “இங்கே பாரும்” என்றார். மேலும், “எங்களுக்கு ஒரு நல்ல வைத்தியர் இருக்கிறார்” என்றார். மேலும், “உன்னிடத்திலிருந்து எந்த உதவியும் எங்களுக்குத் தேவையில்லை” என்றார். 203 நான், “உமக்கு நன்றி” என்றேன். நான், “உமக்கு ஒரு நல்ல வைத்தியர் இருக்கிறார் என்பதை நான் அறிவேன்” என்றேன். அவருடைய பெயரை அவர் கூறினார். இந்தப் பட்டனத்தில் அவர்—அவர் ஒரு அருமையான வைத்தியர். என்னுடைய ஒரு நண்பர். நான், “அவர் ஒரு நல்ல வைத்தியர்” என்றேன். 204 அவர், “அவளுக்கு குடல் வால்வு உள்ளது. அதை நாங்கள் வெளியே எடுத்துவிட வேண்டும். அவ்வளவுதான்” என்றார். மேலும் “இங்கே எங்களைச் சுற்றி எந்த ஜெபமும் வேண்டியதில்லை” என்றார். 205 நான், “திரு. ஆன்ட்ரூஸ் நான் அதை கேட்கவில்லையே” என்றேன். நான், “உங்களுடைய விறகை நான் வெட்ட முடியும் என்றே நான் வெறுமனே உங்களிடம் கூற விரும்பினேன். உங்களுக்காக என்னால் முடிந்த எதையாவது நான் செய்ய முடியும்” என்றேன். 206 எனவே, ஓ, அதைக் குறித்து அவர் மதியாமல் இருந்தார். அவரோ ஜெபத்துடன் எதையும் செய்ய விரும்பவில்லை. நான், “சரிதான்” என்று கூறினேன். எனவே நான் வீட்டிற்குத் திரும்பிச் சென்றேன். நான், திரும்பினபோது ஏன்? அவர்கள் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 207 அடுத்த நாள் காலை, நான் ரோந்து செல்லத் துவங்கினேன். நான்—நான் ஒரு வேட்டைக்காவலனாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னுடைய சிறிய பழைய துப்பாக்கியை எடுத்து கட்டிக்கொண்டு, நான் வீதிவழியாய் புறப்பட்டேன். நான் வீதிவழியாய் தொடர்ந்து நடந்து போய்க்கொன்டே இருந்தேன். அங்கே அதனூடாக போய்க்கொண்டே இருந்தேன். 208 அங்கே முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா? ஏதோ ஒன்று என்னிடத்தில் “திரும்பி மீண்டும் போ” என்றது. அதுதான் அந்த உயிர்த்தெழுந்த இயேசுவாக இருக்கிறது. “திரும்பி மீண்டும் செல்.” நான், “ஓ, ஒருவேளை நான் அப்படியாய் உணருகிறேன் போலும்…” என்று எண்ணிக் கொண்டேன். ஏதோ ஒன்று என்னிடம், “திரும்பிப் போ” என்றது. 209 நான் அப்படியே சுற்றித் திரும்பிச் சென்றேன். நான் பொதுப்பணித்துறை நிர்வாக தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். நான் உயர்வான பாதை வழியாய் ரோந்து போய்க்கொண்டிருந்தேன். எனவே தொலைபேசியில் அழைத்து, அந்த நாள் அன்று நான் வேலை செய்யவில்லை என்பதை அவர்களிடத்தில் கூறினேன். அப்பொழுது ஒருவிதமாக மழை தூறிக்கொண்டு இருந்தது, இருந்தாலும் வேலையிலிருந்து என்னை தடை செய்யாதபடிக்கு ஓரளவாக பெய்து கொண்டிருந்தது. ஆனால் நான் திரும்பிச் சென்றேன். ஏன் என்பதை நான் அறியேன். 210 நான் கீழே உட்கார்ந்து என்னுடைய சிறிய துப்பாக்கியை தனியாக எடுத்து, அங்கே நின்று கொண்டு, அதை மெருகேற்றிக் கொண்டிருந்தேன். நான்…மேடா என்னிடத்தில், என்னுடைய மனைவி, அவள், “நீர் பின்னால் என்ன செய்து கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டாள். 211 நான், “எனக்குத் தெரியாது. அவர் என்னை திரும்பி வீட்டிற்கு போகச் சொன்னார்” என்றேன். “பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். அப்படியே திரும்பி வந்து விட்டேன்” என்றேன். நான் அங்கே கீழே உட்கார்ந்து அந்த சிறு பழைய துப்பாக்கியை மெருகேற்றிக் கொண்டிருந்தேன். 212 முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா? வீட்டைச் சுற்றி வரும்பொழுது நான் கவனித்தேன், இதோ அவர் வந்தார், அவருடைய தொப்பி பக்கவாட்டில் தொங்க, உங்களுக்குத் தெரியுமா? அவருடைய மூக்கிலிருந்து சளி வந்து கொண்டிருந்தது. அவர் உள்ளே வந்தார். அவர் சொன்னார்…[சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின் மேல் மூன்று முறை தட்டுகிறார்—ஆசி.] அவர், “திருமதி பிரான்ஹாமா?” என்று கேட்டார். அவள், “ஆம்” என்றாள். “பிரசங்கியார் இங்கே இருக்கிறாரா?” என்றார். அவள், “ஆம்,” என்று கூறி, “உள்ளே வாரும் திரு. ஆன்ட்ரூஸ்” என்றாள். “ஹலோ, பிரசங்கியாரே” என்றார். நானோ, “காலை வணக்கம் திரு.ஆண்ட்ரூஸ். நாற்காலியில் உட்காரும்” என்றேன். 213 அவர், [சகோதரன் பிரான்ஹாம் மூச்சு வலிக்கிறார்.—ஆசி.] “நீர்—நீர் திருமதி ஆன்ட்ரூஸைக் குறித்து கேள்விப்பட்டீரா?” என்று கேட்டார். நான், “இல்லை” என்றேன். அவர், “இருக்கட்டும்” என்று கூறிவிட்டு, “பிரசங்கியாரே, அவள் மரிக்கப் போகிறாள்” என்றார். 214 நான், “ஓ அது மிகவும் மோசமாய் உள்ளது” என்றேன். நான்,—“நான் அதைக் கேட்க வெறுக்கிறேன்” என்றேன். “இருந்தாலும் நீங்கள் ஒரு நல்ல வைத்தியரை உடையவராயிருக்கின்றீர்கள் என்பதை நான் அறிவேன்” என்றேன். அவர், “ஆம்” என்றார். அவர், “ஆனால் அது—அது—அது குடல்வால்வு அல்ல” என்றார். நான், “அது அல்லவா? இல்லையா?” என்றேன். 215 அவரோ, “இல்லை. நாங்கள் லூயிவில்லிலிருந்து, அங்கிருந்து இப்பொழுது ஒரு விசேஷித்தவரை வரவழைத்தோம்” என்றார். மேலும், “அது ஒரு இரத்தக் கட்டியாம். அது அவளுடைய இருதயத்தை அடைய சில மணி நேரம் தாம் உள்ளதாம்” என்று கூறிவிட்டு, “அது அவளுடைய இருதயத்திற்கு சென்று கொண்டிருக்கிறதாம்” என்றார். அவர், “அவள் மரிக்கப் போகிறாள்” என்றார். 216 நான், “என்னே, அது மிகவும் மோசமாய் உள்ளது. நான் அதை கேட்கவே வெறுக்கிறேன்” என்றேன். நான் தொடர்ந்து துப்பாக்கியை மெருகேற்றிக் கொண்டிருந்தேன். 217 அவர், “இருக்கட்டும்” என்று கூறிவிட்டு, அவர், “இருக்கட்டும், ஊ, அவளுடைய ஊ, அவள் மிகவும் மோசமாய் இருக்கிறாள்” என்றார். 218 நான், “ஆம். ஐயா” என்றேன். நான், “அதனுடைய…” என்றேன். அவனை சற்று வியர்க்கும்படி விட்டேன். நான் அப்படியே தொடர்ந்து துப்பாக்கிக்கு மெருகேற்றிக் கொண்டிருந்தேன். 219 அவர், “நல்லது, ஹூ, ஹூ என்று கூறிவிட்டு, அவர், “உம்மால் அவளுக்கு உதவி செய்ய முடியும் என்று நீர் எண்ணுகிறீரா” என்று கேட்டார். 220 நான், “என்னையா?” என்றேன். நான், “நான் ஒரு வைத்தியன் அல்ல, எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லையே ஐயா” என்றேன். நான், “நான் ஒரு வைத்தியன் அல்ல” என்றேன். 221 அவர், “நல்லது, ஊ, ஊ, உமக்குத் தெரியும்”, என்று கூறி, தொடர்ந்து, “ஹூ, நீர் ஒருக்கால்—ஒருக்கால் அவளுக்கு சற்று உதவி செய்யலாம் என்று நான்—நான்—நான் எண்ணினேன், ஹூ” என்றார். நான், “நீர் என்ன கூறுகிறீர்?” என்றேன். 222 அவர், “இருக்கட்டும், ஹூ உமக்குத் தெரியுமே! அங்கேயிருந்த அந்த ஸ்திரீயைப் போலவே…” என்றார். 223 நான், “பார்க்கலாம்” என்றேன். நான், “அது நானல்ல, அது கர்த்தராகிய இயேசுவாயிற்றே” என்றேன். அவர், “நல்லது…” என்றார். நான், “நீங்கள் அவரில் விசுவாசம் கொண்டிருக்கவில்லை என்று எண்ணிக் கொண்டேன்” என்றேன். 224 அவர் முன் நடந்த ஒரு சிறு சம்பவத்தை எனக்கு கூறினார். அவருடைய—அவருடைய பாட்டி இல்லை அவருடைய—அவருடைய அத்தை என்று நான் நினைக்கிறேன், அவள் ஒரு வயதான சுற்றுப்பயண பிரசங்கியாருக்கு அந்த வருடத்தின் முடிவிலே ஐந்து டாலர்கள் கொடுப்பதாக ஒரு வாக்களித்திருந்தாளாம். அவள் துணிகளை துவைப்பவளாயிருந்தாள். அந்தப் பணத்தை அவருக்கு கொடுக்க அவள் பணமில்லாதிருந்தாள். துவைக்க வேண்டிய நாள் வந்தது. அப்பொழுது அந்த பிரசங்கியார் அங்கே இருக்கப் போவதாக இருந்தது. அவளிடத்திலோ எந்தப் பணமும் இல்லாதிருந்தது. அவளிடத்தில் பத்து அமெரிக்க காசுகளோ அல்லது ஒரு நிக்கல் அல்லது அது ஒரு பண்டைய பெரிய நீள்கட்டி சோப்பிற்கான கிரயமாய் இருந்தது. அவள் ஒருவனை கடைக்கு அனுப்பினாளாம். அவன் திரும்பி வந்து, அந்த நீள்கட்டி சோப்பை கொடுத்தான் என்று கூறினார். அவள் அந்த நீள்கட்டி சோப்பை எடுத்துக் கொண்டு,…அழுதுகொண்டே இருந்தாளாம். “அவள் கீழே குனிந்து, அவளுடைய பழைய பெரிய மேலாடையை எடுத்து அவளுடைய கண்ணீரை துடைத்துக் கொண்டாள்” என்றார். 225 அவள் அந்த பழைய கொதிநீர் பாத்திரத்தண்டை இருந்தாளாம். உங்கள் தாய்மார்கள் வழக்கமாக உபயோகிப்பது போன்றே. உண்மையிலேயே, இப்பொழுது நீங்கள் வெறுமனே ஒரு பொத்தானை அழுத்துகிறீர்கள். அது முடிந்து விடுகிறது. நீங்கள் பாருங்கள். 226 ஆனால் அவள் அந்த சலவைத் தேய்ப்புக் கட்டையில் இந்தவிதமாய் அந்த சோப்பை வைத்தாள். அதன் மேல் தேய்க்கும்போது, அவள் ஏதோ ஒன்று உராய்வதைக் கேட்டாள். இவள் கீழே நோக்கிப் பார்க்க நேர்ந்தது, அவள் அந்த நீள்கட்டி சோப்பிலே அந்த வயதான சுற்றுப் பயனை பிரசங்கியாருக்கு வாக்களித்திருந்த ஐந்து டாலர் பொன் நாணயம் அங்கே ஒட்டிக் கொண்டிருப்பதை பார்த்தாளாம். நான், “அது எப்படி அங்கே இருந்தது?” என்றேன். அவர், “நானே வியந்து கொண்டிருக்கிறேன்” என்றார். 227 நான், “அதைச் செய்தது உயிர்த்தெழுந்த இயேசு. அவள் நல்ல முழுமனதோடு வாக்களித்திருந்தாள். அவளால் அதைச் செய்ய முடியுமென்று அவள் நினைத்தாள். தேவன் அவளுக்காக ஒரு வழியை உண்டு பண்ணியிருந்தார்” என்றேன். அந்த வழியிலேயே நீங்கள் அவரை அடையாளங்கண்டு கொள்கிறீர்கள். அவர் என்ன செய்கின்றாரோ அதை அந்த விதமாகவே, அவர் செய்கின்ற காரியங்களை அந்த வழியிலேயே அவர் செய்கிறார். அவள்…கூறினாள். 228 அவர், “நல்லது, நான்—நான் எப்பொழுதுமே வியப்படைந்துள்ளேன்” என்றார். தொடர்ந்து, “அது எப்பொழுதுமே என் இருதயத்தில் இருந்து கொண்டிருக்கிறது, அப்படி அங்கே இருந்திருக்குமா என வியப்புறுகிறேன்” என்றார். நானோ, “அப்படி அங்கே இருந்திருந்தால்?” என்றேன். நான், “திரு.ஆன்ட்ரூஸ் அங்கே இருக்கிறது” என்றேன். 229 அவர், “நல்லது, சகோதரன். பிரான்ஹாம், அவரால்—அவரால்—அவரால் என் மனைவிக்கு உதவி செய்ய முடியுமென்று, அவளுக்கு…நீர் நினைக்கிறீரா?” என்றார். நான், “நிச்சயமாக. அது அவரால் முடியும் என்பதை நான் அறிவேன்” என்றேன். நான், “நீர் …” என்றேன். அவர், “நீர் அவளுக்காக ஜெபிப்பீரா?” என்றார். 230 நான், “இல்லை, நீர் அவளுக்காக ஜெபியுங்கள்” என்றேன். நான், “ஜெபிக்க வேண்டிய நபர் நீர்தானே” என்றேன். அவர், “நல்லது, எனக்கு எப்படி ஜெபம் செய்வது என்றே தெரியாது” என்றார். 231 நான், “அது எந்த நன்மையும் செய்யாது, இருந்தாலும் நீர் ஜெபம் செய்தால் நல்லது” என்றேன். நான், “கீழே உட்கார்ந்து அவரிடத்தில் பேசும்” என்றேன். அவர், “நல்லது, நான் அதை எப்படி செய்வது?” என்றார். 232 நானே, “உம்முடைய நாற்காலியை பின்னாகத் தள்ளி அப்படியே அங்கேயிருந்து…அதன் மேல் அங்கே அப்படியே முழங்காற்படியிட்டு, அந்த மேஜையண்டை ஜெபம் செய்யுங்கள்” என்றேன். 233 எனவே அவர் அங்கே கீழே இறங்கி, அவர் ஜெபிக்கத் துவங்கினார். அவர், “இப்பொழுது” என்று கூறி, அவர், “திருவாளரே, உம்மிடத்தில் எப்படி பேசவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை” என்றார், அவர், “ஆனால் நீர் என் மனைவிக்கு உதவி செய்தால் நலமாயிருக்குமே” என்றார். 234 அவர் எழும்பி, “பிரசங்கியாரே, இப்பொழுது நாம் மருத்துவ மனையில் சென்று, அவரிடத்தில் பேசுவோம்” என்றார். மேலும், “ஒருவேளை அது மருத்துவ மனைவில் செய்ய, அங்கே நாம் சென்றால் நல்லது” என்றார். நான், “சரி” என்றேன். என்னுடைய மனைவி ஆயத்தமானாள். நாங்கள் அங்கே வெளியே சென்றோம். 235 திருமதி.ஆன்ட்ரூஸ் அவர்களால் அங்கே, அவளுடைய கண்களைக்கூட இனி காணமுடியாது, இரத்தமானது பிரித்து விட்டது. உங்களுக்குத் தெரியும், இரத்தம் கட்டிப் போனதே இதற்கு காரணமாயிருந்தது…தண்ணீர். உங்களால் அவளுடைய கண்கள் பார்க்க முடியாது. நான் அவளை நோக்கிப் பார்த்தேன். ஓ என்னே! என்னுடைய மனைவி அழ ஆரம்பித்துவிட்டாள். 236 நான் முழங்காற்படியிட்டு ஜெபிக்கத் துவங்கினேன். நான், “அன்புள்ள தேவனே, இப்பொழுது நீர் அந்த ஸ்திரீக்கு உதவி செய்யும் என்று நான் ஜெபிக்கிறேன்” என்றேன். நானோ, “பார்ப்பதற்கு நாங்கள் எல்லோரும் நம்பிக்கையற்றவர்களும், உதவியற்றவர்களுமாய் இருக்கிறோம். வைத்தியரோ அவரால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருக்கிறார், இருந்தபோதிலும் அவள் இங்கே மரித்துக் கொண்டிருக்கிறவளாய் படுத்துக் கொண்டிருக்கிறாள்” என்றேன். நான், “ஓ, தேவனே, நாங்கள் என்ன செய்ய முடியும்? இப்பொழுது எந்தக் காரியத்தையுமே நாங்கள் எப்படி செய்ய முடியும்? நாங்கள் உம்மை அழைக்கிறோம். நீர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தீர் என்றும், நீர் எங்கள் மத்தியில் ஜீவனோடு இருக்கிறீர் என்பதையும் நாங்கள் அறிவோம். என் கரங்களின் மேலிருக்கும் ஒளியைப் போல நீர் தொட்டு உணரக்கூடியவராய் இருக்கிறீர். நீர் இங்கே இருக்கிறீர். உம்மிடத்தில் எல்லா வல்லமைகளும் இருக்கின்றன. உம்மால் அதைச் செய்ய முடியும். இப்பொழுதும் கர்த்தாவே, உம்முடைய பார்வையில் எங்களுக்கு தயவு கிடைத்ததானால் நலமாயிருக்கும், நாங்கள் தாழ்மையுடன் வந்து இந்த ஸ்திரீக்காக நாங்கள் இரக்கத்தை கேட்கிறோம்” என்றேன். 237 நான் ஜெபித்துக் கொண்டிருக்கையில், அந்த விதமாக காரியங்கள் அசையத் துவங்கின. நான் நோக்கிப் பார்த்தேன். அவள் என்னுடைய வீட்டிற்கு தன் கரத்தில் ஒரு ஆப்பிள் பை பலகாரத்துடன் வந்து, எனக்கு கொடுப்பதை நான் கண்டேன். நான் முன் மண்டபத்தில் உட்கார்ந்து இந்த ஆப்பிள் பையை, அதை புசிப்பதற்கு வாஞ்சிக்கத் துவங்கினேன். அவர் எனக்கு அந்த தரிசனத்தைக் காண்பித்திருந்த பிறகு, நான் அப்பொழுது எழும்பி நின்றேன். 238 அது என்னவாயிருந்தது? உயிர்த்தெழுந்த கர்த்தர். அது எப்படி இருந்தது? அவர் மனுஷர் மத்தியில் இருக்கிறார். “நான் செய்கின்ற கிரியைகளை…” அவர் கிணற்றண்டையில் அந்த ஸ்திரீயினிடத்தில் அவளுடைய பாவங்களை கூறினார். அவர் பிலிப்பு எங்கே இருந்தானென்றும், அத்திமரத்தின் கீழே அவன் எப்பொழுது ஜெபித்துக் கொண்டிருந்தான் என்றும் கூறினார். அவர் மீன் எங்கே இருந்ததென்றும், அதனுடைய வாயில் நாணயம் இருந்ததையும் அறிந்திருந்தார். அவர், “பிதா கிரியைகளை எனக்கு காட்டுகிறார். அதிலிருந்து நான் கிரியை செய்கிறேன். நான் செய்கின்ற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்” என்றார். அது என்னவாக இருக்கிறது? அது உயிர்த்தெழுதலாயிருக்கிறது. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் மரிக்கவில்லை. அவர் சரியாக இங்கே இப்பொழுது நம்மோடு இருக்கிறார். இந்த வெளிச்சம் இருப்பது போல, நிச்சயமாக அவர் இந்த அறைக்குள் இருக்கிறார். அவர் அவ்வளவு உண்மைப் பொருளாயிருக்கிறார். 239 ஏன்? மனிதன் ஒரு சில வருஷங்களுக்கு முன்னர், மின்சாரம் என்றால் என்ன என்று அறியாதிருந்தான், ஆனால் அது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற பெருவேட்கை அவனுடைய இருதயத்திற்குள் அவனுக்கு இருந்தது. வெளிச்சமாக அதை அவனால் ஆக்க முடியும் என்று அவன் விசுவாசித்தான். தாமஸ் எடிசன், அவர் பத்தாயிரம் மின்சாரம் கம்பிகளின் மூலம் முயற்சித்தார். ஆனால் அப்படி இருந்தும் அவர் ஏதோ காரியத்தை கண்டார், அவர் உலகத்திற்கு மின்சாரத்தைக் கொடுத்தார். 240 மனிதன் தொலைக்காட்சியிலும் மற்ற எல்லாக் காரியங்களிலும் விசுவாசம் கொண்டான். தேவன் அது எல்லாவற்றையும் இங்கே வைத்திருக்கிறார். 241 உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமை இந்த காலையில் சரியாக இந்த கட்டடத்தில் ஒவ்வொரு பாவியையும் இரட்சிக்கவும், பரிசுத்த ஆவியினால் நிரப்பவும், உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு வியாதியிலிருந்து சுகப்படுத்தவும் இங்கே உள்ளது. அதற்கு வழிநடத்துகிற சரியான கம்பியை மட்டும் நீ அறிந்திருந்தால் நல்லது. அது அன்பும் விசுவாசமுமாயிருக்கிறது. அதுதான் சரியான கம்பி, அதற்குள்ளாக ஏறிக்கொண்டு ஒருமுறை பிரயாணம் செய்யுங்கள். அவர் உங்களுக்கு சொல்லவில்லையா என்பதைப் பாருங்கள். 242 உங்களுக்குத் தெரியும், பிராங்களின் (Franklin) மின்னலை பிடித்தபோது, அவரிடம் என்ன இருந்ததென்று அவருக்குத் தெரியவில்லை. அவர், “நான் அதைப் பெற்றுக் கொண்டேன். நான் அதைப் பெற்றுக் கொண்டேன், நான் அதைப் பெற்றுக் கொண்டேன். நான் அதைப் பெற்றுக் கொண்டேன்” என்றார். ஒரு உயிர்த்தெழுதல் உண்டாயிருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஆறுமுறை தட்டுகிறார்.—ஆசி.] அவர் ஏதோ ஒன்றைப் பெற்றுக் கொண்டிருந்தார்; அது என்னவாய் இருந்தது என்பதை அவர் அறியாதிருந்தார். 243 ஒருக்கால் சில சமயங்களில் பரிசுத்த ஆவியானவர் உன்னிடத்தில் பேசலாம், அது என்ன என்பதை நீங்கள் சரியாக அறியாதிருக்கலாம்; ஆனால் அது அங்கிருப்பதை நீங்கள் அறிவீர்கள், அந்த விதமாகவே அவர் அதைச் செய்கிறவர். அந்தவிதமாகத்தான் தேவன் காரியங்களைச் செய்கிறவர்; அவர்கள் அதை அடையாளங்கண்டு கொள்கிறார்கள். 244 இந்த திரு. ஆன்ட்ரூஸ், பின்னர், நான் வெளியே சென்றபோது, அவரிடம் கூறினேன், மூன்றாம் நாளிலே சுமார்…நல்லது, சுமார் இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு, நாங்கள் வீட்டிற்கு திரும்பி வந்தோம். அவர் வந்து… 245 அப்பொழுது, இது இங்கே சாதாரணமானதாய் இருந்தது. அவர் அங்கே குறுக்கே நடந்து வந்தார். அவர்கள் அவரை அழைத்து, “உன்னுடைய மனைவி மரித்துக் கொண்டிருக்கிறாள்” என்றனர். தொடர்ந்து, “அவளுடைய தொண்டையில் அவள் மரண சத்தத்தை உடையவளாயிருக்கிறாள். நீர் இங்கே வருவது நல்லது” என்றார்கள். 246 அவர் முழு ஏமாற்றமும் அடைந்தவராய் இங்கே வந்தார். “சகோதரன். பிரான்ஹாம்” என்று கூறி, “அவள் மரிக்கப் போகிறாள் என்று வைத்தியர் கூறிவிட்டார்” என்றார். தொடர்ந்து, “அவர் இப்பொழுது அங்கே இருக்கிறார். அவள் மரிக்கப் போகிறாள்” என்றார் என்று அவர் கூறிவிட்டார். நான், “ஆனால் கர்த்தராகிய இயேசு, ‘அவள் ஜீவிக்கப் போகிறாள்’ என்றாரே” என்றேன். “நல்லது, எப்படி முடியும்?…அவள் மரித்துப் போனால், அவளால் ஜீவிக்க முடியுமா?” என்றார். நான், “அவள் ஏற்கனவே ஜீவனோடு இருக்கிறாள்” என்றேன். 247 அல்லேலூயா! அல்லேலூயா என்பதில் உணர்ச்சிவசப்பட வேண்டாம். அதன் பொருள், “நம்முடைய தேவனை ஸ்தோத்தரியுங்கள்” என்பதாகும். அல்லேலூயா என்று ஜனங்களிடத்திலிருந்து வரவேண்டிய ஒரு காலை எப்பொழுதாவது இருந்திருக்குமானால் அது இந்த காலையே. அது உண்மை, மரணத்தின் ஒவ்வொரு நிழலும் நீக்கப்பட்டதற்காக நம்முடைய தேவனை ஸ்தோத்தரியுங்கள். அவர் ஜீவிக்கிறார். 248 கவனியுங்கள். அவர், “நல்லது, இப்பொழுது,” என்று கூறி, மேலும், “அவள் அதை எப்படி பெற்றுக்கொள்ளப் போகிறாள்?” என்றார். 249 நான், “நான்…அதை யூகித்துக் கூறவேண்டியது நானல்ல. தேவன், என்ன செய்யப் போவதாக கூறினாரோ அதை வெறுமனே நான் விசுவாசிக்க வேண்டியதாய் உள்ளது” என்றேன். 250 எனவே அதன்பிறகு அவர் மட்டுமீறிய சோகத்துக்குள் இருந்தார். கொஞ்ச நேரம் கழித்து அவர் மருத்துவமனைக்கு சென்றார். 251 இதோ அவர் திரும்பி வந்து வீட்டைச் சுற்றிக் கொண்டு மிக வேகமாக, மிக வேகமாக, மிக வேகமாக விரைந்து வந்தார். அவர் உள்ளே ஓடிவந்து, “பிரசங்கியாரே என்ன சம்பவித்தது என்று உமக்குத் தெரியுமா?” என்றார். 252 நான், “என்ன திரு.ஆன்ட்ரூஸ்?” என்றேன். நான் இன்னமும் அங்கேயே உட்கார்ந்து கொண்டு, துப்பாக்கியை மெருகேற்றிக் கொண்டிருந்தேன். அவர், “என்ன சம்பவித்தது என்று உங்களுக்குத் தெரியுமா?” என்றார். நான், “என்ன சம்பவித்தது திரு.ஆன்ட்ரூஸ்?” என்றேன். 253 “அவள் எழும்பி விட்டாள். அவளிடமிருந்து எல்லா தண்ணீரும் வெளியேறிவிட்டது” என்றார். அவள், “நான் பட்டினியால் மரிக்கிறேன்” என்றாள். மேலும், “அவர்கள் சென்று அவளுக்கு கொஞ்சம் கொழுஞ்சாற்றைக் கொண்டு வந்தார்கள். அதற்கு அவள், ‘எனக்கு கொழுஞ் சாறு வேண்டாம். எனக்கு காரசுவை மிகு இறைச்சியும், ஊறுகாயும் வேண்டும் என்றாள்’” என்று கூறினார். அவள் பசியாயிருந்தாள். 254 அது என்னவாய் இருந்தது? அது என்னவாக இருந்தது? ஏனென்றால் அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்கபீடத்தை ஐந்து முறைகள் தட்டினார்.—ஆசி.] அந்த ஸ்திரீ ஒரு ஆரோக்கியமான ஸ்திரீயாய் மருத்துவமனையிலிருந்து வந்தாள். அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார், இரட்சிப்பை பகிர்ந்தளிக்கவே! அவர் ஜீவிக்கிறார் என்பது எப்படி எனக்குத் தெரியும்? என நீங்கள் கேட்கிறீர்களா? அவர் என் இருதயத்திற்குள்ளாக ஜீவிக்கிறார். 255 அது உண்மை. அவர் அங்கே வந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு, நான் என் பாதத்தை முன் மண்டபத்தின் மேல் வைத்து, நான் எப்பொழுதும் புசிப்பது போன்று அருமையான ஆப்பிள் பை பலகாரத்தைப் புசித்தேன். ஏன்? அவர் ஜீவிக்கிறார். அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார். 256 இங்கேயுள்ள இந்த ஸ்திரீயானவள், அவள் க்ஷ்யரோகத்திலிருந்து எழும்பினவுடன், மருத்துவமனையிலுள்ளவர்கள் அவள் மரிக்கப் போகிறாள் என்று கூறினர். அவள் இங்கே நடந்து, பின்னர் அவள் மறுத்தாள். அவள் ஞானஸ்நானம் பெறுவதற்கு வருவது மதவெறியன்று கருதினாள். 257 ஓர் இரவு, அவளுடைய வீட்டில், அதிக காய்ச்சலோடு அங்கே உட்கார்ந்து கொண்டிருக்க, அவளுடைய வீட்டினூடாக அங்கிருந்து நேராக நான் பிரசங்கித்துக் கொண்டிருந்ததை அவளால் கேட்க முடிந்தது. நான் தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அவள் எழும்பி அவளுடைய பாதையில் தடுமாற்றமடைந்து சபைக்குள்ளாக நடந்து வந்தாள். அவள் சரியாக அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள், “நான் ஞானஸ்நானம் பெற வேண்டும்.” அவளுடைய தோளின் மேல் பெரிய கட்டி வீக்கமடைந்திருந்தது. இங்கேயுள்ள திருமதி. வெஃப்பர் (Weber) போய் அவளுக்கு ஒரு மேலங்கியை கொண்டு வந்து, அதை அவளுக்கு உடுத்தினாள். அவள் குளத்திற்குள் நூற்றிநான்கு பாகை ஜூரத்துடன் நடந்து வந்து, அங்கே அவள் தேவனிடத்தில் வாக்களித்தபடியே ஞானஸ்நானம் பெற்றாள். இன்றைக்கு…அது அநேக வருடங்களுக்கு முன்பாக இருந்தது. இன்றைக்கு அவள் ஜீவனோடு இந்தக் காலையில் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், ஏனென்றால் தேவன் ஜீவிக்கிறார், ஆளுகை செய்கிறார், அவர் மரித்தோரிலிருந்து எழுந்து விட்டார். 258 சில வாரங்களுக்கு முன்னர், அவளும், அவளுடைய மகளும் இங்கே லூயிவில்லுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் வீதிவழியாய் வந்து கொண்டிருந்தனர். அங்கே ஒரு ஏழையான வயோதிப பிச்சைக்கார ஸ்திரீ உட்கார்ந்திருந்தாள். அவள் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தாள். “அம்மாளே தயவு செய்து எனக்கு உதவி செய்யும். நான் தேவையுள்ளவளாக இருக்கிறேன்” என்றாள். அவள் தன்னுடைய ஜோபியைப் பார்த்தாள். அவளிடம் சரியாக போதுமான பணமாக பதினைந்து சென்ட்டுகளே இருந்தது. அந்த பாலத்தை அவர்கள் கடக்க அது போதுமானதாயிருந்தது என்று நான் நம்புகிறேன். 259 அவள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தாள். அவள் அந்த வீதிவழியாய் தொடர்ந்து நடக்கத் துவங்கினாள். கர்த்தர் அவளிடத்தில், “நீ உதவியற்றவளாய் இருந்தபொழுது நான் உனக்கு உதவி செய்தேன். அந்த ஸ்திரீ உதவியற்றவளாய் இருக்கிறாள், உனக்கோ அவளுக்கு உதவி செய்ய விருப்பமில்லை” என்றார். 260 அவள் இன்னும் கொஞ்சதூரம் நெடுக நடந்து சென்று, “கர்த்தாவே, என்னிடத்தில் பதினைந்து சென்டுகள் மட்டுமே உள்ளது. நானும் என் மகளும் எப்படி வீட்டை அடைவோம்? நாங்கள் அதை எப்படி செய்ய முடியும்?” என்றாள். அவர், “அதைக்குறித்து உனக்கு என்ன? நீ என்னைப் பின்பற்றி வா” என்றார். 261 அவள் அப்படியே திரும்பி, பின்னாகச் சென்றாள். அவள், “அம்மாளே என்னை மன்னிக்கவும்” என்றாள். “என்னிடத்தில் பதினைந்து சென்டுகள் மாத்திரமே இருக்கிறது. இந்தப் பாலத்தைக் கடக்க எனக்காகவும், என்னுடைய மகளுக்காகவும் நான் வைத்திருந்ததெல்லாம் அதுதான்” என்றாள். “நான் அதை உனக்கு கொடுக்கிறேன். என்னிடம் உள்ளதெல்லாம் அவ்வளவுதான். அதற்கு மேல் என்னிடத்தில் இல்லாதபடியால் நான் வருந்துகிறேன்” என்றாள். அவள், “என் மகளே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக” என்றாள். 262 அவள் அப்படியே திரும்பி நடக்கத் துவங்கினாள். அவளுடைய மகள், “இப்பொழுது, அம்மா நாம் இப்பொழுது என்ன செய்யப் போகிறோம்?” என்றாள். “போக்குவரத்து நடமாட்டம் அதிகமாயிருந்தபடியால், அந்தப் பாலத்தில் நடந்து செல்வது அபாயகரமாய் இருக்கும். இப்பொழுது நம்மால் அந்தப் பாலத்தை நடந்து கடக்க முடியாது” என்றாள். 263 அவள், “எனக்குத் தெரியாது, அதைப் போய் கொடுக்கும்படி அவர் எனக்குச் சொன்னார், என்னிடம் இருந்ததெல்லாம் அவ்வளவுதான்” என்றாள். 264 வீதிவழியாய் நடந்து போகையில் சரியாக அப்பொழுது அவள் கீழே நோக்கிப் பார்க்க நேர்ந்தது. அவளுடைய மகள், “ஓ அம்மா இங்கே பாருங்கள்! இங்கே ஒரு சிறு நாணயம் (Nickel) கிடக்கிறதே” என்றாள். அவள் நோக்கிப் பார்க்க நேர்ந்தது. அவள், “இங்கே பத்து பைசா நாணயம் (Dime) உள்ளதே” என்றாள். 265 அது என்னவாக இருக்கிறது? அந்தவிதமாகவே அவர் காரியங்களைச் செய்கிறார். அவர் இங்கே இருக்கிறார் என்பதையும் நாம் அறியும்படி செய்கிறார். 266 இங்கே கடந்த கோடை காலத்தின்போது, கூட்டங்களுக்காக நான் வெளியில் இருந்தேன். என்னுடைய மனைவி உள்ளே வந்து, “பில்லி எனக்கு ஒரு காசோலை வேண்டும். சில பலசரக்கு சாமான்களைப் போய் வாங்கியாக வேண்டும்” என்றாள். 267 யாரோ வயோதிக ஏழைப் பிரசங்கியார் இங்கே வந்து, “சகோ.பிரான்ஹாம் என்னிடத்தில் பணம் ஏதும் இல்லை” என்றார். மேலும், “நான்—நான் மனம் உடைந்து போயிருக்கிறேன். நான் டெக்ஸாஸுக்குப் (Texas) போயாக வேண்டும்” என்றார். “என்னால் முடியும்போது என்றாவது ஒருநாள் அதை நான் திருப்பி செலுத்துவேன்” என்றார். “நீர் எனக்கு உதவி செய்வீரா? எனக்கு உதவி செய்வீரா?” என்றார். “எனக்கு ஐம்பது டாலர்கள் தேவைப்படுகிறது” என்றார். 268 நான் வங்கிக்குச் சென்று அதில் பணம் உள்ளதா என்று பார்த்தேன். நல்லது அங்கே சரியாக ஏறக்குறைய நூறு டாலர்கள்தான் என் வசம் இருந்தது. எனவே நான் போய் அதில் ஐம்பது டாலர்களை எடுத்து அவருக்கு கொடுத்து விட்டேன். அவர் அதை எடுத்துக் கொண்டு போய்விட்டார். 269 வெளி வருகின்ற சிறிய காரியங்கள், அது எப்படி இருக்கின்றதென்பதை நீங்கள் அறிவீர்கள். மனைவியோ, “பில்லி, எனக்கு இன்று காலையில் சுமார் இருபது டாலர்களுக்கு ஒரு காசோலை அவசியம் வேண்டும். போய் பலசரக்கு சாமான்கள் வாங்கி வரவேண்டும்” என்றாள். நாங்கள் போய் சாமான்களை வாங்கிக்கொண்டு வந்தோம். திரும்பியும் வந்து விட்டோம். அவள் முட்டைகளை வாங்க மறந்துவிட்டாள். நாங்கள் முட்டைகளையே வாங்கிக் கொள்ளவில்லை. எனவே நான், “ஓ, என்னே இருக்கட்டுமே” என்று எண்ணி, “ஒருக்கால் யாராவது ஏதாவது காரியம் செய்வார்கள்” என்று எண்ணிக் கொண்டேன். 270 எனவே நான் சென்று, நான் ஒருவிதமாக…திரு. மே (May) அவர்களுக்கு உதவி செய்துகொண்டிருந்தேன். ஆயினும் வீட்டில் யாரும் இல்லை, நான் அங்கிருந்த கொஞ்சம் குப்பைகளை அள்ளி கொட்டிக் கொண்டிருந்தேன். நான் நோக்கிப் பார்க்க நேர்ந்தது. ஒரு பழைய கார் உள்ளே வருவதையும், ஓரமாகப் போய் நின்றதையும் நான் கண்டேன். ஒருவிதமாய் முடமாக இருந்த ஒரு வயோதிப பிரசங்கியார் அங்கே அதைவிட்டு இறங்கி, நடந்து வந்து முன் மண்டபத்தில் உட்கார்ந்து, பின்பக்கமாக சாய்ந்து கொண்டார். நான், “அந்த ஏழையான, வயோதிப நிலை குலைந்த பிரசங்கியாரை, நான்—நான் அவரைப் பார்க்க வேண்டும்” என்று எண்ணினேன். நான் அங்கே சென்றேன். நான் “காலை வனக்கம்” என்றேன். 271 அவர், “சங்கை பிரான்ஹாமே, நீர் எப்படி இருக்கிறீர்?” என்றார். “உமக்கு என்னைத் தெரியும் என்று நான் யூகிக்கவில்லை” என்றார். அவர் யாரென்பதை அவர் எனக்கு கூறினார். “நான் ஏழை பிரசங்கிமார்களில் ஒருவன்” என்றார். அவர், “நான் கிளீவ்லேண்டில் (Cleveland) இருந்தேன். அவர்கள் இங்கே வரும் அளவிற்கு போதுமான அளவு பெட்ரோலை எனக்குக் கொடுத்தார்கள்” என்றார். “என்னுடைய பழைய கார் அங்கே ஏறக்குறைய காய்ந்தே போயிற்று” என்றார். “ஏதோ ஒன்று என்னிடத்தில் இங்கே வரும்படி கூறிற்று” என்றார். “ஒருவேளை நீர் எனக்கு ஒரு சிறு உதவி செய்யலாம்” என்றார். 272 நான் அவரை நோக்கிப் பார்த்தேன். நான், “என்னே, ஊ” என்று நினைத்துக் கொண்டேன். உங்களுக்குத் தெரியும். நான், “பாவம் வயதான நபர்” என்று எண்ணினேன். நான், “நாம் ஜெபம் செய்வோம்” என்றேன். அவர், “நீர் ஜெபிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். என்னுடைய இடுப்பில் பாதிப்பு இருக்கிறது” என்றார். நான், “சரி” என்றேன். நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபிக்கத் துவங்கினோம். 273 நான் ஜெபிக்கத் துவங்குகையில், கர்த்தர், “அவருக்கு ஐந்து டாலர்களைக் கொடு” என்றார். 274 நான், “நல்லது, கர்த்தாவே, நிச்சயமாகவே அதைக் குறித்து எல்லாவற்றையும் நீர் அறிவீர், அது அங்கே இருக்கிறதா அல்லது இல்லையா என்று உமக்குத் தெரியும்” என்றேன். நான், “உமக்கு ஐந்து டாலர்கள் கொடுக்கும்படி கர்த்தர் என்னிடம் கூறினார்” என்றேன். “சகோதரன் பிரான்ஹாம் அது மிகவும் அதிகம்” என்றார். 275 நான், “ஆனால் அவரோ ஐந்து டாலர்களை உமக்குக் கொடுக்கச் சொன்னார்” என்றேன். நான் ஒரு காசோலையை எழுதினேன். நான், “இதை ஸ்ட்ரோத்தர்ஸ் (Strother’s) வங்கிக்கு கொண்டு செல்லுங்கள், அவர்கள் அதற்கு பணம் கொடுப்பார்கள்” என்றேன். நான், “இப்பொழுது என்ன?” என்று நினைத்தேன். வெளியே போய்விட்டார். அவர் வண்டியை ஓட்டிக்கொண்டு, கொஞ்சதூரம் போயிருப்பார். 276 அங்குள்ள வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு மனிதன் திரு. லூத்தர் அவர்களோடு வந்திருந்தான். அவன், “பிரசங்கியாரே” என்றான். நான், “ஆம்” என்றேன். 277 அவர், “உங்களுக்குத் தெரியும்,” “என் வீட்டிலே நூறு பெட்டைக்கோழிகள் இருக்கின்றன” என்றார். மேலும், “அவைகள் வயதான பெட்டைக் கொழிகள்” என்றார். “எல்லாவிதமான முதல் தரம் வாய்ந்த உணவுகளையும், மற்றெல்லாக் காரியங்களையும், தீவனங்களையும் கொடுத்து விட்டேன். அவைகளை முட்டையிட வைக்க முடியவில்லை” என்றார். அவர், “சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர், நான் கீழே உட்கார்ந்து, நான், ‘கர்த்தாவே நீர் இந்த பெட்டைக் கோழிகளை முட்டையிடும்படி செய்வீரானால், நான் அவைகளில் பாதி முட்டைகளை கொடுத்துவிடுவேன் என்று கூறினேன்’” என்றார். “உமக்குத் தெரியுமா, அவைகள் முட்டையிடத் துவங்கிவிட்டன” என்றார். “அடுத்த நாள் எனக்கு தொண்ணூறு முட்டைகள் கிடைத்தன” என்றார். அவர், “நான்—நான் இங்கே ஒரு பெட்டி நிறைய முட்டைகளைக் கொண்டு வந்துள்ளேன், நான் அதை உமக்கு கொடுக்க விரும்புகிறேன்” என்றார். சரியாக ஐந்து டாலர்கள். 278 அது என்னவாக இருக்கிறது? சரியாக அந்தவிதமாகவே அவர் காரியங்களைச் செய்கிறார். நான் இந்த காலையில் கூற முயற்சித்துக் கொண்டிருப்பது என்ன? இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார், அரசாளுகிறார் என்று இதைத் தான் நான் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறார். அவர் அப்பத்தைப் பிட்டார். அவர்களுடைய கண்களை திறந்தார். அவர் எதையுமே அவர் செய்த விதத்திலேயே செய்தபோது, அது அவரே என்பதை அவர்கள் அடையாளங்கண்டு கொண்டனர். நீங்கள் முழுமையாய் கவனித்தால், அந்தவிதமாகவே சரியாக அவர் காரியங்களை செய்கிறதை நீங்கள் கண்டறிவீர்கள், அவர் இன்னமும் ஜீவிக்கிறார், அரசாளுகிறார். அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார், இரட்சிப்பை பகிர்ந்தளிக்கவே! அவர் ஜீவிக்கிறார் என்று எப்படி எனக்குத் தெரியும் என்று நீங்கள் கேட்கிறீர்களா? அவர் என்னுடைய இருதயத்திற்குள் ஜீவிக்கிறார். 279 அவருடைய செய்தி, “போய் என்னுடைய சீஷர்களிடத்தில் நான் அவர்களை கலிலேயாவில் சந்திப்பேன் என்று சொல்லுங்கள்” என்பதேயாகும். 280 இன்றைக்கு அவருடைய செய்தி, அவர் உன்னை சந்திப்பார் என்பதேயாகும். “நான் உங்களை சந்திப்பேன்.” நீங்கள் அவரை எங்கும் சந்திப்பீர்கள். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்;” 281 ஆனால், நண்பர்களே, கரையின் மேலிருந்த இந்த மனிதர், “உங்களுடைய வலையைப் போடுங்கள்” என்று கூறுகின்றதை அவர்கள் கேட்டபொழுது, அந்த ஜனங்கள் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் அதை அறியவில்லை. எம்மாவுக்கு சென்ற இந்த மனிதர்கள், அவர்கள் அவரோடு நடந்து கொண்டும், பேசிக்கொண்டும் போகையில், அவர்கள் அதை அறியாதிருந்தார்கள். 282 என் நண்பர்களே, நாம் அடையாளங்கண்டு கொள்ளாத காரணத்தால், நம்மில் அநேகர் கிறிஸ்துவுக்குள்ளான பரம அழைப்பின் இலக்கை தவறவிட்டிருக்கிறோம். அநேக சமயங்களில், நியாயசனத்தண்டையிலே, அதாவது இயேசு கிறிஸ்துவின் மார்க்கம், அது இரட்சிப்பையும், சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறதை நீங்கள் உணரும்பொழுது, ஒரு ஏமாற்றம் உண்டாயிருக்கும். பவுல், “அது மதபேதம் என்று சொல்லுகின்ற மார்க்கத்தின்படியே” என்று பண்டைய நாட்களில் கூறினது போன்று, அது அழைக்கப்படுகின்றது என்றான். மார்க்க பேதம் என்பது “பயித்தியமாயிருக்கிறது” என்பதை நீங்கள் அறிவீர்கள். “மார்க்கபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே, எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு நான் ஆராதனை செய்தது போல, இவர்கள் மார்க்க பேதம் என்று சொல்லுகிறபடியே” என்றான். 283 அநேக சமயங்களில் சந்தோஷமாயும், களிகூர்ந்து கொண்டும் தேவனுடைய ஆவியினால் நிறைந்தவர்களாயும் உள்ள ஜனங்களை நீங்கள் காணும்பொழுது, அங்கே தெய்வீக சுகமும், வல்லமைகளும், அதிசயங்களும், அற்புதங்களும் நடைபெறுகின்றன. அவர்கள், “அதை தன் வசப்படுத்தும் ஒரு வசீகர சாஸ்திரம்” என்கிறார்கள். அவர்கள், “அது இதுதான், அதுதான் அல்லது மற்றதுதான்” என்கிறார்கள். ஆனால் நீங்கள் வேதத்தை மட்டுமே எடுத்து வாசிப்பீர்களானால், அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாக இருக்கிறது. நீங்கள் அவரை சரியாக அடையாளங் கண்டு கொள்வதில்லை. அது யார் என்பதை நீங்கள் சரியாக அடையாளங் கண்டுகொள்வதில்லை. 284 இந்த நாள் முடிந்து போவதற்கு முன்னர், இந்த நாள் முடிந்து போவதற்கு முன்னர், அவர் ஏதாவது காரியத்தை உங்கள் ஜீவியத்தில் செய்தால், நீங்கள் அவரை அடையாளங் கண்டு கொண்டு, ஏற்கனவே உயிர்த்தெழுதல் இல்லையென்றால், அது உங்கள் இருதயத்தில் துளிர்க்கும் என்று நான் நம்புகிறேன். ஒருக்கால்…நீங்கள் பறவைகள் வித்தியாசமாய் பாடுவதை கவனிப்பீர்கள். அருமையான உயிர்த்தெழுந்த இயேசு, இக்காலையில் மரித்தோரிலிருந்து எழுந்தார். ஆகையினால் மரணத்தின் எல்லா பயங்களும் நீங்கிப் போயிற்று. அல்லேலூயா! அவைகள் மறதிக் கடலிலேயே முத்திரிக்கப்பட்டாயிற்று. 285 பண்டைய பரிசுத்த பவுல் பாதையின் முடிவுக்கு வந்தபொழுது, அவனுடைய கால்களும், கைகளும் சங்கிலிகளினால் சுற்றி கட்டப்பட்டு, அவன் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கையில், அவர்கள் இருபிளவான துளை மரச்சட்டத்தை அங்கே ஆயத்தப்படுத்திக் கொண்டு, அவர்கள் அவனுடைய தலையை துண்டித்துப் போடுவதாக இருந்தனர். அவர்கள், “பவுலை, அதைக் குறித்து இப்பொழுது நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டனர். 286 அவன், “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்” என்றான். 287 அவர்கள் அங்கே அந்த மேடையின் மேலிருந்த அவனிடம் சென்று, அவனுடைய கழுத்துப் பட்டையை இழுத்து, அவனுடைய தலையை அங்கே வைத்தபோது, மரணம் அவனை நேராக, அவனுடைய முகத்திலே உற்றுநோக்கி முறைத்துப் பார்த்தது. அவன், “இப்பொழுது நான் உன்னைப் பற்றிக் கொண்டேன். இப்பொழுது நீ பயந்து போயிருக்கிறாய்” என்றது. அவன், “ஓ, மரணமே! உன் கூர் எங்கே?” என்றான். 288 அங்கே வெளியே நோக்கிப் பார்த்தான். அவனை கல்லறையில் போடும்படியாக அவர்கள் பள்ளத்தை தோண்டிக் கொண்டிருக்கிறதை அவன் கண்டான். அந்த பழைய சேறான கல்லறைக்குழி, “நான் உன்னை பிடித்துக் கொண்டேன். நான் உன்னை முற்றிலும் வார்ப்பிப்பேன். நான் உன்னுடைய சரீரத்தை அழுகிப்போகச் செய்வேன். உனக்கு வெளியிலும், உள்ளேயும் தோல்புழுக்கள் ஊர்ந்து செல்லும்” என்றது. அவனோ, “பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” என்றான். 289 ஆனால் அவன் தன்னுடைய தலையை எருசலேமின் பக்கமாக திருப்பி, ஓ, என்னே “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்றான். ஓ, என்னே! 290 நான் பாதையின் முடிவுக்கு வந்தாக வேண்டும். இந்நாட்களில் ஒன்றில் என்னுடைய பிரயாசங்கள் முடிந்து விடும். இங்கே உட்கார்ந்திருக்கிற பையன்களாகிய உங்களில் சிலர், நாம் ஒன்றுசேர்ந்து விளையாடினோம். ஒன்றாக குத்துச்சண்டையிட்டோம், ஒன்றாக சேர்ந்து கோலி விளையாடினோம், மற்றும் நாம் சிறுபையன்களாய் இருந்தோம். ஆனால் இப்பொழுதோ நான் கவனிக்கத் துவங்குகிறேன்…நாளைக்கு என்னுடைய பிறந்தநாள். நாளைக்கு நான் நாற்பத்தி நான்கு வயதுடையவனாய் இருப்பேன். என்னுடைய தோள்கள் தொங்கவும், என்னுடைய கண்களுக்குக் கீழே சுருக்கங்களும் விழத் துவங்குகின்றன. எனக்கு விடப்பட்டிருக்கிற தலைமுடியோ நரையாக மாறிக் கொண்டிருக்கிறது. அது என்ன? மரணம் உள்ளே நியமிக்கப்பட்டிருக்கிறது; அது என்னை அழைத்துக் கொண்டே போகிறது. 291 ஆனால், சகோதரனே, மரணம் ஒரு பக்கமாக அழைத்துக் கொண்டே இருக்கும்போது, இன்னொரு பக்கத்தில் ஜீவனானது மறுபடியாய், புதியதாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. அது உண்மை. இந்நாட்களில் ஒன்றில் நீங்கள் எல்லோரும் கல்லறை மைதானத்தில், எங்கே அவர்கள் அதை ஒழுங்கு செய்திருக்கிறவர்களோ, அங்கே எழும்பி நிற்பீர்கள். இயேசுவானவர், வருவதற்கு முன்னால் நான் மரிப்பேனானால், “நம்பிடுவாய், யாவும் கைகூடிடும், நம்பிடுவாய்” என்று அவர்கள் பாடப்போகிறார்கள். 292 “அவர் போய்விட்டார்” என்று அவர்கள் கூற நீங்கள் கேட்கும்பொழுது, அப்பொழுது நீங்கள் பூமியின் தூளை பெட்டியின் மீது தூவுங்கள். நான் போய்விடவில்லை, ஆயினும் நான் ஜீவிக்கிறேன், ஏனென்றால் அவர் ஜீவிக்கிறார். இல்லை. 293 இந்த மகிமையான வசந்தகால காலைகள் ஒன்றில், யாவும் முடிவுறும்போது, அணுகுண்டுகள் இந்த உலகத்தை வெடிக்கச் செய்து, அவளை அக்கரைக்கு அனுப்பும், அவள் சுழன்றுகொண்டே அநேக வருடங்களினூடாக சுத்திகரிக்கப்பட்டு, திரும்ப கொண்டுவரப்படும்; பனை மரங்கள் மீண்டுமாய் பூமியின் மேல் எழும்பும். தேவன் ஆதியிலே செய்தது போன்று எல்லா இயற்கைக்கும் ஒரு உயிர்த்தெழுதல் இருக்கும். அங்கே மண்ணின்மேல் எந்த மாசும் இருக்காது. ஆகாயத்தில் எவ்வித மாசும் இருக்காது. பனைமரங்கள், அவைகளை மீண்டும் சீர்குலைக்க கிருமிகளோ, அல்லது வியாதிகளோ இருக்காது. ஆப்பிள் மரங்கள் பழையதாகிப் போகாது. அல்லேலூயா! அவள் எழும்புவாள்…என்றோ மகிமையான, அழகான காலையில் பெரிய பறவைகள் மரத்திலிருந்து மரத்திற்கு பறந்து கொண்டிருக்கும்போது இயேசுவானவர் மீண்டுமாய் இங்கே உலகத்தில் தோன்றுவார். அவர் தோன்றும்பொழுது, “கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை தேவன் அவரோடு கொண்டு வருவார்.” 294 ஒரு ஈஸ்டர் காலையன்று நம்முடைய அன்பார்ந்தவர்களை சந்தித்து அவர்களை வாழ்த்த நாமும் கூட எழும்பி வருவோம். அது ஒரு அற்புதமான நேரமாய் இருக்குமல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றார்கள்.—ஆசி.] 295 அக்கரையில் நான் நின்று…கட்டிடத்தின் பின்னாலே, அங்கே பின்னாக இக்காலையில், வயதாகிக் கொண்டும், நடுங்கிக் கொண்டும், முழுவதும் முடக்குவாதமுடைய என்னுடைய வயதான தாயாரைப் பார்க்கிறேன். அவள் வயோதிபமாகத் துவங்கிவிட்டாள், “அம்மா, இது உம்முடைய பையன்” என்று கூறுவேன். என்னுடைய அன்பார்ந்தவர்களை, அதாவது இங்கே சபையிலே இருக்கிற என்னுடைய நண்பர்களை, வயதான சகோதரன் ஜார்ஜ் டீ ஆர்க், கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகச் சென்ற யாவரையும் நான் அங்கே காண கடந்து செல்வேன். என்னுடைய அருமையான எல்லா நண்பர்களையும், அவர்கள் உயிர்த்தெழும்புகிறபோது, என்னால் அவர்களை சந்திக்க முடியும். 296 பின்னர் அங்கே சென்று, “அங்கே வந்து கொண்டிருக்கிற அந்த நபர் யார்?” என்று கூறுவேன். 297 “அதுதான் பவுல். இதோ வருகிறார் சீலா. இதோ தானியேல் இருக்கிறார். இதோ, இங்கே இருக்கிறார். இங்கே அவர்களில் மற்ற யாவரும் இங்கே இருக்கிறார்கள்.” நாம் இந்த தேவனுடைய பரதீசினூடாக நடந்து செல்ல முடியும். 298 நண்பனே, என்றோ ஒரு காலையில் ஒரு உண்மையான உயிர்த்தெழுதல் உண்டாகும். நாங்கள் உங்களை சந்திப்போம். 299 இந்தவிதமாய் மரித்துப்போன அந்த குழந்தை, அவள் ஒரு வாலிபமான சீமாட்டியாய் இருப்பாள். அவள் தன்னுடைய கரங்களை அவளுடைய தாயின்மீது போட்டு, அங்கே அழுதுகொண்டும், சத்தமிட்டுக் கொண்டும், அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் மகிமையான உயிர்த்தெழுதலுக்காக தேவனை ஸ்தோத்தரித்துக் கொண்டும் இருப்பாள். அது என்றோ ஒரு மகிமையின் நாளின்போது உண்டாகும். 300 ஒரு உயிர்த்தெழுதல் இருக்கின்றதென்று சாட்சி கொடுக்கின்ற நம்முடைய இரட்சிப்பின் அச்சாரமாகிய பரிசுத்த ஆவியை நாம் இங்கே உடையவர்களாயிருக்கிற காரணத்தினால் இப்பொழுது நாம் ஜீவிக்கிறோம். அது எப்படி உள்ளது? 301 ஒரு சமயத்தில் நான் ஒரு பாவியாய் இருந்தேன். ஒரு சமயத்தில் நான் இந்த பிரசங்க பீடத்தின் பின்னே நின்றதே கிடையாது. ஒரு சமயத்தில் நான் என் சத்தத்தை எழுப்பி, “ஆமென்” என்று கூற நீங்கள் கேட்டிருக்கவேமாட்டீர்கள். நான் அதைச் செய்ய வெட்கப்பட்டேன். ஒரு சொட்டு கண்ணீர் கூட என் கண்களில் எனக்கு உண்டாயிருந்திராத ஒரு நேரம் உண்டாயிருந்திருக்கும். அதைச் செய்ய வெட்கப்பட்டிருந்தேன். நான், “பெரிய மோசமான பில்லாக” இருந்தேன். 302 ஆனால், ஒருநாள் இயேசு கிறிஸ்து அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையில் என்னை சந்தித்தார் அவர் அந்த கல்லான இருதயத்தை நொறுக்கிப் போட்டு, அதை என்னிலிருந்து எடுத்துப் போட்டார். அவர் ஒரு புதிய சிந்தையை வைத்தார். அவர் ஒரு புதிய நபரை இங்கே உள்ளே வைத்தார். இன்றைக்கு அவர் ஜீவிக்கின்ற காரணத்தால், நானும் கூட ஜீவிக்கிறேன். 303 நண்பர்களே, இந்நாட்களில் ஒன்றில் உங்களையும், நம்முடைய மற்றவர்களையும் போல, நான் என் பாதையின் முடிவிற்கு வரும்போது, யுத்தத்திலிருந்து நம்முடைய ஆயுதங்கள் மிகவும் அடிக்கப்பட்டதாயிருக்குமே! ஓ, என்னே! அந்த பழைய கேடகத்தைப் பாருங்கள். என் மேல் பாய்ந்த எத்தனை கொடூர ஆயுதங்களை அது தடுத்திருக்கிறது என்று பாருங்கள். நான் அங்கே கீழே விழுந்து கிடந்தேன், அலைகள் என் ஆத்துமாவின் பேரில் வருகின்றதை நான் உணருகிறேன். நான் என் பாதையின் முடிவிற்கு வந்துவிட்டேன் என்பதை அப்பொழுது அறிந்து கொள்வேன். அங்குள்ள என்னுடைய தாயாரைப் போன்று, எல்லா பிரான்ஹாம்களையும் போன்று, அவர்கள் உண்மையாகவே முதிர் வயதை அடையும்போது அவர்கள் முடக்குவாதத்தினால் நடுங்கத் துவங்குகின்றனர். 304 பாதையின் முடிவில், அல்லேலூயா! அந்த கம்பத்தின் மேல் சாய்ந்து கொண்டு, நான் அங்கே நிற்க விரும்புகிறேன். என்னுடைய தலைசீராவை எடுத்து, அதை கடற்கரை ஓரத்தில் கீழே வைத்து, அங்கே கரையின் மேல் முழங்காற்படியிட்டு, அந்த பழைய பட்டயத்தை நித்தியத்தின் உறையிலே திருப்பிப்போட்டு, என்னுடைய கரங்களை உயர்த்தி சத்தமிட நான் விரும்புகிறேன். எனக்குத் தெரியும். நான் மரண இருளின் பள்ளத்தாக்கினூடாக நடந்து போகையில் அந்த வழி வெளிச்சமாயிருக்க விடிவெள்ளி நட்சத்திரம் தோன்றும். பரிசுத்த ஆவியானவர் அவருடைய பிரகாசமான செட்டைகளை அந்தப் பயங்கரமான யோர்தானின் சேற்றினூடாக விரித்து, நம்முடைய விடாய்த்துப் போன ஆத்துமாக்களை சுமந்துகொண்டு ஒரு மேலான தேசத்திற்கு கொண்டு போவார். ஆம் ஐயா. 305 நீங்கள் பயப்படாதீர்கள், “நான் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்.” “மரணமானது ஜெயமாக விழுங்கப்பட்டது.” “மரணத்தினால் ஒன்றுமே செய்ய முடியாது.” ஒரு எழுத்தாளன், “தேவன் மரணத்திற்கு செய்த ஒரே காரியம், அவர் அதை ஒரு குதிரை வண்டியில் வைத்து அதற்கு சேணங்கட்டி அதை குதிரை வண்டியின் தண்டுகளில் பொருத்தினார். மரணம் செய்யக் கூடிய ஒரே காரியம், ஒரு விசுவாசியை, அவனை உண்டாக்கினவருடைய சமூகத்திற்குள் இழக்கிறதாகவே இருக்கிறது” என்றான். அந்த ஒரு காரியத்தைத்தான் மரணம் செய்ய முடியும். இந்நாட்கள் ஒன்றில் இந்த அழிவுள்ள பாகத்தை மரணம் அரைக்கும். 306 ஆனால் நான் வெறுமனே ஒரு சிறு குழந்தையாய் இருந்தபோது, ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஜீவன் நான் பிறந்தபொழுது எனக்கு ஜீவனைக் கொடுக்கும்படியாக என் தாயினண்டை காத்துக் கொண்டிருந்தது. “எனவே இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்துபோனாலும் அக்கரையிலே, ஏற்கனவே ஒன்று மகிமையில் காத்துக் கொண்டிருக்கிறது.” அக்கரையிலே ஆயத்தம் பண்ணப்பட்டு இருக்கிறது. அங்கே வியாதியுமில்லை, துன்பங்களுமில்லை. இங்கே நான் ஆவியினாலே பிறப்பிக்கப்பட்டிருக்கிறதுபோல தேவனுடைய ஆவியானவரை, “அப்பா, பிதாவே” என்று கூப்பிடுகிறதுபோல, என்னை மட்டுமல்ல, உலகத்திலிருக்கிற ஒவ்வொரு நபரையும், அதாவது மறுபடியும் பிறந்தவர்களையும் கூப்பிடச் செய்கிறது. இந்த ஆவிக்குரிய சரீரத்திலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலே நாம் வளர்ந்து கொண்டிருக்கையில் அப்படிச் செய்கிறது. என்றோ ஒருநாள் நாம் அக்கரையின் எல்லையைத் தாண்டுவோம். நாம் அந்த புதிய சரீரத்திற்குள்ளாக இருப்போம், அங்கே எந்த நரைமுடியும், தொங்கின தோள் பட்டைகளும் அல்லது அதைப்போன்று எந்த காரியமும் ஒருபோதும் இருக்காது. அங்கே நாம் என்றென்றைக்கும் வாலிபமாக இருப்போம். ஏனென்றால் இயேசு கிறிஸ்து மூன்றாம் நாளன்று உயிரோடு எழுந்தார். அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்னர்…அவருடைய மரணத்திற்குப் பின்னர் மீண்டுமாய் உயிர்த்தெழுந்தார். 307 அவர் ஜீவிக்கிறார், அவர் ஆளுகை செய்கிறார். இப்பொழுது போய் என்னுடைய சீஷர்களிடத்தில் சொல்லுங்கள். “போய் அவருடைய ஜனங்களிடத்தில் அவர், ‘நான் உங்களை கலிலேயாவில் சந்திப்பேன்’ என்று கூறினார்” என்று கூறுங்கள். இந்நாட்கள் ஒன்றில் தேவனுடைய கலிலேயாவில் எங்கோ அக்கரையில், நான் அவரை சமாதானத்தில் சந்திக்கும்படி எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் அவர் இன்றைக்கு என்னுடைய இருதயத்தில் ஜீவிக்கிறார். உங்கள் ஒவ்வொருவரோடும் அவர் அதே விதமாகவே இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். நாம்… 308 நாம் இங்கே அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொண்டபடியால் நான் வருந்துகிறேன். அப்படியே ஏறக்குறைய ஞாயிறுபள்ளி ஆராதனை துவங்குகிற வரையிலுமிருந்த இரண்டு மணி நேரங்களை எடுத்துக் கொண்டேன். நம்முடைய தலைகளை நாம் தாழ்த்துவோமாக. 309 ஓ, இரக்கமுள்ள தேவனே, வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் காரணரே, ஒவ்வொரு நல்ல வரத்தையும் கொடுப்பவரே, இந்த காலையில் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். சற்று ஏறக்குறைய ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் காலையில் இந்த மகத்தான சம்பவம் நடந்தேறியது. அதற்கு முன்னதாக மனிதர்கள் மரணத்திற்கு பயந்து கொண்டு இருந்தனர். ஆனால், அவர் வந்தபிறகு, அதன் பின்னர் அவர் எல்லா மரணபயத்தையும் தூர நீக்கிப் போட்டார். 310 இன்றைக்கு அவர் எங்களுடைய இருதயங்களில் ஜீவிக்கிறார், ஆளுகை செய்கிறார். அவர் மரித்தோரிலிருந்து எழுந்த பின்னர், அவர், “நான் உங்களோடு இருப்பேன், உலகத்தின் முடிவு பரியந்தம் இருப்பேன்” என்று அவரே கூறினார். அந்த சம்பவத்திற்குப் பின்னர், ஆயிரத்து தொள்ளாயிரத்திற்கும் சற்று அதிகமான ஆண்டுகள் கடந்திருந்திருக்கின்றன. ஆனால் இந்த காலையில் அவர் புத்தம் புதிதாய் எங்களுடைய இருதயங்களில் ஜீவிக்கிறார். 311 நாங்கள் இங்கே இந்த காலையில் கர்த்தாவே, அவரை ஆராதிக்கவும், அவருடைய வார்த்தையை போதிக்கவும், அவருடைய ஆவியை உணரவும், ஒருவரோடொருவர் கரங்களை குலுக்கவும், ஒருவருக்கொருவர், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூறவும் ஒன்றுகூடி வந்திருக்கிறோம், ஏனென்றால் அவர் மரித்து உயிரோடு எழுந்தார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். 312 கர்த்தாவே, தேவனுடைய கிருபையால், எங்களுடைய சரீரப்பிரகாரமான ஜீவியங்களில், அழியாத ஜீவன் ஆளுகை செய்கிறதையும், இந்தக் காலையில் அது எங்களுக்குள்ளாக இருக்கிறதையும் நாங்கள் விசுவாசிக்கிறோம். உள்ளாக மரிக்க முடியாத தேவனுடைய ஆவியானது இருக்கிறதென்றும், அது ஒருபோதும் மரியாது என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர்…அவர், “நான் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பேன். அவர்கள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை. கடைசி நாளில் நான் அவர்களை எழுப்புவேன்” என்றார். கர்த்தாவே நாங்கள் அவருடைய உயிர்த்தெழுதலின் சாட்சிகளாய் இருக்கிறபடியால், கர்த்தாவே, நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். 313 இப்பொழுதும் பிதாவே, நாள் முழுவதுமாக எங்களை ஆசீர்வதியும். எங்களுடைய வாசலில் இருக்கும் அன்னியர்களையும் ஆசீர்வதியும். இன்றைய நாள் ஒரு சந்தோஷமான நாளாய் இருப்பதாக. 314 கர்த்தாவே, இதுவரை மறுபடியும் பிறவாதவர்களாய், புதிய ஜீவியத்தில், உயிர்த்தெழுந்த ஜீவனில் இயேசுவோடு ஜீவித்துக்கொண்டிருக்கும் அனுபவத்தை அறியாதவர்களாய் பழைய கட்டுகளும், உலகத்தின் காரியங்களின் வாஞ்சைகள் யாவும் தூர நீக்கப்படாமல், கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாய் இருப்பது என்ன என்பதை அறியாதவர்களாய் இருக்கின்ற யாராவது இந்த காலையில் இங்கே இருப்பார்களாயின், ஓ, பரிசுத்த ஆவியானவரே இன்றைக்கு அவர்கள்மேல் அசைவாடும். அவர்களுடைய ஜீவன்களுக்குள் அழிவில்லாத ஜீவனை ஊதுவீராக. பரலோகத்தின் சந்தோஷமணிகள் இந்த ஈஸ்டரில் ஒலிக்கப்பட்டு, இன்றைக்கு ஒரு நற்செய்தியைக் கொண்டு வருவதாக. உமக்குள்ளாக ஒரு புதிய சிருஷ்டிகளாய் இருக்கும்படியாக அவர்கள் இங்கிருந்து செல்வார்களாக. 315 கர்த்தாவே, நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஆசீர்வாதங்களை வேண்டிக் கொள்கிறபடியால், உம்முடைய ஊழியக்காரனின் ஜெபத்தைக் கேளும். ஆமென். சரி, நாம் எழுந்து நிற்போமாக. சரி, சகோதரன் நெவில்.